அப்பாவிற்கு திருமணம்
அப்பாவிற்கு முதலிரவு
அப்பாவிற்கு தேனிலவு
தம்பதிகளுக்கு தனியறை
தினமும் தலை குளிக்கும் சித்தி
ஊரில் பேசிக்கொள்கிறார்கள்
`குழந்தைகளுக்காக மறுமணம்’!
அப்பாவிற்கு முதலிரவு
அப்பாவிற்கு தேனிலவு
தம்பதிகளுக்கு தனியறை
தினமும் தலை குளிக்கும் சித்தி
ஊரில் பேசிக்கொள்கிறார்கள்
`குழந்தைகளுக்காக மறுமணம்’!
ஆமா ஆமா அடுத்த குழந்தைகளுக்காக மறுமணம்
பதிலளிநீக்குகுழந்தைகளுக்காகவே மறுமணம்
நீக்குகீழே இருக்கும் வரிகளை உங்கள் கவிதையின் தொடர்ச்சியாக வைத்துக்கொண்டாலும் சரி, உங்களுக்கான பதிலாக வைத்துக்கொண்டாலும் சரி. இவை அனைத்தும் உண்மை.
பதிலளிநீக்கு//தினமும் தலை குளிக்கும் சித்தி
ஊரில் பேசிக்கொள்கிறார்கள்
`குழந்தைகளுக்காக மறுமணம்’!
அப்படிபட்ட சித்தியின் இரண்டு மகன்களுள் ஒருவன் நான்....
குழந்தைகளுக்காக திருமணம் என்று காரணம் சொல்லி மணமுடித்து அழைத்து வரப்பட்ட இரண்டாம் தாரத்தின் மகன் நான்....
சித்தி கொடுமைக்காரி என்று ஊரார் சொல்லி விடுவார்களோ என்று அஞ்சி, தொட்டிலில் அழும் என்னை கண்டு கொள்ளாமல், மூத்தாரின் பிள்ளைகளான என் சகோதர சகோதரிகளை கவனித்த சித்தியின் பிள்ளை நான்....
சுய விருப்பு வெறுப்புகளை விட்டு, கணவனுக்காக தினமும் தலை
குளித்த சித்தியின் மூத்த மகன் நான்.
இன்று வரை எந்த பண்டமானாலும் மூத்தாரின் பிள்ளைகளுக்கு பங்கிட்ட பின்னரே எனக்கு கொடுக்கும் சித்தியின் மகன் நான்.
சாகும்வரை அவர்கள் உடன்பிறந்தவர் என்பதை தவிர எந்த எண்ணமும் எனக்கு வந்து விடக்கூடாது என்று சொல்லி சொல்லி அடித்து அடித்து வளர்த்த அதிசயமான இரண்டாம் தாரத்தின் மகன் நான்.....
பாலா சார் அதைத்தானே நானும் சொன்னேன்..தப்பா ஒண்ணும் சொல்லவில்லையே. குழந்தைகளுக்காவே மறுமணம். பகிர்விற்கு நன்றி பாலா. நல்ல வளர்ப்பு.
பதிலளிநீக்குநான் தவறாக புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். தங்கள் சுகத்துக்காக திருமணம் செய்து கொண்டு சித்தியாக வீட்டுக்கு வருபவர் பற்றி கூறி இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். ஆகவே இப்படிப்பட்ட நல்ல சித்திமார்களும் இருக்கிறார்கள் என்ற அர்த்ததிலேயே அப்படி சொன்னேன். தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் மேடம்.
பதிலளிநீக்குஹா ஹா மிக அருமை
பதிலளிநீக்கு-இப்படிக்கு கவிதை புரிந்தமாதிரியே மெயிண்டேன் செய்பவர்கள் சங்கம்// ஹஹஹ நன்றி பாலா..மன்னிப்பெல்லாம் கேட்டால் நான் மன்னிக்கமாட்டேன். கோபித்துக்கொள்வேன். சரியா.?
மெயிண்டேயின் பண்ணுங்க.. அதுதான் உங்களுக்கு நன்றாக வரும்.
நீக்குஹா ஹா அப்படியே மெயின்டெயின் செய்கிறேன் மேடம். எல்லோரையும் மன்னிப்பு கேட்டு சரிக்கட்ட முடியுமா? ஒரு ஆளாவது கோபிக்க வேண்டாமா? கோபித்துக்கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குநான் சித்தியைச் சொல்லவில்லை - தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும், அப்பாவிற்கு.
நீக்குச்சே ஆசிரியரிடம் கோபித்துக்கொண்டால், அறிவு வளராது.
ada!
பதிலளிநீக்குbaala sir!
ninaiththathu polthaan-
naanum ninaiththen-
ungal pinnoottam paditha pirakuthaan-
thelinthen!
athu sari-
naan oru tube lighto....!?
டூ இன் ஒன்
பதிலளிநீக்கு