ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஷா ஆலம் விஜயாவுடன் ஒர் நேர்காணல் –

கேள்வி: வாசகர்களால் அடிக்கடி காயப்படுகிறீர்களே, எப்படி சகித்துக்கொள்கிறீர்கள்?
 எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார், எழுதுவதற்கு ஏழ்மை நிலையும் கோபமும் அவசியம் வேண்டுமென்று. நாமெல்லம் ஏழைகளே அல்ல, மூன்றுவேளை மூக்கப்பிடிக்க சாப்பிட்டு விட்டு, குளுகுளு அறையிலேயே பெரும்பாலும் வாழ்கிறோம். ஆகவே பண்பட்ட எழுத்து வருவதற்கு வாய்ப்பில்லைதான் ஆனால் கோபம்? அது எல்லோருக்கும் வரும். அதுவும் எழுத்தாளர்களின் நியாயமான கோபம் எழுத்து வடிவம் பெறுகிறபோது, அது அற்புதமான இலக்கியமாகிறது. இது பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் தெரிந்து விடுவதால் சில வாசகர்கள் வாசக நிலையிலேயே தேங்கிவிடாமல், அவர்களை அடுத்தக்கட்ட நிலைக்குக் கொண்டு செல்லத் தூண்டுவதே இந்த சர்ச்சை சமாச்சாரங்கள்.  மேலும், சிலரைத்தான் இதுபோன்ற சர்ச்சைகளில் மாட்டிவிடுவார்கள், எல்லோரையும் அல்ல என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 
எனக்கு மிகவும் பிடித்த வாசகம் ஒன்று, அதாவது.. காயமே இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருப்பவன், எதுவுமே செய்யாதவன் என்று அர்த்தம். புண்பட்டவன் பண்படுகிறான். மிதிக்கப்பட்டவன் குடமாகிறான், குத்தப்பட்டவன் சிலையாகிறான், அடிக்கப்பட்டவன் தங்க ஆபரணமாகிறான். ஆக, காயமெல்லாம் என்னை ஒன்றும் செய்யவில்லை. வாசிப்பில் ஒரு படி மேலே வளர அது உரமிட்டிருக்கு. பேட்டி எடுக்க, என்னை நீஙகள் தேர்ந்தெடுக்க இவையும் காரணம்தானே.! பெரிய விஷயமில்லையா இது.! கொஞ்சம் வலி இருக்கும், இரண்டு மூன்று நாள்கள் கழித்து அற்புதமான விவாதக் கட்டுரை தயாராகும். அவ்வளவே.

கேள்வி : வாசகர் தளத்தில் ஏற்படும் சர்ச்சைகளால் எழுதுகோல் சோர்ந்துபோன நிகழ்வுகள் உண்டா?
இல்லைஎழுதுகோலின் இதயத்துடிப்பு அதிகரித்து, அது இன்னும் அதிவேகமாகக் கிறுக்கிக்கொண்டிருக்கும் வெள்ளை காகிதத்தை கருப்பு எழுத்துகளால்.!

கேள்வி : வாசகர்களின் தாக்குதல்களுக்கு இரையாகும்போது, அதை எவ்வாறு மத்திப்பீடு செய்கிறார் உங்களின் கணவர்?
அவரின் வாசிப்பு எல்லாம் அரசியல் சம்பந்தபட்டது. இங்கே நாம் உளறிக் கொண்டிருப்பதையெல்லாம் ஒரு பொருட்டாக அவர் வாசிக்கமாட்டார். ஆரம்பத்தில் அவரும் எழுத்துலகில் இருந்ததால், இவையெல்லாம் ஒரு விஷயமாகக் கருதி மூக்கை நுழைக்கமாட்டார். (அப்பாடா தப்பித்தேன்)

