வியாழன், நவம்பர் 24, 2011

பாதங்கள்

கால்களைப் பேணுவோம்...

ஒரு காலகட்டத்திற்குப்பிறகு சக்கரை வியாதி, எல்லோருக்கும் வருவது சகஜமாகிவிடுகிறது. பொதுவாக சோற்றை உணவாகக் கொண்டிருப்பவர்களுக்கு இது சாத்தியமே.. (நாம் தான் இதில் முதல் நிலை).. 

சில நாட்களாக, மருத்துவ மனையில் மாமியோடு இருந்த போது, அக்கம் பக்கத்தில் உள்ள நோயாளிகளிடம் சென்று உரையாடுவேன்..அவர்களின் அனுபவங்கள் படிப்பினையான இருந்த போதிலும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். 

அதில் ஒருவருக்கு கடுமையான சக்கரை வியாதி, வயது 60க்கு மேல். கண் பார்வையில் கோளாறு, திடீர் மயக்கம், உடலில் நடுக்கம் என பல பிரச்சனைகள்..! கால்களைக் காண்பித்தார், மூன்று விரல்கள் இல்லை, புண் தொல்லையால் எடுத்தாச்சு. என்றார்.

உடனே, எனக்கு ஒரு கேள்வி வந்தது.. அதாவது சக்கரை வியாதி வந்தாலே, கால்களில் தான் பிரச்சனைகள் வருகின்றன (பெரும்பாலும்) நான் பார்த்தவரை.. விரல்கள் நீக்கம், முட்டி வரை கால் எடுப்பது, வலது கால் முடிந்து பிறகு இடது காலுக்குப் பரவுவது என.... இப்படியே!

சரி, அந்த புண்ணால் தான் கால் விரல்களோடு, கால்களையும் சேர்த்து எடுக்கும் இக்கட்டான சூழல் உருவாகிவிடுகிறதே, அந்தப் புண் கால்களில் எப்படி ஆரம்பமாகிறது, என்ற கேள்வியைகேட்டேன்..

ஒரு அறிகுறியும் காட்டவில்லை, கால் சுண்டு விரலில் கருப்பாக, கட்டியாக, மருவு போல் ஒரு சதை வீக்கம் தென்பட்டது, அது ஒருநாள் அது கொஞ்சம் நமநமன்னு அரிப்பு எடுத்தது, சொரிந்தேன், பிறகு அது கொப்பளமானது, சீழ் வடிந்தது.. அது இவ்வளவு பெரிய பிரச்சனையில் கொண்டு வந்து விட்டுவிட்டது.. அப்போதுதான் தெரியுமாம், அவருக்கு சக்கரை வியாதி மிக மோசமாக உள்ளது என...!

எது எப்படியோ, கால்கள் எப்போது சுத்தமாக இருப்பது அவசியம். சிறிய பிரஷ் வாங்கி வைத்துக்கொண்டு குளிக்கும் போது, கால்களை நன்றாக தேய்த்து சுத்தமாக குளிக்கவேண்டும், ஈரமில்லாமல் துடைத்து, எண்ணெய் அல்லது லோஷன் கொண்டு பூசிவிடவேண்டும். கால்கள் ரொம்ப சுத்தமாக இருப்பது அவசியம், ஏன்னா, கால்களைக்கொண்டு எங்கு என்ன வியாதி என்பதை அறிந்துகொள்ளலாம்.. முடிந்தால் மாதத்திற்கு ஒரு முறை கால் மசாஜ் செல்லலாம்.. இது மிக அவசியம்.. அவரே சொன்னார். ஏற்றுக்கொளலாம் அனுபவசாலி சொல்வது பொய்த்துப்போகாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக