திங்கள், மார்ச் 11, 2013

காணாமல்..

நான்
காணாமல்
போகப் போகிறேன்

உள்ளே இருக்கும்
வலி
என்னைக் களவு கொள்ளலாம்

போராட்டங்கள்
என்னைக் காவுகொள்ளலாம்

ஒரு துளி விஷம்
என் மேனி
நீலமாகலாம்..

போகிற வழியில்
தினக்காட்சி சாலையில்
நானும் சிக்கலாம்

முள் குத்தலாம்
மூச்சுத்திணறல் வரலாம்

காலையில் எழாமலேயே
போகலாம்..

தனிமை வேண்டி
நானே என்னை
மறைத்துக்கொள்ளலாம்

சில மிருகங்கள்
என்னைக் குதறலாம்

நீயும் காரணமாகலாம்

காரணமில்லாமலே
நான்
காணாமலும் போகலாம்

6 கருத்துகள்:

 1. உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பொதுவானது தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிங்க.. வாசித்து கருத்திட்டமைக்கு

   நீக்கு
 2. காரணமில்லாது காணாமல் போக கொடுத்து வைத்திருக்க வேண்டும்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதேதான் வெங்கட். நன்றி வருகைக்கு. :)

   நீக்கு
 3. காணாமல் போக எத்தனையோ வழிகள்...

  அருமையான கவிதை...

  நல்லாயிருக்கு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குமார் வருகைக்கு நன்றி.. வாழ்த்திற்கும் நன்றி

   நீக்கு