கேள்வி : வலைப்பூ, முகநூல் மற்றும் இணையங்களில் மிகுதியாக முகங்காட்டுவதால், வாசிப்பின் பரப்பளவு சுறுங்கிவிட்டதாக உரைக்கப்படுகிறதே, இதை மீட்டெடுக்க முடியுமா?
முகநூல் உலகிற்கு அறிமுகமாகி ஏறக்குறைய ஏழு வருடங்கள் தான் ஆகின்றன.! இதற்கு முன் நாம் புத்தகமும் கையுமாக இருந்தோமா என்ன? எனக்கென்னவோ, தமிழ் நாட்டுத் தொடர்களின் ஆதிக்கம் நம் தொலைக்காட்சியை அலங்கரிக்கத் தொடங்கியதிலிருந்துதான் நாம் நமது வாசிப்புப் பழக்கத்திற்கு முழுக்கு போட்டுவிட்டோமென்று தாரளமாகச் சொல்வேன்.  புத்தக வாசிப்பின் மகத்துவம் அறிந்தவர்கள் இன்னமும் தொடர்ந்து வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எந்த இணையச் சக்தியாலும் தடுத்துவிட முடியாது. என்னைப் பொருத்தவரையில், முகநூல் சகவாசமே என்னை அதிகமாக வாசிக்கத்தூண்டியது என்பேன். வலைப்பூவில் கால் பதிக்கவும் இந்த மூகநூல் எனக்கு வழிகாட்டியாக இருந்துள்ளதை இங்கே நான் கண்டிப்பாக சொல்லியாகவேண்டும் .
சமூக வலைத்தளங்களில், முகநூல் மிகப்பிரபலம், அதில் தம்மை இணைத்துக்கொள்ளாதவர்களே இல்லை என்று சொல்லுகிற அளவிற்கு குறுகிய காலகட்டத்திலேயே உலகம் முழுக்க தமது அசுர ஆதிக்கத்தைச் செலுத்திய ஒர் தொடர்புச்சாதனம் இந்த முகநூல்.. இதில் நண்பர்களின் வெட்டி அரட்டைகள் வீன் வம்புப்பேச்சுகள் ஒரு புறமிருந்தாலும், கற்பதற்கு அரிய விஷயங்கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றன. என் விஷயத்தில், எல்லோரும் நுழைகின்றார்களே என்று சும்மானாலும் நுழைந்து பார்த்தேன், அதன் பிறகுதான் தமிழ் நாட்டின் அற்புதமான இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அற்புதமான வாசகர்கள் என அறிமுகமானார்கள். இந்த அறிமுகம் இலக்கிய உலகின் மேல் மரியாதை வருவதற்குக் காரணமாக அமைந்தது. கவிதைகளை அதிகமாக வாசிக்கக் கற்றுகொண்டேன். (கவிதைகள் எழுதுவது ஒரு புறமிருக்க, அவைகளை வாசித்து உள்வாங்கி மறைந்து கிடக்கின்ற கருபொருளைப் புரிந்துகொள்வது,  விடுகதைகளுக்கு விடை தேடுவதைப்போல் சுவாரஸ்யமான ஒன்று.) கவிதை மொழி, கவிதை உணர்வு, கவிதைக்கரு என மேலும் உள்வாங்கப் பழகிக்கொண்டேன். சமூதாயத்தில் எழுத்தாளார்களின் பங்கு பற்றிய தெளிவு வந்தது, இலக்கு நோக்கி எழுதப்படுவதுதான் இலக்கியம் என்கிற புரிந்துணர்வு புத்தியில் புகுத்தப்பட்டது. பட்டைதீட்டிய மறுவாழ்வு கிடைக்கப்பெற்றதுபோன்ற தெளிவு எட்டிப்பார்த்தது . அவற்றை நமது படைப்பு இலக்கியத்தில் எப்படிப்புகுத்துவதென்பது யோசிக்கப்பட்டது.. அதற்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால் முத்திரை பதிப்பதென்பது அவ்வளவு எளிதல்லவே.! காலம் வரட்டும். பார்ப்போம்.

கேள்வி : புனைவிலக்கியம், பத்தி, கவிதை, இவற்றில் தீவிர கவனம் செலுத்துவது எதில்?
தீவிர கவனம் செலுத்துவதால் இலக்கியம் வந்துவிடாது. அது ஒரு நிகழ்வு, காதல் போல்.! ஓஷோ சொல்கிறார், ‘மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது நேர்மையுடன்.’  82வயது மூதாட்டியின் வாழ்க்கைக் குறிப்பு, அவரது பாணியிலேயே எழுதப்பட்டுதமிழ் நாட்டில் சிறந்த இலக்கியமாக சேர்த்துக்கொள்ளப்பட்டதாக, அண்மையில் கலந்துகொண்ட ஒரு இலக்கிய நிகழ்வின் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.  மனதில் உதிப்பதை நமது பாணியில் இஷ்டம் போல் கிறுக்கி வைக்கவேண்டியதுதான். கட்டுரையாக வந்தால், அது கட்டுரை.! கதைபோல் வந்தால், அது கதை.! கவிதைபோல் இருந்தால், கவிதை. எல்லாமே இலக்கியம்தான். சிலது நம்மை என்னவோ செய்த இலக்கியம். சிலது நம்மை ஒன்றுமே செய்யாத இலக்கியம். அவ்வளவுதான்.! எனக்கு எல்லாமும் வரும் இலக்கண எழுத்துப் பிழைகளோடு. அவைகளை பொறுமையாகத் திருத்தி வெளியிட்டு, தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு இவ்வேளையில் எனது மனப்பூர்வ நன்றி.

கேள்வி : உங்கள் எழுத்துக்களை ஆவணப்படுத்தியுள்ளீர்களா?
ஒரே ஒரு சிறுகதை, எண்பதுகளில், ஒரு வருட தைபூச வெளியீடாக வந்திருந்தது. அந்தச் சிறுகதையின் பெயர் பூஜைக்கு வந்த மலர்’. என் கதையின் தலைப்புதான் புத்தகத்தின் தலைப்பும். நம் நாட்டின் பிரபல எழுத்தாளர் கா.இளமணியின் அறிமுக முன்னுரையால் அன்று எழுத்துலகில் கால் பதிக்க நினைத்த முற்றிலும் புதிய வாசகர்களை உற்சாகமூட்டும் வகையில் மலர்ந்து பலரைச் சென்றடைந்தது. அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லைதான். பத்திரிக்கைகளில் வெளிவந்த எனது அனைத்து எழுத்துப்படிவங்களையும் வெட்டிச் சேகரித்து வைத்துள்ளேன். இப்போது அவைகளைக் கொஞ்சங்கொஞ்சமாக எனது வலைப்பூவில் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கின்றேன். உலகமுழுக்கப் போகின்றன. எனது வலைப்பூவை அதிகமாக வாசிப்பவர்கள் அமெரிக்கத் தமிழர்கள். (யூ.எஸ்). தமிழ் நாட்டு இணைய இதழிலும் எனது கவிதைகள் கட்டுரைகள் அவ்வப்போது இடம்பெற்று உட்சாகமூட்டிய வண்ணமாகத்தான் இருக்கின்றன.

கேள்வி : வெற்றிகரமாக பெண் இலக்கியவாதிகள் தங்களின் ஆய்வுக்களத்தை நகர்த்தியிருக்கின்றார்களே!
ஆமாம், கேள்விப்பட்டேன். வாழ்த்துகள்

