அடிபட்ட கரப்பானை
அடக்கம் செய்தனஎறும்புகள்
%%%%%
சதை வெந்துவிட்டது
இரத்த வாடை தான் இன்னும் போகவில்லை
விருந்துக்கு நேரமாச்சு..
%%%%%%
உறவுகளால் பேசப்படும்
திருமணம்.
ஒரு பெண் செய்யும்
மறுமணம்.
%%%%%
ஒரு மயில்
ஒரு மையில்
ஒரு மைல்
ஒருமையில்
%%%%%%%%
திட்டம்போட்டு யதார்த்தமாக
செய்யப்பட்ட ஒரு கொலையில்
நானும் கூட நடைபிணமே.!
%%%%%%
அசையாமல்
அமர்ந்திருந்தால்
நம் மீதும்
ஈ மொய்க்கிறது.
%%%%%%
காலையில் எழுந்தவுடன்
கடிகாரம் பார்ப்பதுபோல
சூரியனை எட்டிப்பார்ப்பதைபோல
சூடாக ஒரு கப் காப்பி அருந்துவதைப்போல
வழக்கமாகிவிட்டது
இணைய உலா.
%%%%%%%%
நீந்த முடியாத மீன் முள்
நடந்துச்சென்றது
மேஜைக்கடியில்..
%%%%%%
இரவெல்லாம் உறக்கமில்லை
ஏன் என்று கேட்டால்
ஒண்ணுமில்லை என்கிற
பொய் கலந்த உண்மையை
சொல்லவேண்டிவருமே.!
%%%%%%%
ஒரு புத்தகத்தில்
நுழைகின்ற போதெல்லாம்
உள்ளே, நான் இருக்கின்றேன்
என் பின்னே நீயும் வருகின்றாய்..
%%%%%%%%
காய்ந்துப்போன செடியில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
ஒரே ஒரு பச்சை இலையால்,
என் நம்பிக்கை சாய்ந்து விடவில்லை,
தினமும் வேர்களை நோக்கி
நீர் பாய்ச்சியவண்ணம்
நான்..
%%%%%%%%%
கதை படித்தால்-கதையாக
கட்டுரை படித்தால் -கட்டுரையாக
துணுக்குகள் படித்தால்-துணுக்குகளாக
மாறிவிடும் நான்..
கவிதை படித்தால் மட்டும்
நீயாகிப்போகிறேன்..
%%%%%%%
கீரையின் நடு நரம்பெடுத்து
வெங்காயத்தை துகிலுறித்து
வெள்ளப்பூண்டில் தோலுறித்து
மிளகாயை மொட்டையாக்கி
கத்தரிக்காயின் கழுத்தறுத்து
கொதிக்கும் எண்ணெயில் வதக்கி
கடையப்போகிறேன் புளிச்சக்கீரையை.
%%%%%%%%
முத்தமிட்டுக்கொண்டே இருந்தால்,
மழலைகூட
வன்முறையைக் காட்டி,
விலகி நிற்கும்.
%%%%%%%
நாளை நான் இல்லாமல் போகலாம்
இன்று என்னால் சேகரிக்கப்படும்
இந்த தருணங்கள் வாழும்போது
இந்த வருகையும் அர்த்தமாகிவிடுமல்லவா!
%%%%%%%
அடிக்கிற வெயிலில்
ஆட்டிஃபிஷல் மலர் கூட
வாடிவிடும்போது
எம்மலர் எம்மாத்திரம்!?
%%%%%%%
எம்மாடி எத்தனை கவிதை.,
பதிலளிநீக்குகவிதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்!
நன்றி சகோ... :)
நீக்கு//சேகரிக்கப்பட்ட தருணங்கள்//
பதிலளிநீக்குஒவ்வொன்றும் ரசித்தேன் - செம செம கலக்கிட்டீங்க சகோ
நன்றி சகோ.. எல்லாம் உங்களின் அன்பும் அரவணைப்பும்தான்.
நீக்குஅருமையான சேகரிப்பு
பதிலளிநீக்குதீர்க்கமான பார்வை
கூர்மையான வார்த்தைகள்
கவிதையை காவியமாக்கிப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி சார், இதிலும் ஒரு கவி பிறந்து விட்டது இங்கே. தங்களின் தன்னடக்கமே எனக்கு பூஸ்ட் ஐய்யா. கற்றுக்கொள்ளவேண்டும் நிறைய உங்களைப்போன்றவர்களிடம்.
நீக்குஅசையாமல்
பதிலளிநீக்குஅமர்ந்திருந்தால்
நம் மீதும்
ஈ மொய்க்கிறது. ஃஃஃஃஃஃ
அசைதல; தான் உயிரின் ஈருப்பிற்கே அடையாளம்.இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்.அருமையயான தொகுப்பு.வாழ்த்துக்கள்.
அன்புடன் அதிசயா
அசையாமல்
அமர்ந்திருந்தால்
நம் மீதும்
ஈ மொய்க்கிறது.
நன்றி அதிசயா.
நீக்குeppudi!?
பதிலளிநீக்குarumai!
வேறவேலை..வீட்டைச்சுற்றி ஓடும் பூச்சுகளை வெரிக்கப் பார்த்தால் இப்படித்தான் எதாவது தோன்றும் சீனி. வருகைக்கு நன்றிபா.
நீக்கு@Athisaya இதெல்லாம் பேஸ்புக்கில் மொக்கை என திட்டு வாங்கிய குட்டிக்கவிதைகள். வருகைக்கு நன்றி அதிஷயா.
பதிலளிநீக்கு