வியாழன், டிசம்பர் 15, 2011

கள்ளப் பொழுதுகள்

அயர்ன் பெட்டி திறந்திருக்கா?
அடுப்பு மூடியிருக்கா?
விளக்கு எரியுதா?
வீடு பூட்டியாச்சா?
கார் கதவு திறந்தேயிருக்குமோ!?
உடையின் பட்டன்/ஸிப் சரியா இருக்கா?
தலை கலைந்திருக்கா?
பொட்டு இருக்கா?
தாலி போட்டாச்சா?

இப்படிச் சரி பார்க்கும்
பொழுதுகளில்..
முந்தைய இரவின் நாயகனாய்
நீ தான் இருந்திருப்பாய்
இன்றைய தினத்தையும்
முழுமையாக களவாடிக்கொண்டு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக