வியாழன், மே 24, 2012

மதி

சகுனம் பார்ப்போர்
முகத்தில் விழிக்க
சகுனம் பார்க்கிறேன்.. நானும்

%%%

வியாழக்கிழமையை
வெள்ளியாக நினைத்ததால்
வெள்ளி எனக்கு
போனஸ் ஆனது.

%%%%

நானும் ஒருவகையில்
பைத்தியம் தான்
எதாவதொன்றில் பற்றுதல் வைத்துக்கொண்டே..
நல்ல வேளை
அது புடவை, நகை, புகை, மதுவில் இல்லை
உன்னிடமும் இல்லை

%%%%

முன்பு
நான் எழுதியதை
இப்போதைய நான்
அதை வாசிக்கும் போது
முன்பு இருந்த நான்
இப்போது அங்கே இல்லை

%%%%

அநாதை ஒருவள்
அன்னையைப் போற்றி
அன்னையர் தினக் கவிதை எழுதுகிறாள்
அனைத்துலக போட்டியில் வெல்ல..

%%%%%

6 கருத்துகள்:

 1. கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ///சகுனம் பார்ப்போர்
  முகத்தில் விழிக்க
  சகுனம் பார்க்கிறேன்.. நானும்///

  அருமையான ஹைக்கூ சகோ ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹைக்கு சகோ!! சரிதான்..மிக கடினமான ஒன்று எனக்கும் வருதோ!? நன்றி.

   நீக்கு
 3. அநாதை ஒருவள்
  அன்னையைப் போற்றி
  அன்னையர் தின கவிதை எழுதுகிறாள்
  அனைத்துலக போட்டியில் வெல்ல..

  கனமான கவிதைகள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ராஜேஸ்வரி... வருகைக்கும் வாசிப்பிற்கும்

   நீக்கு