கேள்வி: ஆண் இலக்கியவாதிகளுக்கு நிகராக பெண் இலக்கியவாதிகளும் இப்பரப்பில் உழுது வந்திருப்பதானது தித்திப்பான விஷயம் தானே!!
இன்னும் சரியாக வெளியே வரவில்லை என்றுதான் சொல்வேன். பொதுவாழ்க்கை கொடுக்கின்ற காயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது பெண்கள் இன்னமும்  இந்திய சமூகக் கலாச்சாரப் பின்னணியில் பிண்ணிப் பிணைந்திருப்பதால்ஊர் என்ன சொல்லும் உலகம் என்ன சொல்லும் என்கிற சிந்தனையிலே முடக்கப்பட்டு விடுகின்றனர். பெண்கள் எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து, படப்பிலக்கியத்தில் வலம்வர ஆரம்பித்தால்ஆண்களையே மிஞ்சி விடுவார்கள் என்று நம்பலாம். பெண்கள் சிறந்த படைப்பாளிகள். சமூதாய அவலங்களை அழுத்தமாகச் சொல்லக்கூடிய ஆற்றல் பெண்களிடம் உண்டு. தேவதாசி பரம்பரைக்கு மீண்டும் உயிரூட்ட நினைத்த ஒரு பிராமணரின் முகத்திரையைக் கிழித்தவர் முத்துலட்சுமி என்கிற பெண் தான். பாரதியார் சொல்லியிருப்பார், பெரியார் சொல்லியிருப்பார், மகாத்மா காந்தி சொல்லியிருப்பார் பெண்ணுரிமையைப் பற்றி ஆனால் தனிப்பட்ட பெண் ஒருவளுக்கு அவளின் உரிமை பற்றியும் சுத்தந்திரம் பற்றியும் நன்கு தெரிந்திருப்பது அவசியம். திட்டுகிற கணவனை உடனே விவாகரத்து செய்வது தான் பெண்ணுரிமை என்று நினைக்கின்ற ஊனத்தனமான சிந்தனை எங்கிருந்து வந்ததென்பதுதான் புரியவில்லை.!?

கேள்வி : இன்று புதுக்கவிதையிலும் சுரத்து குறைந்து இருப்பதாக குற்றச்சாட்டு பதிவாகிறதே! (உங்களையும் என்னையும்)
அப்படியில்லையே.. புதுக்கவிதைகள்தாம் அற்புதமான விவரங்களை இரண்டு மூன்று வரிகளிலேயே மிக எளிமையாக எடுத்தியம்புகின்றனவே.

உதாரணம் சில  

காவடி

மயில்கள் வேட்டையாடப்படுகின்றன
மயில் மேல் வரும்
முருகனுக்காக..

தேங்காய்கள்
பற்றாக்குறை
தெருவில் உடைக்க
பக்தர்கள் கோஷம்
தைபூசத்திருநாள்

எளிய வழி
இலக்கியத்தில்
எல்லாமும் உண்டு
இறைவனையே
நாடுகிறார்கள்

இவைகளின் சுரத்தில் என்ன குறை? (நான் எழுதியவை)

யாருக்கு எது பிடிக்கிறதோ அதைப் பிடித்துக்கொள்ளவேண்டியது தான். பிரம்பால் அடித்தாலும் வராத விஷயத்தில் மூக்கை நுழைக்க எனக்கு எப்போதுமே விருப்பமில்லை.

கேள்வி : வாசிக்க நேரத்தை எவ்வாறு ஒழுங்குப்படுத்துகிறீர்கள்?
தொலைக்காட்சி பக்கமே போக மாட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பேன் ஆங்கிலம் மலாய் என எதுவாக இருந்தாலும். கையடக்க இதழ்தென்றல் எப்போதும் இருக்கும் என்னோடு.

கேள்வி:  உங்களின் எழுத்துப் பணிக்கு கணவரின் பங்களிப்புப் பற்றி கூற இயலுமா?
தொல்லை கொடுக்காமல் சும்ம இருப்பதுவே.

கேள்வி : தாங்களின் அன்புக் கணவர், மழலைச் செல்வங்கள் ஆகியோருக்கு முகங்காட்டி வளர்த்தெடுத்தது செம்மொழி தமிழா?
ஆம்

கேள்வி : வாசகர் தளத்தில் முன் மொழிய ஏதேனும் விருப்பம் உண்டா?
நீ கற்பதை நிறுத்தினாலும், வாழ்க்கை உனக்குப் போதிப்பதை நிறுத்தாது. தெரியாத்தை தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொண்டே இருங்கள். கற்றவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் கற்றுக்கொடுக்க.!

தமிழ் பணி சிறக்க வாழ்த்துகள்.

கேள்விகள் அனைத்தும் அற்புதம் ஐயா. உள்ளபடியே யோசிக்க வைத்தன. நன்றி.

(இன்று, தென்றல் வார இதழில் வந்த எனது நேர்காணல்)

19 கருத்துகள்:

 1. ஷா அலாம் விஜயாவா.....
  அருமை..நான் என்னவோ நினைத்துட்டேனுங்க உங்கள,..உண்மையிலேயே சகோதரி தங்களது நேர்க்காணல் வந்திருக்கா ?
  பதில்கள் எல்லாம் தூள்ப்பறக்குது,

  @ காவடி
  மயில்கள் வேட்டையாடப்படுகின்றன
  மயில் மேல் வரும் முருகனுக்காக @@
  ரசித்தேன்..

  அழகான பகிர்வு.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நேர்காணல் ருசித்து வாசித்தேன் - ரத்தின சுருக்கமான நாலு வரியில் கவிதை யோசிக்க வைத்தன. பகிர்வுக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 3. உங்கள் பதில்கள் அனைத்தும் அருமை. பெரிய எழுத்தாளருடன் பழகி வருவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது மேடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பாலா.. இப்படி கிண்டல் செய்கிற ஆளக்காணோமேன்னு வருந்தப்பட்டேன் ..வாங்க .வாசித்தமைக்கு நன்றி

   நீக்கு
  2. கிண்டல் எல்லாம் பண்ணலங்க. உண்மையாகத்தான் சொல்கிறேன். இருந்தாலும் உங்களுக்கு தன்னடக்கம் அதிகம்தான்.

   நீக்கு
 4. THOUGHTFUL QUESTIONS AND BOLD AND BRILLIANT ANSWERS..............
  VIJAYAVUKKU ORU KEZHVI...ORU SARAASARI MALAYSIA THAMIZH KUDUMBATHIL ORU MANAIVIYIN SUTHANTHIRATHIN ELLAI ETHVARAI? KANAVANNUKKU KATTUPADUVATHU ENBATHU ENNA? KATTUPPADA THEVAI ILLAI ENBAVAI ULLATHA? DR.G.JOHNSON.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசித்தமைக்கு நன்றி டாக்டர். உங்களின் கேள்விகளுக்கு எனது பதில். ஒரு பெண் படைப்பாளி (தமிழில்) எல்லா நிலையிலும் சிந்தித்துச் செயல்படவேண்டிய கட்டாயச் சூழலில் சிக்குண்டுக் கிடக்கிறாள். அதனால் தான் இந்த நவீனயுகத்திலும் போலிச்சூழலில் பதிவிரதைக் கதைகளும் மாமியார் நாத்தனார் கொடுமைக்கதைகளும் குவிந்தவண்ணமாக.

   உதாரணத்திற்கு; ஒரு பெண்படைப்பாளி, பாலியல் கொடுமைகளைப் பற்றிச் சொல்லும் போது, கதைகளில் மறைந்துக்கிடக்கின்ற உள் அர்த்தத்தை பார்ப்பதை விடுத்து, எழுதுகிற பெண்ணிற்கு அதில் என்னமாதிரியான அனுபவம் இருக்கின்றது என்கிற ரீதியில் பார்க்கத்துவங்கிவிடுகிறார்கள் நம்முடைய வாசகர்கள். (சில ஆண் எழுத்தாளர்களுக்கே இந்த அவலநிலை) இது அபத்தம் இல்லையா? அவள் திருமணமானவளென்றால் கட்டிய கணவனையும் சம்பந்தப்படுத்துகிற போது, அவச்சொல் இருவருக்கும்.

   இவ்விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் கவனத்துடன் காய் நகர்த்த வேண்டியது அவசியமாகிறது. இப்படி பலவழிகளில் சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, நல்ல படைப்பு வருமா என்ன? புரிந்துணர்வு உள்ள வாழ்க்கைத்துணையென்றால் பரவாயில்லை, கட்டிய மனவியின் விஷயத்தில் கணவன்கள் எங்கே புரிந்துணர்வுடன்?? இலக்கிய ஞானமுள்ளவர்களே இதெற்கெல்லாம் பயம்படும்போது, அவை அறவே இல்லாத வாழ்க்கைத்துணை அமையப்பெற்றுவிட்டால், நிலைமை படுமோசமாகிவிடும்.! இந்த நிலையில் பெண்கள் எங்கே எழுதுவது!? இப்படித்தான் பெண்களின் இலக்கிய ஆற்றல் மழுக்கடிக்கப்படுகிறது.

