திங்கள், ஜனவரி 30, 2012

ஓய்வுப்பொழுதுகளில் உன் நினைவுகளில்


ஆன்மா
மற்றவர்களைப் பற்றி
எழுத நினைக்காதபோது,
எழுதுகோல்
உன் ஆன்மாவை நோக்கிப்பாய்கிறது
குருதியாய் சில கவிதைகள் 

வாழ்வு
எத்தனையோ
விசில்களில்
இன்னும் வேகாத
இறைச்சிகளாய்..

சைவம்
சாப்பிடும் போது
சதையையும் கொஞ்சம் 
கடித்துக்கொள்கிறேன்
வலிக்கிறது தான்.!
அதுதான்
எதையெதையோ
கவிதை என்கிறோம்
நாமே அதுவாக
இருந்துக்கொண்டு.

இலக்கியம்
யார் யாரோ 
வந்துப் போகிறார்கள்
அதே பாணியில்
மற்றொருவர் வரும் போது 

ஓய்வுப் பொழுதுகளில்
எல்லாம் வடித்து
விட்டேன்
உணவாய் காத்திருக்கும்
ஓய்வுப் பொழுதுகளில் 
சில நொடி உறக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக