வெள்ளி, ஜூன் 29, 2012

மன நோய்

முகநூலில் என் கேள்விக்கு எனது அன்பான நண்பர்கள் பகிர்ந்த ஒர் தொகுப்பு இது.  

மனநோய் ஏன் வருகிறது?

நான் நினைக்கிறேன், தன்னைப்பற்றி ஊர் உலகம் என்ன சொல்லும் என்கிற சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்குத்தான் மனவியாதி வரும் போலிருக்கிறது. காரணம் அவர்கள்தான் ஊர் உலக அங்கீகாரத்திற்காக நடிப்பவர்கள்.


குட்டிப்பிசாசு - பகிர்வு
இப்படி தலைப்பு போட்டு கொண்டு இருப்பதாலும், அதை படித்து கொண்டே இருப்பதாலும்


மணிவண்ணன் கோவிந்தராஜ் - பகிர்வு
மனசு இருப்பதால்


பின்னம்பாக்கம் நித்யாநந்த குருமூர்த்தி - பகிர்வு
Thevaiye illaama sindhanai panna ellaa viyaadhiyum varum kkaa...Nallaa rest edunga...

குட்டிபிசாசு - பகிர்வு
அக்காவ எல்லாரும் மனநோயாளியாவே ஆக்கிட்டீங்களேய்யா


இளங்கோ சக்திவேல் - பகிர்வு
இந்த கேள்வியை சீரியஸா எடுத்துக்கிறதா, காமெடியா எடுத்துக்கிறதா? 
 மனநோய்க்கான காரணங்கள் சில.
மன அழுத்தம்,
தனிமை (கூட்டத்தில் இருக்கும் போதும் தனித்திருப்பது),
அன்புக்கு ஏங்குதல், ஏமாற்றம் போன்றவை.

சில நேரங்களில் குட்டிப்பிசாசு போல பேசுபவர்களால் எதிராளிக்கும் மனநோய் வரலாம்.
நான் கேள்விப் பட்டதையே எழுதி உள்ளேன். அதிக விவரங்களுக்கு வலையில் தேடலாமே தோழி.

மதுரை கண்ணன் - பகிர்வு
 நல்லதோ , கேட்டதோ அதிகமாய் பலவீனப்படும்போது ...


ஜெய்லானி - பகிர்வு
‎//மனநோய் ஏன் வருகிறது?// டாக்டருக்கு வேலை இல்லாமல் போய்டும் அதனால் வருது :-)


சதிஷ் ராகுல்
உங்களின் status படிப்பதால்


அந்தோணிராஜ் -பகிர்வு 
உடல் ஆரோக்கியம் போல தான மன ஆரோக்கியமும் உடலை சரியாக பார்த்து கொள்ளாவிட்டால் வியதிகள் தானே வரும் அது போல தான் மனமும்.ஆனால் கடவுள் பக்தி கொண்டவர்களுக்கு மன நோய் வரும் சாத்தியம் மிக மிக குறைவு நல்லதோ கெட்டதோ அங்கே சரணடைந்தால் இல்லை மன நோய்.


K.R.விஜயன் - பகிர்வு
தேவையில்லாத சுமைகளை மனதில் பராமரித்துக்கொண்டிருப்பதால்........ take it easy policy இருந்தால் ஒரு நோயும் வராது. சிரிங்க.............சிரிங்க................சிரிச்சிக்கிட்டே இருங்க அடுத்தவங்க ஒரு மாதிரி பார்த்து கையில் கல்லை தூக்க ஆரம்பித்தவுடன் நிறுத்திடுங்க.......


ஸ்மிலி பிரபு திருச்சி - பகிர்வு
பெரும்பாலும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இது அமைந்தாலும்., உன்மையில் ஒருவன் தான் விரும்பியதை சிந்திக்க இயலாமல் சில விஷயங்களால் கட்டுப்படுத்தப்படும் பொழுது சுதந்திர தன்மையை இழந்த மனம் முதலில் ஆழ்ந்த வேதனைக்கு உள்ளாகி இருதியில் மன வியாதியாக உருமாறுகிறது..


