சீனா, ஹாங்காங், ஐரோப்பியா நாடுகளில் மிக பிரபலமாகப் பேசப்படும் இந்த நீர் வாழ் உயிரினத்தின் உணவு மிக சுவையானதாம். தமிழில் இதன் பெயர் எதுவாக இருக்கும் என கூகுளில் போட்டுப்பார்த்தேன், பூகோள வாத்து என்று வந்தது. அதை அப்படியே போட்டுவிட்டேன். ஆமாம் பேஸ்புக், முக நூல் என்று மாற்றம் பெறும்போது, இதையும் அப்படியே மாற்றிடலாம் தப்பில்லை.
அதிக விலையில் விற்பனையாகும் (கிலோ அமெரிக்க டாலர் 200) இந்த நீர்வாழ் உயிரனத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதன் இனப் பெருக்கத்திற்குப் பாடுபடும் வேளையில், இதனைக் கடத்தும் வேலைகளும் பெரிய அளவில் நடந்துக்கொண்டிருப்பதாக தகவலும் செய்தியில் பரிமாறப்பட்டுள்ளது.
இதனின் ஆயுள் நூற்றுஐம்பது வருடங்களாம். கடல்கரையோறமாக தேங்கி நிற்கும் சேற்றில் ஊறி கழுத்தை மட்டும் வெளியே நீட்டி, நெளிந்து ஊர்ந்து வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்குமாம் இந்த நீர்வாழ்.
இதைப் பிடித்து வருகிற வேலை பேராபத்து நிறைந்ததாகவும், இதில் போடப்படும் பணமும் பெரிய அளவில் இருப்பதால், தற்போது சீனா மட்டுமே இதன் இனப்பெருக்கத்தில் முன்னனி வகிக்கின்றதாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கடற்படை நீர்மூழ்கிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நீர்வாழ் உயிரினம், இப்போது பலவித உணவுகளாக மாறி உலக முழுக்க பிரசித்திப்பெற்று வருகின்றது. இதனை உணவாக வைத்திருக்கும் உணவுக்கடைகள் பெருத்த லாபத்தில் சுழன்றுக்கொடிருக்கின்றதென்கிற தகவலும் சுவாரிஸ்யமே.!
இதுவரை இதை பத்தி கேள்வி பட்டதில்லை :)
பதிலளிநீக்குஅதான் அறிமுகப்படுத்திட்டோம்ல.. நன்றி சகோ.
நீக்குஇதையும் மனிதன் விட்டு வைக்கலையா? சரியான தீனி பண்டாரங்கள் நம் மனித இனம்.
பதிலளிநீக்குஉங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம். நாட்டு வைத்தியமாம் பாலா. பகிர்விற்கும் வருகைக்கும் நன்றி. :))
நீக்குஅதுசரி, இதை தமிழில் எப்படி அழைப்பது?
வாயைப் பிளந்துகொண்டு செல்லும் சுறா, திமிங்கிலங்கள் எல்லாவற்றையும் வயிற்றில் வாங்கிப் போட்டுக்கொள்ளுமாம். அதுபோல், மனிதனும் ஆகிவிட்டான் என நினைக்கையில், இனி நியாயம் என்ன, தர்மம் என்ன? எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல்தான்.
பதிலளிநீக்குபாலகோபாலன் நம்பியார்,
கிள்ளான்
ஹஹஹ
நீக்குநல்ல தகவல் தெரிந்து கொண்டேன்..
பதிலளிநீக்குநன்றி சார் வருகைக்கு..
நீக்குஎல்லாம் சரி சகோ, நீங்க டேஸ்ட் பண்ணுணீங்களா? ஹி ஹி தெரிஞ்சுகலாமுன்னு கேட்டேன்
பதிலளிநீக்குநானே முதல் முறையாகப் பார்க்கிறேன். தொட்டு கூட பார்த்ததில்லை, சாப்பிடுவதா?
நீக்குநான் கேள்விப்பட்டேன், இங்கே ஒரு சீன ரெஸ்டரெண்டில் உள்ளதாம். அதன் ஒன்றின் விலை ரிங்கிட் மலேசியா 600.(சமைக்கப்பட்டதின் விலைதான்).. (ரூபாய் கணக்கு 9000rupees)தேவையா?
நன்றி சகோ.
என்னாது ரூ9000 சர்தான்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நீக்குபார்காதா... கேட்காதா தகவல்.... நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க மகிழ்ச்சி
நீக்குபுதிய தகவலுடன் புதிய உணவும் கூட பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி சிட்டுக்குருவி
நீக்குபுதிய விடயம்..சொல்டீங்க..ஆனாலும் இப்பிடி எல்லாத்தையுமே சாப்பிடனுமா?,ஃ??:(
பதிலளிநீக்குஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!
அதானே.. எல்லாவற்றையும் சாப்பிடனுமா? நன்றி சகோ.
நீக்குஆத்தா நீ நல்லா விவரமாவும்,சுவார்யசமாவும் எழுதர.ஆனா நடுப்பர,நடுப்பர,மாமனாரு,மாமியாரு,கொழுதனாருன்னு,கூட்டு சேத்துக்கரீயே,அதான்
பதிலளிநீக்குகொஞ்ஜம் சகிக்கல.வெலி நாடு வாழ் தமிழர்கலுக்கு அது சுவார்யசம்,ஆனா தமிழ் நாட்டு தமிழர்கலுக்கு,சிவகாசில போய் பட்டாசு விக்கர மாதிரி.
எங்கலுக்கு விவரம் மட்டும் தான் தேவை.பொன்னி அரிசி விலை,கத்திரிகாவும்,வெண்டைக்காவும்,சமைப்பாங்கலா,மாட்டாங்கலா,அங்க இருக்கர
சுத்து பட்டு ரசனை,மக்கல் வாழ்க்கை தரம்,புட்டு,புட்டு,வை ஆத்தா.நாங்க ஒன்னோட கண்ணு வழியாதான் பாத்தாவனும்.வெலி நாட்டு காரனுங்கல,
அந்த சூழ் நிலய நாங்க எப்புடி ஆத்தா எதிர் கொல்ரது.நீ கொஞ்ஜம் சொன்னன்னு வச்சுக்கோ,ஓன் முந்தானைய புடிச்சுகுனே,எல்லாரையும்,எப்பேர்
பட்டவனையும்,திருப்பு,திருப்புன்னு,திருப்புவம்.ஒனக்கு புரியும்னு நெனைக்கரன்,தமிழச்சிக்கு புரியனும்.
பிரியமுடன்:trandharan