வியாழன், செப்டம்பர் 06, 2012

யாரோ....???

எனக்கு ஒரு அழைப்பு வந்தது..


“ஹலோ, வணக்கங்க..”

“வணக்கம்..”

“ஜெயராணி இருக்காங்களா?”

“ஜெயராணி..?? யார் கிட்ட பேசனும்?”

“நீங்க ஜெயராணியா?”

“இல்லையே...”

“அப்போ உங்க பேரு என்னா?”

“ஹலோ, யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”

“இல்லேங்க, உங்க நம்பரைக்கொடுத்து, உங்களிடம்தான் பேசச்சொன்னாங்க..”

“என்னன்னு..? நான் ஜெயராணி இல்லையே.! நீங்க யார்?”

“ என் பெயர், எம்  ................, நான் ஒரு எழுத்தாளர்..”

“அப்படியா?.. சரி..”

“ நான், ஆஸ்ட்ரோவும் மலேசிய எழுத்தாளர் சங்கமும்  நடத்துகிற குறுநாவல் போட்டியில் கலந்துக்கப்போறேங்க..”

“அதை ஏங்க என் கிட்ட சொல்றீங்க..!!?”

“இல்லேங்க, உங்களுடை நம்பரைக் கொடுத்துத்தான் போன் போடச்சொன்னாங்க..!”

“யாரு?”

“ டாக்டர்...............”

“என்ன இது அநியாயமா இருக்கு..! அவர் என் நம்பர் கொடுத்துப் பேசச்சொன்னாரா?”

“அவர்தாங்க சொன்னாரு.. கதைய அனுப்பிட்டேன். உங்க கிட்ட கதையைப்பற்றி கேட்டுக்கச்சொன்னார்..”

“ம்ம்ம்.... ஏங்க நீங்க ராங் நம்பருக்கு கூப்பிட்டிருக்கீங்க போலிருக்கு..!!!”

“இல்லையே.. 1234567........ இந்த நம்பர்தானே..”

“சரி, அது என் நம்பர்தான்..ஆனா நான் ஜெயராணி இல்லையே..!”

“ஜெயராணியா இல்லேன்னா என்னங்க..! என் நாவல் வந்திருச்சா?”

சற்று கோபமாக.. “ என்ன உளறல் இது?”

“நான் ரொம்ப கஷ்டப்பட்டு எழுதின நாவலுங்க அது.. கொஞ்சம் சிரமம் எடுத்து பார்த்துட்டு, எனக்கு அழைச்சு சொல்றீங்களா.? ப்ளீஸ்.. என் நம்பர் 12345............”

“சாரி’ங்க பிரதர்... எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. யாரோ உங்களை !கலாட்டா செய்ய என்னை அழைக்கச் சொல்லியிருக்கின்றார்கள். மறுபடியும் நன்றாக விசாரித்து விட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்க.. சரியா. ! bye."

“ ஒகே..சிஸ்... bye"


இப்படியெல்லாம் கூட நடக்கிறதுங்க... என்னன்னு சொல்றது.!! :(


12 கருத்துகள்:

  1. பரவாயில்லை,ஏதோ நாகரீகமா நடந்துகிட்டாங்கனு சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. ரொம்ப அடக்கமா அப்பாவியாகப் பேசினார்.அதான் நானும் என்ன சொல்ல வருகிறார் என பொறுமை காத்தேன்

      நீக்கு
  2. இப்படி எல்லாமா...? நம்பரை மாத்துங்க...!

    பதிலளிநீக்கு


  3. இந்த அன்சொலிசிடட் கால்ஸ் எனச்சொல்லப்படும் தொலைப்பேசி கூப்பிடுகளை இல்லை கூப்பாடுகளை
    எப்படி நிறுத்துவதே என்றே தெரியவில்லை.

    எனக்கு வயது 70. என் மனைவிக்கும் வயது அதே . எங்களுக்கு கடன் வேண்டுமா, கூபன் வேண்டுமா, இந்த இன்வெஸ்ட்மென்ட்
    அந்த வீட்டு ப்ளாட் என்று தினம் பத்து தரம் ....தொல்லை தாங்கமுடியவில்லை சாமி.

    டு நாட் டிஸ்டர்ப் என்று ஒரு பதிவு லே ரிஜிஸ்டர் செய்துகொண்டால் மேற்கொண்டு கால் வராது என்றார்கள்.
    அதில் பதிவு செய்தும் பிரயோஜனம் இல்லை.

    நமது தொழிற் நுட்பம் இன்னமும் வளமடைந்தால் தான் இந்தக் கால்களை நிறுத்த முடியும் என்றே தோன்றுகிறது.

    நமது தொலைபேசி அல்லது கைப்பேசியில் பதிவான நம்பர்களைத் தவிர வேறு ஏதேனும் எண்களில் இருந்து
    நமக்கு கால் வரின், உடன் அது ஒரு பொது எண்ணுக்கு ரி டிராக்ட் செய்யப்படவேண்டும். அது அங்கே
    உண்மையான அழைப்புதான் என்று ஆமோதிக்கப்பட்ட பின்பு தான் நமக்கு மணி அடிக்கவேண்டும்.

    அந்த தொழிற் நுட்பம் மேல் நாடுகளில் இருக்கிறது. எந்த தொலை பேசியிலிருந்து அழைப்பு வருகிறதோ, அந்த‌
    இணைப்பின் சொந்தக்காரர் பெயருடன் சேர்ந்து தான் டிரிங்க் டிரிங்க் வருகிறது.

    இங்கேயும் அது போல் வருவது சாத்தியமா?

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த தொழிற் நுட்பம் மேல் நாடுகளில் இருக்கிறது. எந்த தொலை பேசியிலிருந்து அழைப்பு வருகிறதோ, அந்த‌
      இணைப்பின் சொந்தக்காரர் பெயருடன் சேர்ந்து தான் டிரிங்க் டிரிங்க் வருகிறது.// அட அற்புதமான முறையாச்சே.நமக்கு என்றுதான் கிடைக்குமோ இந்த சலுகைகள்.! நன்றி ஐய்யா பகிர்விற்கு. தொடர்ந்து பகிருங்கள்.

      நீக்கு
  4. சிலர் இருக்காங்க எதிர் முனையில் இருப்பவர் யாரென்றே தெரியாமல் தாங்கள் மனப்பாடம் செய்து (!) வைத்திருந்ததை ஒப்பித்துவிட்டு நாம் என்ன சொல்கிறோம் என்று கேட்க கூட முயர்சிக்காமல் போனை துண்டித்து நம்மை சுத்தலில் விடுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவப்பகிர்வோ சகோ.. :) நன்றி. என்னுடைய பயணக்கட்டுரையை பிறகு படிக்கிறேன் என்றீர்களே. படித்தீர்களா? நல்லா இருக்கா?

      நீக்கு
  5. “சரி, அது என் நம்பர்தான்..ஆனா நான் ஜெயராணி இல்லையே..!”

    “ஜெயராணியா இல்லேன்னா என்னங்க..! என் நாவல் வந்திருச்சா?”//

    இந்த டைலாக்தான் தங்களுக்கு
    எரிச்சலையூட்டி பதிவு போட
    வைத்திருக்கும் என நினைக்கிறேன்
    சுவாரஸ்யமான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சார்.. ஆரம்பத்திலேயே எரிச்சல் வந்து விட்டது. ஆனால் அவர் எந்த ஒரு சலனமுமில்லாமல் அப்பாவியாகப்பேசியதால் தொடர்ந்தேன்.

      என் பெயர் ஸ்ரீவிஜயலக்ஷ்மி. என்னை ஸ்ரீ, விஜி, ஜி, விஜயா, ஜெய், ஜெயா, லக்ஷ்மி...என்றெல்லாம் அழைப்பார்கள். அதனால் ஜெயராணி என்றதும் ஏறக்குறைய நெருக்கம் இருந்ததால், பேச்சுக்கொடுத்துப்பார்த்தேன். :)
      கதைகளை அனுப்பிவிட்டு எப்படியெல்லாம் போராடுகிறார்கள் பார்த்தீர்களா..! இந்த தொல்லைக்குத்தான் நான் இலக்கியப் போட்டிகளிலே எல்லாம் கலந்துக்கொள்வதில்லை. பிழைத்துப்போகட்டும் என்று.. :P

      நீக்கு
  6. அலைபேசியில் இது போல நிறைய தொந்தரவுகள்....

    ம்ம்... எப்போது விடுதலை இதிலிருந்து!

    பதிலளிநீக்கு