திங்கள், ஜனவரி 30, 2012

நிவாரணம் சாபம்

 வலியால் உதிக்கின்ற
வார்த்தைகள் யாவுமே..
வலியால் உணரப்பட
எழுதுகிறேன் ஒரு
நிவாரண சாசனம்...

நீ வரைந்த
சொற்கள் யாவுமே
நிரந்தரமாய்
தனிமையின் நிழல் வட்டமாய்
பிரபஞ்சத்தில் என்னோடு
இன்றும் என்றுமே..
நீ,
ஜீவித்திருந்த பொழுதுகளில்..
கோர்த்து வந்த வார்த்தைகளும்
மௌன மொழியைத் தானே
உளறித் தொலைத்தன...!

சேகரித்து வைத்த சொல்
சொந்தமாய் பேசட்டும்
ஜீவனற்ற என் இதயம்
இரண்டாய்ப் பிளக்கட்டும்
பரவாயில்லை..

உன்னுடனேயான எனது தனிமை
பறிக்கப்பட்ட பொழுதுகளில்
ஜீவனற்று நான் உணரும்
இந்த நொடி
மரண வலி
உனக்கும் வரட்டும்
பிடி சாபம்..!!

(அதீதம் காதல் இதழில் வந்த கவிதை) valenthine's special  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக