திங்கள், மார்ச் 11, 2013

காட்சிகள் புதிது

யாரிடமாவது
மனம் விட்டுப்பேச வேண்டும்
யாரிடம் என்றுதான்
இதுவரையிலும் தெரியவில்லை.!

%%%%%

அதிகாலை நடைப்பயிற்சி
ஆயுள் கொஞ்சம்
தள்ளிப்போகிறது..!

%%%%%%

பூட்டி வைக்கப்பட்டுள்ள வீட்டிற்குள்
பாதுகாப்பாகவே இருக்கின்றன
மிருகங்கள்

%%%%%%

அதிகமான வலியின் போது
வேகமாகவே வெளியேறுகிறது
மலம்..

%%%%%

பாதைகள் மாறிவிடும்போது
காட்சிகள் அங்கே
புதிதுதான்..4 கருத்துகள்:

 1. விஜி,

  முதல் கவிதை உள்மனதை உருக்குகிறது. தனிமையின் கொடுமையை அல்லது நட்பின் உறவின்மையின இருப்பை. அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதானே சார். யார் யாரோ நண்பர் என்று எமார்ந்து போனதுதான் மிச்சம்.
   நன்றி சார்.

   நீக்கு