புதன், நவம்பர் 28, 2012

மௌனம் போதிக்கப்படுகிறது

கற்க கற்க
மௌனம்
போதிக்கப்படுகிறது

%%%%%

வாங்கிய மூச்சு

கனவில் ஓட்டப்பந்தயம்
நான் முன்னே
நானே முன்னே
முதல் நிலையில் நானே
கனவில் மட்டுமே
இது சாத்தியம் மூச்சுவாங்காமல்..

%%%%%%

ஒப்பனை

வெள்ளையடித்து
வர்ண சாயம் பூசி
திஷ்டி பொட்டோடு
கிளம்பியாச்சு
பணிக்கு...

%%%%%%

ஞாயிறு

அமைதியான சூழல்
கடிகார முள் டிக் டிக் டிக்
தலையணையை தேடும் தலைகள்
அதற்குள் விடிந்துவிட்டதோ என
போர்வைக்குள்.. 
மீண்டும் புகுந்துக்கொள்கிறது
இந்த உடல்..

%%%%%%

வெட்டியாய்..

எதற்காக இந்த பரபரப்பு?
தெரியாமலேயே பல நாள்கள்
என்னை விட்டு ஓடி
மறைந்து கொண்டிருக்கிறது.

%%%%%%

கீச்சுக்குரல்

மாட்டிக்கொண்ட எலியும்
மரத்தில் உள்ள குருவியும்
ஒரே மாதிரி கீச்சிடும்

%%%%%%%%

கண்சிமிட்டல்

கண் சிமிட்டும்
கேமராக்களின் முன்
கலகலப்பாக இருக்கின்றோம்
காலம் கடந்த பொழுதுகள்
நம்மைப் பார்த்து
கண்ணடிப்பதற்காக..

9 கருத்துகள்:

  1. எல்லாமே செம எளிமை மற்றும் கியூட். முதல் கவிதை மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  2. முதலும் ஞாயிறும் கண் சிமிட்டலும் மிகவும் பிடித்தது...

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு வரியும் அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அழகான குட்டிக் குட்டி கவிதைகள்..
    நீங்க மட்டும் ஓடினாலும் நீங்கதான் முதலாவதா வருவீங்க....
    கவலைப்படாதீங்கோ கனவு ஓர் நாள் நிஜமாகும்

    பதிலளிநீக்கு