   மேலும் பெண் ஒருவளின் வாழ்க்கை, ஆண்களைப்போல் அவர்களை மட்டும் சார்த்ததாக இருப்பதில்லை. அது, குடும்ப கௌரவம், குழந்தை வளர்ப்பு, அவளின் சொந்த பாதுகாப்பு என விரிவடைவதால், இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே சில விஷயங்களில் ஈடுபடவேண்டியுள்ளது.

   கணவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதென்பது விசுவாச உணர்வேயன்றி வேறென்ன! எல்லா வசதிகளையும் அவர் செய்துக்கொடுப்பார், குழந்தைகளின் நலனுக்காக பாடுபடுவார், ஆனால் உரிமை என்கிற பெயரில் அவரையே உதாசினம் செய்வது தான் மனைவி செய்யும் நன்றியுணர்வா? இது அசிங்கமாக இல்லையா!? இம்மாதிரியான விசுவாச சிந்தனை இல்லாத நிலையில் இருக்கும் ஒரு பெண் எப்படி தமது குழந்தைகளுக்கு விசுவாசத்தைப் போதித்து, நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும்!? வீட்டில் இருந்துதானே இது ஆரம்பம்.! குடும்ப பாதுகாப்பிற்காக அல்லும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைத்துணைக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமலிருப்பது தானே வாழ்க்கைத்துணையின் கடமை.

   பெண் ஒருவள், தம்முடைய உரிமை என்ன என்பதை அடையாளங்கண்டுக்கொண்டு அதன் படி குடும்ப சூழலுக்கும் கணவருக்கும் எந்த பாதிப்பும் வராமல், இலக்கிய பணி பொது சேவை என மேற்கொண்டு நகர்வதுதான் எல்லோருக்கும் நன்மை என்பது என் கருத்து டாக்டர். நன்றி

   நீக்கு
 5. Nandri Vijaya...Melum oru santhegam...Malaysiavil theeviramaga ezhuthikondirukkum pengalai viral vittu ennividalaam. Neengal sonnathu ungalin thanippatta karuthuthn. Ithu, athgaavathu neengal sonnapadi ivargalil ethanai pergal paathikkappattullanar enbathu namakku theriyathu. atharku muraiyana aaivu thevai. Ithai seiye mudiyuma?.Ippadi seithal kudumba vaazhkaiyum kanavarin athikkamum ezhuthuvathai eppadi paathithethu enbathsai ariyalaam...Kudumba soozhalaal ethanai pergal ezhuthamal ponargal enbathaiyum therinthu kollalaam..Thodarnthu ezhuthubavargal entha soozhal karanamaga ezhuthi varugindranar enbathaiyum ariyalam...Dr.G.Johnson.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி டாக்டர். இதை நாம் ஆராயவே வேண்டாம், அவர்களின் கதைகளையோ, கட்டுரைகளையோ வாசித்தால் போதுமானது. அவர்கள்தான் ஹிரோயினிகள் அவர்களின் கதைகளில். இவள் உலக மகா நல்லவள் எல்லா சூழலிலும். இவள் ஒரு ஆசிரியையாக இருந்தால், மணவனின் அவலமும், மாணவனின் குடும்பத்தின் அவலத்தையும், இவள் அரசியல் சூழலில் இருந்தால், சமூதாயத்தின் அவலத்தையும், இவள் அலுவலகத்தில் பணி செய்பவளாக இருந்தால், சக ஊழியர்களின் அவலங்களையும், இவள் அப்பாவியாக இருந்தால், இவளை ஏமாற்றிய அயோக்கியர்களைப்பற்றியும், இவள் குடும்பச்சூழலைச் சொல்லும் போது, குடும்ப பாரமே இவளின் கையிலும் (சீரியலில் வரும் நாயகி போல்), தம்மை தெய்வ பக்தி நிறைந்தவளாகவும், கொள்கைப்பிடிப்பாளினியாகவும், குல கௌரவம் காப்பவர்களாகவும், நேர்மையின் மறுபிறப்பாகவும்... தமிழ் பற்றில் உச்சத்திலும் (இந்த தகுதிக்கு தமிழ் எழுத்துகள் 247 தெரிந்தால் போதுமானது, வேறு ஒரு மண்ணும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை) இவைகளையெல்லாம் நுழைத்து, தமது கதைகளில் அறிவுரைகளை வாரி வாரி வழங்கியிருப்பார்கள்.. இது போதாதா இவர்ளைப்பற்றி தெரிந்துக்கொள்ள!? படிப்பவர்கள் விமர்சிக்க ஒன்றுமேயில்லையே அங்கே. நன்றாகத்தானே சொல்லியிருக்கின்றார்கள்.!. அவர்களின் கதைகளைப் படிக்கும் பொழுதே, நல்லவர்கள் என்கிற பெயர் ஆட்டோமெட்டிக்கா வந்துவிடுகிறதே. பிறகு ஏன் கணவன்,குடும்பம் என பயப்படவேண்டும்.!? இப்படி பெயர் போடுகிறவர்கள், போட்டிக்கதைகள் எழுதியவண்ணமாக முதல் மூன்று நிலை பரிசுகள் பெற்று, தொடர்ந்து எழுத்தாளார்கள் என்கிற பெயரை தக்க வைத்துக்கொண்டிருன்கிறார்களே.!. இல்லையா டாக்டர்??

