இன்று காலையில் கணவரிடம் பேசிக்கொண்டிருந்த போது (காப்பி நேரம்) முட்டாள்தனமான ஒரு விவரத்தை வீர செய்கை போல் என்னிடம் பகிர்ந்தார்.
நண்பரின் மகன் 13வயது, அவனுடைய நண்பர்களோடு சேர்ந்து சிகரெட் புகைக்கும் போது கையும் களவுமாக பிடித்து விலாசு விலாசென்று விலாசி விட்டாராம் நண்பர்... அந்த பையனை எனக்கு நன்கு தெரியும். நல்ல மரியாதையான பையன். தலைக்கு மேல் வளர்ந்த பையனை இப்படியா அடிப்பது.! (கூர்ர்ர்ர்....)
ஏன் இன்னமும் இப்படி செய்கிறார்கள் நம்மவர்கள்?
நானும் தான் என் மகன் அந்த வயதில் இப்படி ஒரு காரியத்தைச் செய்யும் போது பார்த்துவிட்டேன். கையும் களவுமாகப்பிடித்து விட்டேன்.
என்ன சொன்னேன் தெரியுமா?
ஐயா, எல்லோருக்கும் இதுபோன்ற ஆசை வரும், அம்மா கூட உன் வயதில், பாட்டி வைத்திருந்த சுருட்டை புகைத்து சுவைத்தேன்.. இருமல் வந்தது.. பிறகு அதைத் தொடவே இல்லை.
எல்லாவற்றையும் பழகிப்பார்க்க ஆசை வரும், தப்பில்லை ஆனால் தொடராதே, உடல் நலக்கேடு. என்றேன். அவ்வளவுதான்.
இன்று கூட அவனின் நண்பர்களுக்கு அந்த பழக்கம் இருக்கின்றதாம் ஆனால் அவனுக்கு இல்லை. இப்போ பதினெட்டு வயது இளஞன் அவன்.
பிள்ளைகளைக் கண்டிக்கும் போது, அந்த வயதில் நாம் என்ன செய்தோமென்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.!
இவனுங்க உலகத்தில் உல்ல அனைத்து அயோக்கியத்தனத்தையும் செய்வானுங்க.. பிள்ளைகள் அப்படியே பொம்மை மாதிரி வளரனுமாம்..
என்ன நியாயம்!
அடித்தால் இன்னும் மோசமாகும் நிலைமை. வெளியுலகம் சென்றுவிட்டால், சுய ஒழுக்கம்தான் பாதுகாப்பு. அதற்கு பெற்றோர்களின் பங்கு என்ன? நாம் சரியான வழிகாட்டியாக இருந்துள்ளோமா!?
இதே போல ரஜனி படத்தில் கூட வருமே, அப்பா ரூம் முழுக்க சுருட்டு வாங்கி பத்த விட்டார். பிறகு அந்த ஆசையே வரவில்லை என்று ...
பதிலளிநீக்குஆமாம் சகோ ஓஷோ உடையது. உங்களுடைய ப்ளாக் ரொம்ப வித்தியாசமா இருக்கே..
பதிலளிநீக்குசகோ., நீங்க ஓஷோவின் எழுத்துக்களையும் வாசிப்பீர்களா அதனால் தான் இத்தனை அழகோ தங்கள் எழுத்தில் :)
நீக்குஇது கொஞ்சம் சுயபுராணம் மாதிரி இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்கோ..
நீக்குஎங்க ஊரில் (மலேசியா)ஓஷோவை பிரபலமாக்கி அறிமுகம் செய்து வைத்ததே நான் தான். பலர் இதை என்னிடம் சொல்லியுள்ளார்கள்.
நான், மலேசிய நண்பன் என்கிற பத்திரிகையில் (தமிழில் முதல் நிலை மக்கள் நாளேடு)தொடர்ந்து பதினைந்து வாரங்களாக ஓஷோ பற்றிய விவரங்களை கட்டுரையாக எழுதி வந்துள்ளேன்.அப்போது ஞாயிறு பொறுப்பாசிரியராக பொறுப்பு வகித்த திரு. மு.அன்புச்செல்வன் அவர்களின் ஆசியில் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் ஓஷோ அவர்களின் பரிணாமங்களை வெவ்வேறு தலைப்புகளில் சுவாரிஸ்யமாக எழுதி வந்தேன். (எதிர்ப்புகளும் வந்தன- காழ்ப்புணர்ச்சியில் காறியும் உமிழ்ந்தார்கள்) ஆசிரியரின் ஆதரவில் எதையும் சட்டை செய்யாமல் தொடர்ந்தது என் கட்டுரை. பிறகு நானே அதை ஒரு முடிவுக்குக்கொண்டு வந்தேன்.
அவற்றையெல்லாம் புத்தக வடிவில் தொகுத்து வெளியிடுமாறு சில பத்திரிக்கை ஆசிரியர்களே எனக்கு ஆலோசனையும் அழங்கியுள்ளார்கள். முன்பு அந்த ஆசையெல்லாம் இருந்தது, இப்போது இல்லை.
எப்போது வலைத்தளத்தில் கால் பத்தித்தேனோ அன்றே எழுத்தாளர் என்கிற கனவெல்லாம் தூள்தூளானது.
உங்களைபோல் எழுதுபவர்களின் மத்தியில்.. எல்லாம் கால் தூசு.
தங்கள் எழுத்தில் இருந்த நேர்த்தியை வைத்தே யூகித்தேன் தங்களுக்கு எழுத்து துறையில் நல்ல அனுபவம் இருக்க வேண்டுமென்று ஆனால் நாளேடுகளிளெல்லாம் கட்டுரை எழுதியிருப்பீர்கள் என்று கனவிலும் கூட நினைத்து பார்க்கவில்லை.!
நீக்குஎத்தனை பெரிய விஷயம் நாளேடுகளில் கட்டுரைகள் எழுதுவது. எனது கட்டுரை எழுதும் திறனை வளர்த்துக்கொள்ள தங்களை போன்ற அனுபவசாலிகளின் அறிவுரை மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். என்னை வளர்த்துக்கொள்ள எனது குறைகளை தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.
///உங்களைபோல் எழுதுபவர்களின் மத்தியில்.. எல்லாம் கால் தூசு///
அக்கா, கிண்டல் பண்ணுங்க., வேணாம் சொல்லலை ஆனா திஸ் இஸ் டூ மச் :) :) :)
என்னுடையதா?
நீக்கு@கண்ணிக்கல்லூரி ஆமாம் உங்களுடைய ப்ளாக்தான். பார்த்தேன் ஹை டேக்’அ இருக்கிறது. நன்றி
நீக்குவரலாற்று சுவடுகள் - ஆ ஆ ஆ ஆரடித்தாரோ..ஆரடித்தாரோ
நீக்கு//பிள்ளைகளைக் கண்டிக்கும் போது, அந்த வயதில் நாம் என்ன செய்தோமென்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.!//
பதிலளிநீக்குஅதானே... சரியா சொன்னீங்க சகோ
நன்றி சகோ..வருகைக்கு
நீக்குமிகச் சரியான வார்த்தை
பதிலளிநீக்குபல சமயங்களில் நாம் காட்டும் கூடுதல்
ரியாக்சனே அவர்களை கூடுதலாக
தீயவற்றின் மேல் ஆர்வம் கொள்ளச் செய்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றிங்க சார், உங்களுடைய வாழ்த்தே எனக்கு ஊட்டம்.
நீக்குyes........உண்மையான விடயம் அந்த பையனுக்கு அருனாசலம் படத்த ஒருமுறை போட்டு காட்டியிருக்கலாம்...
பதிலளிநீக்குஅடிக்கவும் வேண்டும் குறிப்பிட்ட வயது வரை
குருவி, நான் இன்னும் அருணாசலம் படம் பார்க்கவேயில்லை. ரஜினியின் இன்னமும் பார்க்காத படம் அருணாசலம் மற்றும் சிவாஜி. நிறைய தடவை பார்த்த படம் மன்னன் & பாஷா.
நீக்குநன்றி சகோ... வருகைக்கும் வாழ்த்திற்கும்
நன்றி ,
பதிலளிநீக்குஉங்களை போன்றவர்களது வலைப்பூவையும் பதிவுகளையும் பார்க்கும் போது தான் நான் இன்னும் வளர வேண்டும் என்ற உண்மை புலப்படுகிறது.
நான் உங்களிடம் தான் கற்கிறேன். எனக்கு ஒன்றுமே தெரியாது.
நீக்கு