 மனிதன் எப்பொழுதும் தான் சுதந்திரமாக இல்லாவிட்டாலும் தன் என்னங்களை சுதந்திரமாக அலைய விட நினைப்பான்.. அதாவது கஷ்டமான வாழ்வாக இருந்தாலும் ஒரு நல்ல சந்தோஷமான வாழ்வை கற்பனை செய்து கொண்டு நாமும் சந்தோஷமாய் வாழ்வோம் என்று நம்பிக்கையுடன் வாழ்வான். எப்போது இந்த சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அப்போது அவனுக்கு நம்மால் வாழ முடியாது, நம்மால் யாருக்கும் யாதொரு பயனும் இல்லை என்ற அச்சம் தோன்ற ஆரம்பிக்கிறது, இதுவே மன நோயின் முதல் படி !

சங்கரலிங்கம் விநாயகம்
pengalaal perbaalum...


ஸ்டீல்ஸ் குமார்
appaa........ ippavavathu itha ketkanumnu thonuche!!


பின்னம்பாக்கம் நித்யானந்த குருமூர்த்தி - பகிர்வு 
ஒரு மனிதன் ஒரு காரியத்தை பற்றி நினைக்கும்போதே, அது சரியாக வந்தால் நல்லது, இல்லையென்றால் ரொம்ப நல்லது என்ற மனோபாவத்துடனேயே ஆரம்பிக்கவேண்டும்.எந்த ஏமாற்றமும் தன்னை பாதிக்காத வகையிலே தன் மன நிலையை வைத்துருந்தால்,மனம் சம்பத்தப்பட்ட எந்த அழுத்தமும் வராது சிஸ்டர்.


கவலை இல்லாம்ல் இருந்தால் வராது..


ஸ்ரீவிஜி சொன்னது
இதை அப்படியே ப்ளாக்கில் போடுவேன்.... உங்களின் பின்னூட்டங்களோடு.




சதிஷ் ராகுல்
நல்லது... அப்படியே white லயும் போடுங்க சதிஷ்  

10 கருத்துகள்:

  1. நல்லது... அப்படியே white லயும் போடுங்க சதிஷ் ///////

    இது செம காமெடி...

    பதிலளிநீக்கு
  2. நான் ஒரு ஸ்டேட்டஸ் போட்ட லைக் பண்ணுறதுக்கு கூட ஆளைக்காணோம் உங்களுக்கு பாருங்க எத்தனை பேறு கமாண்டு போட்டிருக்காங்கன்னு! (அது வேற ஒன்னும் இல்லை வயித்தெரிச்சல் தான்) :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அது வேற ஒன்னும் இல்லை வயித்தெரிச்சல் தான்) :D//
      தம்பி உங்க நேர்மை..புல்லரிக்கிறது. நல்லா கமெண்ட்ஸ் போடுவார்கள், சமையம் பார்த்து கவிழ்த்துவிடுவார்கள். அதுக்குத்தான் சுற்றுகிறார்கள் வேறென்ன. நம்மதான் அசால்ட் ஆறுமுகத்தோட தங்கச்சியாச்சே, அசரமாட்டோம்ல..

      நீக்கு
  3. இதுக்குத்தான் பேஸ்புக்கில் எந்த கேள்விக்குமே நான் பதில் அளிப்பதில்லை. ஆமா கடைசி வரை மன நோய் எப்படி வருகிறது என்று சொல்லவே இல்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பர்சனலா வந்து லிங்க் கொடுத்தார்கள். ஆங்கிலத்தில் யாரோ ஆராய்ச்சி செய்தது, நமக்கு அதுவெல்லாம் வேண்டாம், நம் மனதில் உடனே தோன்றுவதுவே தானே சுவாரிஸ்யம்.. அது ஒன்றுமில்லாத உலறலாக இருந்தாலும் கூட..! நன்றி பாலா சார்.

      நீக்கு
  4. ஓ இப்படியும் முயற்சிகள் நடக்கிறதா???வாழ்க தங்கள் பணி..சீக்கிரமா கதில எனக்கும் செர்லிடுங்க...சந்திப்போம் சொந்தமே..:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திப்போம் சொந்தமே..:)// எங்கே சகோ? அங்கேயா!! ஒகேதான்.

      நீக்கு
  5. உங்கள் முகநூலில் இல்லாததால் இங்கேயே சொல்லி விடுகிறேன்...

    மனது மனதை ஆசுவாசப்படுத்த முடியாத இடங்களில் தோன்றுவது மனநோய்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் அற்புதமான கருத்துப்பகிர்விற்கும் நன்றி சுதா. தொடர்ந்து பகிருங்கள்.. தொடர் கற்றலில் சில வைரங்கள் இவை அனைத்தும்..

      நீக்கு