செவ்வாய், ஜூன் 26, 2012

அசைந்தாடிநான் ஒரு செடி வளர்க்கின்றேன்
கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக
ஒரு செடியின் சிறிய கிளை அது.
அதன் வளர்ச்சி
ஒரு குழந்தையின் வளர்ச்சி போல்
அசைந்தாடி அசைந்தாடி
கொஞ்சம் கொஞ்சமாக..
என் நிலையை பிரதிபலிக்கும்
மகிழ்ச்சி என்றால்
அது மலரும்
சோகமென்றால்
அது வாடும்
என் கோபம்
என் விரக்தி
என் காதல்
என் ரகசியம்
என் சூழ்ச்சி
என் வஞ்சகம்
எல்லாம் தெரியும் அதற்கு
இன்றும் என்னோடுதான்
இப்போது அதனருகில் நான்
என் நிலையை கவனித்துக்கொண்டு
இன்று என் உயரத்திற்கு வளர்ந்து விட்டது
என்னை விட வளரும்
இன்னும் இன்னும் இன்னும்
அதனால் நிறுத்திவிட்டேன்
அதன் முன் நாடகமாடுவதை..

9 கருத்துகள்:

 1. நாம் அவைகளைப் புரிந்திருப்பதைவிட
  நம்மை அவைகள் அதிகம் புரிந்திருக்கும்
  நீங்கள் சொவதைப் போல அவைகள் தம்மை
  வார்த்தைகளால் வெளிக்காட்டிக் கொள்வதில்லை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சொந்தமே..
  இப்போது அதனருகில் நான்
  என் நிலையை கவனித்துக்கொண்டு
  இன்று என் உயரத்திற்கு வளர்ந்து விட்டதுஃஃஃஃ
  நான் ரசித்த வரிகள்

  பதிலளிநீக்கு
 3. மிக அருமை...

  ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்..

  கடைசி வரியை மட்டும் ரசிக்கவில்லை...

  ” ஏன்னா அது ஊமை” திடீர் என வேறு மொழிக்கு மாறுவது போல இருந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அந்த வரி ஒரு ஊனமாகவே தெரிகிறது சகோ. அந்த வரியை நானே புகுத்தினேன், மற்றவைகளெல்லாம் தானே உதித்தவை.
   சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அந்த வரியை எடுத்து விடுகிறேன்.

   நீக்கு
 4. நல்லதொரு படைப்பு....நீங்க தான் அனுபவசாலியாச்சே...

  பதிலளிநீக்கு