ஞாயிறு, மார்ச் 02, 2014

மாமிகதை - விடியல்

இரவெல்லாம் அழைத்து அழைத்து தொல்லை செய்த மாமியின் செய்கை இரண்டு நாட்களாக விசித்திரமாகவே இருக்கின்றது. விடியற்காலை நான்கு மணிக்கு நான் வெளியே அமர்கிறேனே என்கிறார். வெளியே யாரும் இல்லை, என்றதிற்கு, பரவாயில்லை நான் அமர்கிறேன் என்று அடம்பிடித்தார். சரி வாருங்கள் என்று வெளியே அழைத்துச்சென்ற போது..

“ அய்யோ.. என்ன இன்னும்விடியவில்லை.? இருட்டாக இருக்கிறதே.. !!?” என்கிற முனகல், சலிப்புடன்.. 

இன்றைய கச்சேரி என்னாகுமோ தெரியவில்லை. நாளைக்கு வேலை. இரண்டு நாள் விடுமுறை பொழுது மாமியிடம் மல்லுக்கட்டுவதிலேயே முடிவடைந்தது.

வேலைக்குக் கிளம்பிச் செல்லுகையில், என்னுடைய யூனிபர்ம்’ஐ இறுக்கிப்பிடித்துக்கொண்டு, வேலைக்குச்செல்லாதே, என்பார்.

பரிதாபம் என்பதைவிட, கோபம் ஜாஸ்தியாக வருகிறது.. சிலவேளைகளில் எனக்கு.!

2 கருத்துகள்:

 1. பெயரில்லா3/04/2014

  Its a situation i've been in before and i had felt just like you.

  Why she does not let go of your uniform ? We never let go off of the thing we need / love / trust / believe most.

  I am sure, someday you'll feel how important were to your mother-in-law.

  God bless.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். நன்றிங்க.. பெயர் சொல்லுங்க. ப்ளீஸ். பெயரில்லா என்று மட்டும் வருகிறது உங்களின் பெயர்.

   நீக்கு