   நீக்கு
 6. Neengal solvathu muzhukka muzhukka unmaiye...Ella kathaigalilum kurai illatha kathanayagigalthan varuvaargal.Thangalin sontha kathaigalthan ezhuthi varagindranar. Vimarsanam seithal avvalavum unmai engindranar. Ippadi sontha kathaiyai kooruvathal maarupatta konathil sex serthu ezhuthum kathaiyaiyum appadiye vaasagar ennividukindranar. ithuthan adipadi kuraipadu.Ithupondra kathaikalai padikumpothu ezhuthbavar etho paathikkapattu virakkthiyil ullathagavum enna thondrugirathu.Etaiyo parikoduthuvittu athai eedu seiya pozhuthupokkukkaga ezhuthuvathupol ullathu. Nalla illakkia padiaippugal migavum kuraivu..Dr.G.Johnson.

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா5/01/2012

  வணக்கம் விஜி, இது நேர்காணலா அல்லது கேள்விகள் முன்கூட்டியே கொடுக்கப்பட்டு அதன்பின் நீங்கள் சிந்தித்து எழுதி அனுப்பிவைத்த பதில்களா? புல்லரித்துப்போய்விட்டேன். உண்மையிலேயே உங்களை வசைபாடும் மற்றும் உங்கள் திறமையை அறிந்திடாத தென்றல் வாசகர்கள் பலரும் படித்து தெளிவடைய நல்லதொரு சந்தர்ப்பம். நான் என்றும் சொல்வதுபோல் உங்களுடைய ஆற்றலை தொடர்ந்து வெளிப்படுத்துங்கள். உளமார வாழ்த்துகிறேன். அன்புடன் பாலகோபாலன் நம்பியார், கிள்ளான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பாலகோபாலன் சார், வாசித்தமைக்கு நன்றி. கேள்விகளை தபால் மூலமாக ஐயா வீர ராமன் அவர்கள் அனுப்பிவைத்தார். கேள்விகள் கையில் கிடைத்தவுடன், உடனே பதில் எழுதி, அனுப்பிவைத்தேன். உங்களின் பாராட்டே டானிக் மாதிரி இருக்கின்றது. நீங்காள் யாரையும் லேசில் பாராட்ட மாட்டீர்கள். இந்த பாராட்டு எனக்கு ஒரு பெரிய பரிசு.

   நீக்கு
  2. Balagopallan Nambiar5/02/2012

   Thank you Viji, I always have high opinion on you and ur reading apetite to digest ample knowledge. Keep it up.
   Balagopallan Nambiar, Klang, Malaysia

   நீக்கு
 8. fuyooooo...... அக்கா நீங்க GREAT..... இப்பதான் படிக்கிறேன்..:)

  பதிலளிநீக்கு