வியாழன், ஏப்ரல் 19, 2012

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு
அதிர்ஷ்டம்
வரும் போகும்..

அதிர்ஷ்டம் பணமாக வந்தால்
பணமும் வந்தவழியே..

அதிர்ஷ்டம்
பொருளாகக் கிடைப்பதால்

எனக்கு இது கிடைத்தது?
உனக்கு என்ன கிடைத்தது?
இந்த பொருள் என்னிடம் உண்டு!
அந்த பொருளும் என்னிடம் உண்டு!
என்ன செய்வது?
எனக்கும் புரியவில்லை!?
யாரிடமாவது விற்கவேண்டும்
பணமாக்கவேண்டும்..
போன வருடம் கிடைத்ததே அப்படியே இருக்கு
இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?
அவருக்கு என்ன கிடைத்ததாம்!
இவருக்கு என்ன கிடைத்திருக்குமோ!?
மாற்றிக்கொள்ள கேட்டால் கொடுப்பார்களா?
விலை ஒப்பீடு வந்தால், கூடுதல் பணம் கொடுக்கனுமே
நாமாக இருந்தாலும் சும்மா கொடுப்போமா?
பணம் வாங்காமல் விடமாட்டோமே!
சரி இருக்கட்டும்
உறவுகளில் யாருக்காவது
திருமணம் பிறந்தநாள் என்றால்
பரிசாக கொடுத்து விடலாம்

அதிர்ஷ்டம் கூட
குழப்பம்தான்

அதிர்ஷ்டம் ஒண்ணும்
இல்லாததைக் கொடுத்துவிட வில்லை

அதிர்ஷ்டம் கூட
வியாபார சிந்தனைதான்

அதிர்ஷ்டம் கூட
வெட்டி அரட்டைதான்...

இருப்பினும்
இன்னும் ஓய்ந்தபாடில்லை
அதிர்ஷ்ட சிந்தனை
எனக்கும் தான்..!!

6 கருத்துகள்:

  1. @கோவை நேரம்..நன்றி- திருத்தம் செய்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  2. நன்றாக உள்ளது சகோ, மிக்க நன்றி..தங்களது விரல் வண்ணங்கள் மென்மேலும் தொடரட்டும்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அதிர்ஷ்டம் புரியாத புதிர்

    சொன்ன விதம் பிடிச்சிருக்கு

    பதிலளிநீக்கு
  4. @குமரன் நன்றி வருகைக்கும் ஆதரவிற்கும்

    பதிலளிநீக்கு
  5. @மனசாட்சி... நன்றி வருகைக்கும் பதிவிற்கு. மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு