புதன், ஜூலை 11, 2012

வெட்டிவேலை


நாய்

நீ வீசுகிற
எலும்புகளுக்கெல்லாம்
வால் ஆட்டவேண்டுமென்றால்
என்னை நாயாக அல்லவா
படைத்திருப்பார்
அந்த இறைவன்.

%%%%%

ஏக்கம்

சட்டியில் பிரட்டிய
சட்டிச்சோற்றின்
இறுதி பருக்கை
கையில் தொட்டு
நாக்கில் வைக்கும் போது
நன்றி சொல்கிறேன்
அம்மாவின் சமையலுக்கு

%%%%%%

அவசரம்

`கிளம்புங்க.. கிளம்புங்க
என்று கணவனை
ஓட்டும் பெண்கள்
அவன் கிளம்பிய பிறகும்
கிளம்பாமல்
பல வருடங்களாக...

%%%%%%

இழக்கமனமில்லை

பேச்சில் சுவாரிஸ்யமில்லை
இடையிடையே
உப்பு எனவும்,
ஜாங்கிரி எனவும்
மாங்காய் எனவும்
காரம் எனவும்
கற்றாலை எனவும்
வலுக்கட்டாயமாக
சேர்த்துக்கொண்டிருக்கிறேன்
உன்னையும் இழக்க மனமில்லாமல்.....

%%%%%%%

மனப்பதிவுகள்

பதிவிடும் தருணங்களில்
தோன்றித்தோன்றி
மறைகின்றன
காகிதத்தின் வென்மைக் கோடுகளாய்
மனப்பதிவுகள்
கண்கள் சிமிட்டப் படும்போது
கருத்துக்களும் இல்லாமல்
காகிதங்களும் இல்லாமல்..
வெரித்துக் கொண்டிருக்கிறேன் 
வெறுமையை

%%%%%%

அமைதியாய்.

நீ என்னைப் பின் தொடரும் தருணங்களில்
உன்னால் பொறுக்கப் படும் கற்களை 
நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். 
நமது இடவெளி நீளும் போது
நீ எறிகின்ற கற்களால் 
எனக்குச் சேதம் வராமல் 
என்னை நான் தற்காத்துக் கொள்ள 
கவசம் தேடிக் கொள்கிறேன்.. 
மௌனப் புன்னகையில்...

%%%%%%


பால்யதோழி

நீண்ட நாள் சந்திக்காத
என் ஒத்த வயது பள்ளித்தோழி
ஒரு திடீர் சந்திப்பில்
அப்படியே பார்த்த மாதிரியே இருவரும்..
கையில் குழந்தையோடு..
உன் குழந்தையா?இல்லை, பேரக்குழந்தை..
விடைபெறும் போது
`
பாட்டிக்கு டாட்டா சொல்லுஎன்னையும் பாட்டியாக்கினாள்
பதினைந்து வயதிலே அம்மாவான அவள்....

%%%%%%

சின்னச் சின்ன
சீண்டல்களையும்
ஆராய்ந்துகொண்டிருக்கிறேன்
என்னோடு உனக்கென்ன 
வெட்டி வேலை ?

15 கருத்துகள்:

  1. எல்லாமே யதார்த்தமாக அற்புதமாக இருக்கு

    பதிலளிநீக்கு
  2. `கிளம்புங்க.. கிளம்புங்க’
    என்று கணவனை
    ஓட்டும் பெண்கள்
    அவன் கிளம்பிய பிறகும்
    கிளம்பாமல்
    பல வருடங்களாக.../////

    நிறைய விடயங்களை என் நெஞ்சத்தில் கீறிச் செல்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி குருவி..தொடர் ஆதரவிற்கும் பின்னூட்டங்களுக்கும்.

      நீக்கு
  3. தமிழர்களின் பாரம்பரிய உணவினைப்போல
    அத்தனைச் சுவைகளையும் ஒன்றாய்
    ஒரு பதிவிலேயே கொடுத்தால் என்ன செய்வது
    பின்னூட்டமென ஒரு கட்டுரை எழுதவேண்டியிருக்கும்
    என நினைக்கிறேன்.மனம் கவர்ந்த அருமையான கவிதைகள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணி சார்.. நன்றி, தொடர் ஆதரவிற்கும் பின்னூட்டங்களுக்கும்.

      நீக்கு
  4. மனப்பதிவுகள்

    பதிவிடும் தருணங்களில்
    தோன்றித்தோன்றி
    மறைகின்றன
    காகிதத்தின் வென்மைக் கோடுகளாய்
    மனப்பதிவுகள்
    கண்கள் சிமிட்டப் படும்போது
    கருத்துக்களும் இல்லாமல்
    காகிதங்களும் இல்லாமல்..
    வெரித்துக் கொண்டிருக்கிறேன்
    வெறுமையைஃஃஃஃஃஃ

    மனம் கவர்ந்த கவிதை...!வாழ்த்துக்கள் சொந்தமே.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிசயா நன்றி, தொடர் ஆதரவிற்கும் பின்னூட்டங்களுக்கும்.

      நீக்கு
  5. பால்யதோழி சூப்பர். நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். ( குறிப்பு: என் வகுப்பு தோழியின் பேத்தியை சைட் அடித்துக்கொண்டுள்ளேன். என்ன கொடுமை இது)

    பதிலளிநீக்கு
  6. //சட்டியில் பிரட்டிய
    சட்டிச்சோற்றின்
    இறுதி பருக்கை
    கையில் தொட்டு
    நாக்கில் வைக்கும் போது
    நன்றி சொல்கிறேன்
    அம்மாவின் சமையலுக்கு// நல்ல வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி விச்சு சார். உங்கள் மூலமாக கிடைத்த openreadingroom ப்ளாக்கை பலருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். தினமும் அங்கேதான் உலாவருகிறேன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. நன்றி சீனி. சீனி எப்போதும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்.

      நீக்கு
  8. நன்றி சொல்கிறேன்
    அம்மாவின் சமையலுக்கு
    தங்கள் கவிதைப்பகிர்வுகளுக்கும் ..

    பதிலளிநீக்கு