புதன், ஜூன் 19, 2013

பாம்பு

நேற்று இரவு மூணாவது வீட்டில் பாம்பு புகுந்துவிட்டது. பெரிய பாம்பாம்.! இந்த விவரம் எனக்குத்தெரியாது. இன்று காலையில் கைப்பேசியில் என் அண்டைவீட்டுக்காரர் கொடுத்திருந்த ஆறு மிஸ்ட் கால்ஸ் பார்த்தவுடன், அவருக்கு அழைப்பு விடுத்தேன். என்ன கதை என்று கேட்டால், பாம்பு மூன்றாவது வீட்டின் குசினியில் புகுந்துள்ளது, அதைப் பிடித்து அடிக்கப்போராட்டம் நடத்துகிறபோது அது இரண்டாவது வீடான இவர்களின் வீட்டின் கொல்லைப்புறத்தில் பதுங்கிக்கொண்டதாம்.! இதைக்கேள்விப்பட்ட என் அண்டைவீட்டுக்காரர், எனக்கும் அழைத்துள்ளார்.

“சரி, உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் பாம்பு பதுங்கிக்கொண்டது என்கிறீர்களே, பிறகு ஏன், தூங்கிக்கொண்டிருந்த என்னை அழைப்பானேன்.?”

“எனக்கு ஒரே பயம். தூக்கமே வரவில்லை. பெரிய பாம்புங்க.. நாகப்பாம்பாம். விஷப்பாம்பு. நான்வேறு சிறுகுழந்தையை வைத்திருக்கேன்.. பயமிருக்காதா?”

“ஓ..அதுசரி, அந்த இரவு நேரத்தில் என்னை ஏன் எழுப்பினீர்கள்?”

“வீட்டுக்காரர் வேறு வெளியூர் வேலைக்குச் சென்றுள்ளார்..”

“ஓ..ஒகே, என்னை ஏன் அழைப்பானேன்..?”

“அதோட வால் பகுதி, என் கட்டை விரல் தடி.. அப்போ பாம்பு எவ்வளவு பெரிதாக இருக்குமென்று யூகித்துக்கொள்ளுங்கள்..!”

“அதுசரி சுசி, என்னை எதற்கு அந்த இரவு வேளையில் எழுப்பினீர்கள்?”

“அக்கம் பக்கத்தில் ஒரே அமளியா இருந்தது. உங்களைக்காணோமே என்று..”

“சரி.. அதுக்கு என்னை அழைத்து..!!?”

“இல்லை நீங்களும் கொஞ்சம் ஜாக்ரதையாக இருங்கள் என்பதற்காகத்தான்..”

“உங்கள் வீட்டில் பாம்பு நுழைந்ததிற்கு நான் ஏன் ஜாக்ரதையாக இருக்கவேண்டும்..!?”

“இல்லை.. நாம் மட்டும் தூங்காமல் போராடும்போது, உங்களுக்கு என்ன தூக்கம்வேண்டிக்கிடக்கு, அதான்...!!”

“ம்ம்ம்..இந்த பதிலுக்குத்தான் நான் காத்திருந்தேன்.”

இதுதான் சராசரி இந்தியன் குணம்.

3 கருத்துகள்:

 1. பாம்போடு எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. இருப்பினும் அதைப்பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். பாம்பென்றால் படையும் நடுங்குமாம்.

  //“இல்லை.. நாம் மட்டும் தூங்காமல் போராடும்போது, உங்களுக்கு என்ன தூக்கம்வேண்டிக்கிடக்கு, அதான்...!!”

  இதுதான் சராசரி இந்தியன் குணம்.//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ;)))))

  நல்லாவே சொல்லிட்டீங்கோ. பாராட்டுக்கள்.

  எங்கோ வந்த பாம்பை வைத்தே ஒரு பதிவு போட முடிந்துள்ளது. வாழ்க அந்த ’நல்ல பாம்பு ’

  பதிலளிநீக்கு
 2. வாழ்க அந்த ’நல்ல பாம்பு ’

  ஹாஹா- நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 3. இறுதி வரி அருமை

  பதிலளிநீக்கு