புதன், ஜூன் 20, 2012

விளையாடு

ஒரு துணியை எடு
இரண்டாக மடி
மனித உருவம் வரை
அதைக் கத்தரி
இரண்டு துண்டுகள் துணி கிடைக்கும்
சிறிய துவாரம் விட்டு
இரண்டையும் மனித உருவம் போல் தைத்துவிடு
தூவாரத்தினுள் பஞ்சுகளைப் புகுத்து
பிறகு அந்த துவாரத்தையும் தைத்துவிடு
இப்போ உன்னிடம் ஒரு பொம்மை
விளையாடு
என்னை விடு..

11 கருத்துகள்:

 1. ஒ இப்பூடியும் விளையாடலாமா..!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இதுதானே விளையாட்டு.. வாசிப்பிற்கு நன்றி சகோ

   நீக்கு
 2. அட பசங்க தொல்ல தாங்கல்ல என்னுட்டு இப்படியா...:)

  நல்ல விளையாட்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னே, எல்லோரையும் மயக்கிவிடுகிறார்களே.. கேடிங்க. :)

   நீக்கு
  2. குருவி வருகைக்கு நன்றி..

   நீக்கு
 3. வார்த்தை பிரயோகம் வியப்பு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ.. மனதில் வருவதை அப்படியே எழுதினேன். வார்த்தை பிரயோகம் சரியாக வராது எனக்கு. சில வேளைகளில், கீ போர்ட்டில் கைகளை வைத்துக்கொண்டு அப்படியே முழி முழின்னு முழிப்பேன். இன்னும் நிறைய படிக்கனும்.
   பாராட்டுதலுக்கு மகிழ்ச்சி சகோ.

   நீக்கு
 4. இறுதில் சொன்ன ஒரு வார்த்தை கவிதையை
  உச்சம கொண்டு செல்கிறது
  ஆம் சிலருக்கு பொம்மையே போதுமானது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதில் தோன்றியது, எழுத்தாக வந்தது. கவிதையெல்லாம் இல்லை. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரமணி சார்.

   நீக்கு