சனி, நவம்பர் 19, 2011

ஷவர்(shower)



பூமி பொழியும்
சாரல் சுடு மழையில்
தினமும் நான்..

உடல் வளர்த்தேன்

திரந்த வெளி
கருப்புப் புகையைக் கக்கும் கார்கள்

கடுமையான வெயிலின் 
வறண்ட சாலையில்
புழுதி பறக்கும் சூழல்

குடையின் கீழ்
ஒரு ’நாசி லேமக்’ வியாபாரி
ஈ ஓட்ட ஒருவர்
’புங்கூஸ்’ செய்ய ஒருவர்..
பணம் வாங்க ஒருவர்

நான், நீ என 
முட்டி மோதி நிற்கும் கூட்டம்

அந்த உணவுக்கு
கிராக்கி இங்கே..
சுவை அதிகமாம்...!!

தோழி, எனக்கும் ஒரு புங்கூஸ்
வாங்கிவந்தாள்..

என்னை உண்
என, 
என்னிடம் கெஞ்சிக்கொண்டிருக்கு
அந்த ஒரு ’புங்கூஸ் நாசிலேமக்’

துளிதான் பெரிசு

எனது பார்வையில்

அதிக அன்பில் 
மறைந்திருக்கும், உனது 
கொஞ்சம் அலட்சியம்..

எவ்வளவு அவசியம்
என்பதில் மறைந்திருக்கும், உனது
கொஞ்சம் அவசியமின்மை..

எவ்வளவு இஷ்டம்
என்பதில் ஒளிந்திருக்கும், உனது
கொஞ்சம் வெறுப்பு

எவ்வளவு தேவை 
என்பதிலும்..
சதா தொற்றிக்கொண்டிருக்கும்
உனது தேவையின்மை..

அதிக அக்கறையில்
அப்போ அப்போ தலை காட்டும்
உனது கொஞ்சம்
புறக்கணிப்பு...

எவ்வளவு தான் அதிகமாக
’அது’ இருந்தாலும்
அந்த ’கொஞ்சம்’ தானே
எனக்கு பெரிதாக
தென்படுகிறது.

with love
sriviji

Learn from mistakes :-


கல்யாணம் பண்ணியதிலிருந்து... 
சமைக்கத்தெரியல, 
சமைச்சா.. உப்பில்லை, 
காரமில்லை, 
புளி போதவில்லை, 
சரியாக வேகவில்லை, 
சக்கரை இல்லை, 
காப்பி டீ கூட கலக்கத்தெரியவில்லை... 
உம் பொண்டாட்டிக்கு!!! 

இப்படியே.....! 
தவறு செய்து 
தவறு செய்து, 
பல ஆண்டு அனுபவதிலிருந்து கற்றுக்கொண்டு..
இப்போது சூப்பரா சமையல் வரும்போது, 
உப்ப குறைங்க, 
காரம் எடுக்காதிங்க, 
புளிப்பைத்தவிர்த்து விடுங்க, 
அரைவேக்காடு காய்கறி சாப்பிடுங்க, 
சைவம் எடுங்க, 
சக்கரையை குறைத்துக்கொள்ளுங்க, 
காப்பி டீ தவிர்த்து விடுங்க...!

இது தான் வாழ்க்கை. 

புது மனைவிக்குச் சமைக்கத்தெரிய வில்லை யென்றால்.. திட்டாதிங்க, அவள் ஆரோக்கிய சமையல் செய்கிறாள்...

சாட்சி



ஆட்கள் நடமாட்டமே இல்லாத 
மலர்கள் கூடையாக வளைந்திருக்கும் 
பூ மரப்பொந்துகளில்... 

நீர் சொட்டச் சொட்ட 
நனைந்த சருகுக் குவியலில்
ஒரு பாறை..!

அதன் மேல் நான்,
என் மடியில் நீ..
ஏக்கப்பார்வையுடன்....

நடக்குமா நடக்காதா!? 
மறைந்திருந்து காத்திருக்கும் 
ஒரு திருட்டு ரசிகன்!