வியாழன், ஏப்ரல் 03, 2014

தோற்றம் கற்றல்..


 மனசுதான் அழகு.?
இந்த நம்பிக்கையில்
அவநம்பிக்கையே மிஞ்சுகிறது.!

எங்கும்
முகலட்சணமே
முதல் தேடல்..

நேர்முக தேர்விற்கு
அக அழகு ஓரங்கட்டப்படலாம்
ஒரே நாளில் தெரிவதில்லையாதலால்..

அழகற்றவள் தூற்றப்படுகிறாள்
காதலிப்பதற்கு தகுதியற்றவள்
நகைச்சுவையாக திணிக்கப்படுகிறது
சினிமாவிலும்...

ஆள் பாதி ஆடை மீதி
ஆளை மறைத்தும் மறைக்காத
ஆடைகளில் மின்னும் அழகு,
மின்மினிப்பூச்சி

பணியிடம்
அலங்காரமற்ற முகம்
கலையிழந்த சூழல்

முதல் ஈர்ப்பு
பலகோணங்களில்
பலரின் கோணங்களில்
வெளித்தோற்றம் புதுப்பிக்கப்படுகிறது
வெளித்தோற்றம்
முதல் ஈர்ப்பு

வேலைக்குச் செல்லும்
பெண்ணானவளுக்கு
மூடி மறைக்கின்ற
முகப்பூச்சுகளை
அப்பிக்கொண்டு மிஞ்ச எண்ணுவதுதான்
தொடர் கற்றல் பயிற்சியாக
மிஞ்சி நிற்கிறது..

4 கருத்துகள்:

  1. முக நூலிலும் அப்படியே. அதனால்தான் அது முகநூலானது. அகநூல் என்று பெய்ரிட்டிருக்கலாம். ம்.. எவரும் லைக் போடமாட்டார்கள் அப்புறம்.

    பதிலளிநீக்கு
  2. அருமை....

    பல சமயங்களில் அடுத்தவர்களுக்காகவே முகப்பூச்சுகளும், அலங்காரங்களும் எனத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு