சனி, செப்டம்பர் 15, 2012

விக்டோரிய ஸ்டேஷன் (Victoria Station)

ரம்லான் பெருநாள் தொடங்கி ஒரு மாதகாலம் முடிவுக்கு வருவதால், அதைக்கொண்டாடும் இறுதிகட்ட விருந்துகள்  கடந்த ஒரு வாரகாலமாக ஓயவேயில்லை எங்களின் அலுவலகத்தில். மதிய உணவு கொண்டுவரவேண்டாம் எங்களின் டிப்பார்ட்மெண்டில் விருந்து, வந்து கலந்துக்கொள்ளுங்கள் என்கிற மின்னஞ்சல் வந்த வண்ணமாக இருந்தது.

தினமும் அலுவலக வளாகத்திலேயே நடைபெற்ற விருந்துகளை விட, நேற்று கலந்துக்கொண்ட விருந்து எனக்கு சற்று வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. எங்களின் டிப்பார்ட்மெண்ட் ஏற்பாடு.

விக்டோரிய ஸ்டேஷன் என்கிற ஐரோப்பிய ரெஸ்டரண்டில் இந்த மதிய வேளை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு ஐரோப்பிய வகை உணவுகள். ஓரளவுதான், நம்மவர்களின் உணவுபோல் இல்லை. எப்பேர்பட்ட தங்கத்தட்டில் சாப்பாடு கொடுத்தாலும் வாழையிலையில் சாப்பிடுவதைப்போல் வராது. அது வேறு விஷயம். இருப்பினும் விருந்து என்று வந்து விட்டால் எல்லாவகை உணவுகளையும் ருசி பார்த்து உண்பதென்பது ஒருவித அனுபவமே.

அங்கே பரிமாறிய உணவுவகைகள் - Lobsters, fish & chip, chicken chop, beef chop, baked patato, corn stick, baked prawn, escargots, butter & bread, coffee, fruits juice  என இப்படிப் பலதரப்பட்ட உணவு வகைகள். உணவுகளின் சிறப்பு என்னவென்றால், எதிலுமே காரமில்லை, புளிப்பு இல்லை, அதிக கரிப்பு இல்லை, அதிகமான இனிப்பும் இல்லை, சோறு இல்லை. பொரியல் இல்லை, குழம்பு இல்லை. (இதெல்லாம் இல்லாமல் ஒரு தமிழனை சாப்பிட வைப்பதென்றால் சும்மாவா.!) அதனால் இவையெல்லாம் நமக்குச் சரிபட்டு வராது. விடுங்க.

உணவு ஒரு பக்கமிருந்தாலும், அந்த உணவு விடுதியின் சூழல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. பழைய பாணி ரயில் வண்டியின் பெட்டியில் அமர்ந்துக்கொண்டு சாப்பிடுவதைப்போன்ற உணர்வைக் கொடுத்துக் கொண்டிருந்தது.எங்கு பார்த்தாலும் பழைமை மாறாத தோற்றங்கள்.

1800களில் தொடங்கப்பட்டு இன்னமும் அதே பரபரப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் உலகப் பிரசித்திப்பெற்ற லண்டன் விக்டோரிய ரயில்வே ஸ்டேஷனின் ஆரம்ப கால நிலையைப் பறைச்சாற்றுகின்ற சூழலாகவே இருந்தது அந்த ரெஸ்டரெண்ட்.

பழைய வானொலிப்பெட்டி, கடிகாரம், நீர் கோதிக்கவைக்கும் கேத்தல், தொலைக்காட்சிப்பெட்டி, திசைகாட்டும் கைவிளக்குகள், புகைவண்டி நிலையத்தில் பயன்படுத்திய பழைய பொருட்கள் என எல்லாமே பார்ப்பதற்கு வித்தியாசமாகவே இருந்தது. சுற்றிலும் உள்ள பொருட்கள் மின்சாரம் இல்லாத பழைய காலத்தை நினைவுக்கூர்ந்தன.

ஆரம்பத்தில் எனக்குப்புரியவே இல்லை. ஏன் இந்த விக்டோரிய ஸ்டேஷன் ரெஸ்டரெண்ட் இப்படி வித்தியாசமாக இருக்கின்றதென்று.! எங்களின் குழுவில் உள்ள சக பணியாளர் ஒருவர், லண்டனுக்குச் சென்றிருக்கையில் இந்த ரயில்வே ஸ்டேஷனை நேரில் கண்டுள்ளதால், அங்கே உள்ள சூழல் பற்றி எங்களோடு பகிர்ந்துக்கொண்டார். கூடுதல் தகவல் பெற, விக்கிபிடியாவில் காணலாம்.

# பி.கு : உணவுகளின் விலையும் அதிகம் இங்கே - ஃபைவ் ஸ்டார் ரேஞ்சில்#


நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு மேஜையில் அமர்ந்துக்கொண்டோம்.. சாப்பிட்டுக் கிளம்பும்போது எடுத்த புகைப்படம் இது.

பழைய பாணி ரயில் பெட்டியின் அருகில் நானும் என் சக பணியாளரும்.


நாங்கள் சாப்பிட்ட உணவுகளின் வகைகள். முதல் முதலில் இருப்பது ஒருவகை நத்தை. 


அந்த ரெஸ்டரெண்டின் உள்ளே உள்ள சில காட்சிகள். 

10 கருத்துகள்:

  1. வித்தியாசமான அனுபவப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு...

    //சோறு இல்லை. பொரியல் இல்லை, குழம்பு இல்லை. (இதெல்லாம் இல்லாமல் ஒரு தமிழனை சாப்பிட வைப்பதென்றால் சும்மாவா.!) அதனால் இவையெல்லாம் நமக்குச் சரிபட்டு வராது. விடுங்க. //

    அதானே.... :))

    பதிலளிநீக்கு
  3. பழமை பேசும் உணவகம் என்று சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. //சோறு இல்லை. பொரியல் இல்லை, குழம்பு இல்லை//

    பார்ரா...இப்படி எல்லாம் பாத்தா...பட்டினிதான்...வெளுத்து கட்டனும் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிட முடியவில்லை சகோ. சுவை சரிப்பட்டு வராது. தினமும் அதையே எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஆரோக்கியமான உணவு

      நீக்கு
  5. அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    தங்கள் அனுபவத்தை
    நாங்களும் அனுபவித்ததுபோல் இருந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு