திங்கள், ஜூலை 16, 2012

நான் செய்த வைரம்

காலநேரம்

சிரிக்கும் நிலையில்
நான் இல்லை
நாளை வா
நகைச்சுவை சொல்ல..

%%%%

திருடா

நான் உனக்குக்கொடுத்ததும்
நீ எனக்குக் கொடுத்ததும்
எல்லாமும் எழுத்துகள்தாம்
நான் அவைகளை கவிதையாக்கிக்கொண்டேன்
அதையும் நீ திருடிக்கொள்கிறாயே...

%%%%%

நடுத்தரவர்க்கம்

சேகரித்து வைத்த
பழைய காகிதங்களை
வியாபாரியிடம் கொடுத்து விட்டு
கிடைக்கப்பெற்ற பணத்தை
மீண்டும் எண்ணி
பையிற்குள் வைக்கும்போதுதான்
தெரிகிறது, நானும் நடுத்தரவர்க்கமே.!

%%%%%

வடை பாயாசம்

அப்பாவிற்கு திவசம்
பிள்ளைகள் நாங்கள் மறந்தே போனோம்
அம்மா கோவிலுக்குச்சென்றார்
உறவுகளுக்கு வருத்தம்
`எங்கண்ணனை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.’

%%%%%%

ஜேம்ஸ் பாண்ட்

எல்லோரும்
சாகும் போது
நாமும் பிணமாகிறோம்

%%%%%

நான் செய்த வைரம்

மேலே மாட்டியிருக்கும்
செடிகளில் ஊற்றிய நீர்,
கொஞ்ச நேரங்கழித்து,
தொங்கிக்கொண்டிருக்கும் இலைகளில் தேங்கி,
கீழே சொட்டுவதற்கு தயாராகும்,
அப்போது அதன் மேல் விழும்
காலை சூரியன் மின்னும்
அதுதான் இன்று
நான் செய்த வைரம்.

%%%%%%%


15 கருத்துகள்:

 1. குட்டி குட்டியா கொளுத்துங்க

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. சார் உங்களின் வருகையே உற்சாகம். நன்றி

   நீக்கு
 3. ஏதோ புரிஞ்ச மாதிரி இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. நம்ம மூளைக்கெல்லாம் நிறைய தடவை படிக்க வேண்டும் போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாலா சார், அறிவாளிகள் இப்படித்தான், நம்மை மேலே உச்சத்தில் வைத்துப்பேசுவார்கள்

   நீக்கு
 4. நல்ல கவிதைகள்.யாதார்த்த நிலைகளை படம் பிடிக்கிற கவிதைகள்.

  பதிலளிநீக்கு
 5. வரம் அருமை சகோ..:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் அப்போதப்போதே தோன்றியவை சகோ. நன்றி தங்களின் வருகைக்கு

   நீக்கு
 6. கிறுக்கல்கள் தொடர்கின்றன... தொடருங்கள்

  பதிலளிநீக்கு