செவ்வாய், மே 01, 2012

தொழிலாளர் தின வாழ்த்துகள்


வளர்ந்து வரும் ஒரு வாசக எழுத்தாளரை, பள்ளியில் போதிக்கின்ற ஒரு ஆசிரியர் விமர்சிக்கின்றார் இப்படி!

உன் எழுத்தில் பிழை இருக்கு, உனக்கு இலக்கண அறிவு இல்லை. ஆராம்பப் பள்ளி மாணவன் எழுதுகிற தமிழின் நிலைமையை விட உனது தமிழ் மோசமானது, தமிழே சரியாக எழுதத் தெரியாத நிலையில், பேனா பிடிப்பதால், இந்த இலக்கிய சூழல் பாழாய்ப்போகும். அதை முதலில் வளர்த்துக்கொள், பிறகு எழுத்தாளராக வலம் வரலாம்.

பல மாணவர்களை வளர்த்து விடுகின்ற அரிய பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆசிரியரின் பார்வையைப் பார்த்தீர்களா?  அவரிடம் பாடம் படிக்கும் குழந்தைகளின் நிலையை நினைத்துப்பார்த்தீர்களா?
மனநோயாளிகளின் உற்பத்தித் தொழிற்சாலை எது என்று புரிகிறாதா? அவர்களை உருவாக்குகின்ற அரிய பங்கு யாருடையது, பார்த்தீர்களா?

நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அருகில் நின்றுக்கொண்டு, பல்லைக்காட்டி புகைப்படம் எடுத்து பத்திரிகையில் போட்டுக்கொள்கிறார்கள்.... இவர்களால் அம்மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்களாம்.!? அதுவும் மலேசிய சூழலில்.!?

நல்ல பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகளை பெற்றோர்கள்தான் கல்வி, ஒழுக்கம், கட்டுப்பாடு, சுயமரியாதை, தன்னம்பிக்கை, பணிவு  போன்றவற்றை ஊட்டி வளார்க்கிறார்கள், ஆசிரியர்கள் அல்ல.!  மார்த்தட்டிக்கொள்கிறார்கள் வெட்கமில்லாமல்.

9 கருத்துகள்:

  1. மே தின வாழ்த்துக்கள்

    சகோ, இந்த மாதிரியான ஆசிரியருக்கு கருட புராணம் படி என்ன தன்டனை கொடுக்கலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொழிலாளர் தின வாழ்த்துகள். வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி சகோ..தொழிலாளர் தின வாழ்த்துக்கள்/

    @@ சகோ, இந்த மாதிரியான ஆசிரியருக்கு கருட புராணம் படி என்ன தன்டனை கொடுக்கலாம்? @@
    வேண்டுமானால். கருட புராணத்தில் ரொம்ப முக்கியமான ஃபேமஸான 28 தண்டனைகளையும் தந்திடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்வதை நீங்களே..டப்பிங்க வாயிஸ்.? பகிர்வுக்கு நன்றி குமரன்.

      நீக்கு
  3. ஒரு ஆசிரியரின் பணியே தட்டிக்கொடுப்பது.தவறை சுட்டிக்காட்டுவது.மாறாக குட்டிக்குட்டி குனிய வைக்கக் கூடாது.நச்சுனு சொல்லியிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் மேடம்.

    இப்படி செய்வது ஒரு ஆசிரியரின் பண்பல்ல. இப்படி செய்பவர் ஆசிரியரே அல்ல.

    ஆனால் நான் மார்தட்டிக்கொள்வேன். :)

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு