வியாழன், ஜூலை 05, 2012

புறக்கணிக்கப்பட்ட மனது

பிரிய மனமில்லாததால்
பிரிந்து விடுவாயோ
என்கிற பய உணர்வால்
பிரிந்து செல்கிறேன் உன்னை.!

விலகிட மனமில்லாததால்
எங்கே விலகிவிடுவாயோ
என்கிற உளவியல் சிக்கலில்
விலகிச் செல்கிறேன் உன்னை.!

மறக்கவே முடியாததால்
மறந்துவிடுவாய்
என்கிற உணர்வுக்கொந்தளிப்பிலே
நானே மறந்து விட்டுச் செல்கிறேன் உன்னை.!

புறக்கணிப்பை தாங்கிக்கொள்ள
பக்குவமற்றவளாய்
புறக்கணித்து விட்டு செல்கிறேன் உன்னை

தவிக்கவிடுவதாய் நினைத்து
நித்தம் நித்தம் தவிப்பில் உழன்று
தவிப்பிலே கழிகிறது
புறக்கணிக்கப்பட்ட என் மனது





2 கருத்துகள்:

  1. சமத்தன் சந்தைக்குப் போனால்
    சாமான் வாங்க முடியாது என்பதைப்போல
    அதிக சுதாரிப்பும் அன்பு செலுத்தவிடாமல் செய்து
    அவஸ்தைப் படுத்தும் தானே
    வித்தியாசமான சிந்தனை
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல வரிகள்......தொடருங்கள்

    பதிலளிநீக்கு