சனி, செப்டம்பர் 08, 2012

முகநூல் - FACEBOOK


எல்லோரும் எதாவதொரு வகையில் நற்குணங்களை நம்மில் விதைத்த வண்ணமாகவே இருக்கின்றார்கள்.

நல்லனவற்றைச் செய்கிற போது, அதையே போதிப்பது.

தீயனவற்றைச் செய்கிற போது, அப்படி நாம் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பதை போதிப்பது

ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருக்கும் போது மௌனத்தையும் திடகாத்திரத்தையும் போதிப்பது -

இப்படியே இருந்தால் எவற்றையும் யாரும் போதிக்கத் தேவையே இல்லை, நாமே கற்றுக்கொள்ளலாம் குரு இல்லாமல்.

எங்குமே கிடைக்காத அரிய போதனைகள் இவை..

யார் யாரோ என்னன்னமோ சொல்கிறார்கள் - ஆனால் நான் மட்டும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கின்றேன் இங்கே.

முகநூல் கூட போதிமரமே.

3 கருத்துகள்:

 1. நிச்சயமாக
  பார்க்கத் தெரிந்த கண்களுக்கு
  பார்ப்பதெல்லாம் பாடம் சொல்லும் தானே !
  சுருக்கமான பதிவாயினும்
  சிந்திக்கச் செய்துபோகும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. /// முகநூல் கூட போதிமரமே. ///

  பார்ப்பவர்கள் மனதில் உள்ளது...

  முகநூல் - அதிகம் செல்வதில்லை... (பதிவை இணைக்கும் போது மட்டும்)

  பதிலளிநீக்கு