புதன், ஜனவரி 09, 2013

வெற்று உரையாடல்

நேற்று கோவிலுக்குப்போணோம்..
`ஆமாம் போணோம்.’

அங்கே நான் கட்டிய மாலை, பார்த்தாயா? எப்படி?
`பார்த்தேன், ரொம்ப அழகா இருக்கு..’

ஐய்யோ, சேலையை மேலேயே கழற்றிப்போட்டுவிட்டேனே.. துவைத்து விட்டாயா?
`ம்ம்ம்.. துவைத்துக் காயப்போட்டு மடித்து வைத்தாச்சு.’

நிறைய பலாக்கொட்டைகள் கொண்டுவந்தேனே..எங்கே வைத்தாய்?
`ஐஸ் பெட்டியில் இருக்கே.’

அறிவிருக்கா உனக்கு? அத போய் யாராவது ஐஸ் பெட்டியில் வைப்பாங்களா. பிரட்டு நெத்திலி போட்டு, சாப்பிடலாம்.
`சரி, அப்படியே செய்கிறேன்.’

நாளைக்கு என்ன நாள்..?
`வியாழக்கிழமை..’

நான் அதைக்கேட்கல, என்ன விஷேசம்?
`ம், என்ன விஷேசம்?’

உனக்குத்தெரியாதா?
`சொல்லுங்களேன்..’

கோவில் திருவிழா. போகணும். நகையெல்லாம் எடுத்துவை.
`சரி எடுத்து வைக்கிறேன்.’

சாமீ ஊர்வலம் வருமே. கச்சான் பொங்கச்சோறு ஆக்கணும், எல்லாம் வாங்கிட்டியா?
`ஆ, எல்லாம் வாங்கிட்டேன்.’

வடை சுடு, தேர் கூட ஆள் வருவாங்க.. கொடுக்கலாம்..
`ம், சுடறேன்.’

எப்படி சுடுவே? சரி உனக்குத்தெரியாது. பருப்பு உளுந்து ஊறபோட்டிருக்கேன் அரைச்சு வை. உப்பு நா போடறேன். சரியா? நீ கூட போட்டுடுவ, பெரியவன் சாப்பிடமாட்டான்.. !
`ஓகே.’

உனக்கு நீண்ட லீவா? ரொம்ப நாள் இங்கேயே இருக்க..!? எப்பப் போவ?
`இந்த வாரம் போயிடுவேன்..’

அவ யாரு.? நம்ம வீட்டுக்குள் மலாய்க்காரி?
`விருந்தாளி.’

மாலாய்க்காரியெல்லாம் கோவிலுக்கு வருவாங்க?
`இல்லை அவ இங்கே இருப்பா..’ (இந்தோனீசியப்பணிப்பெண்)

ஆமாம், இப்போ நான் எங்கே இருக்கேன்???
`நம்ம வீட்டுல..!!’

ஓ விஜியா? ச்சே நான் மறந்தே போயிட்டேன். நாம இங்கே இருக்கோம்ல..ம்ம்ம்ம்...

(எங்குமே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும், என் மாமியிடம் தினமும் நான் பேசும் வெற்று உரையாடல் இது. ஆரம்பத்தில் கோபம் வெறுப்பு வந்தது..இப்போது எல்லாமும் மறைந்து.. அவரிடம் குழந்தையாக நானும்....!!! )

8 கருத்துகள்:

  1. வயதானவர்களும் ஒரு வகையில் குழந்தைகளே. சிறிய இடைவெளிக்கு பிறகு எழுதி இருக்கிறீர்கள். பொங்கல் வாழ்த்துக்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
  2. பாலா சார்.. நன்றி. பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும். தலைப்பொங்கல்தானே..!!

    பதிலளிநீக்கு
  3. அருமையா சொல்லியிருக்கீங்க... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. முதுமைக்கும், இளமைக்கும் இடையே யதார்த்தமான உரையாடல்.
    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்சாக வாசகங்களுக்கு நன்றி சார்

      நீக்கு

  5. (எங்குமே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும், என் மாமியிடம் தினமும் நான் பேசும் வெற்று உரையாடல் இது. ஆரம்பத்தில் கோபம் வெறுப்பு வந்தது..இப்போது எல்லாமும் மறைந்து.. அவரிடம் குழந்தையாக நானும்.//

    வயதானவர்களும் குழந்தைகள் போலத்தானே
    புதிய பாணியில் சொல்லிச் சென்றது அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு