சனி, ஜூலை 23, 2011

வக்கிரம்

சாவி கொடுத்தால், 
கதறி அழுகின்ற பொம்மை 
கிடைத்தால், 
பேட்டரி முடியும் வரை, 
அழும் பொம்மையைப் பார்த்து 
கைத்தட்டிச் சிரிக்குமாம் குழந்தை.புதன், ஜூலை 13, 2011

திங்கள், ஜூலை 11, 2011

தமிழிசை (ஆய்வுக் கட்டுரை)

தமிழர்கள் வரலாறு உருவாவதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் இக்கருத்தைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி என்ற வழக்கு வலியுறுத்துகின்றது. இவ்வழக்கை வெறும் மேம்போக்காகக் கூறுவதை விடுத்து ஆய்வுக் கண்கொண்டு நோக்கின், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பேயான தொல்லுலகில் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பது மாத்திரமின்றி, அத்தொன்மைக் காலத்திலேயே இக்குடி மூத்து முதிச்சு நிலையினையும் அடைந்திருந்தது என்பதும், எல்லாத் துறைகளிலும் கலை கண்டிருந்தது என்பதுமான மாபெரும் உண்மை புலனாகும். தொடக்கக் காலத்தில் முதிர்ச்சியுள்ள வளர்ச்சி நிலையை எட்டியிருந்த தமிழர், தம் மொழியை இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூவகைப்படுத்தி வளர்த்து வந்தனர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் பற்றியும், தமிழரின் வாழ்க்கை நிலை பற்றியும் அறிந்து கொள்வதற்குத் தமிழிலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன. தமிழர்கள் முத்தமிழோடு கலை மற்றும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கிய சிறப்பையும் இலக்கியங்கள் தெளிவாக்குகின்றன. எனவே இலக்கியங்களே தமிழர்தம் கலை மற்றும் கலாச்சாரம் பற்றி அறிய உதவும் முதற்சாதனங்களாக அமைகின்றன. ஆகவே இலக்கியம் குறிப்புகளின் அடிப்படையில் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் மற்றும் நுண்கலைகள் என்னும் ஐந்தமிழுள் இசைத்தமிழ் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து, ஆய்ந்து அரிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது
முதற்கண் இயல் தமிழ் என்பது எது? இது பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகள் யாது என்பது பற்றி ஆராயப்படுகிறது. இயற்றமிழ் ஒரு விளக்கம்அனைத்துத் துறையிலும் இயலுகின்றதும், இயக்க வைப்பதுமாகிய இயற்றமிழ் என்பது தமிழர் யாவர் மட்டும் பொதுமையின் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும், செய்யுளுமாகிய நூல்களில் தொகுதியாம் என்பர். படித்த மாத்திரத்தில் ஒன்பான் சுவை தரத்தக்கதாக அமைந்துள்ள இயற்றமிழினுள்ளே எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து வகை இலக்கணமுமே அடங்கும், இன்னும் தெளிவாகக்க கூறினால், வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழ் எனப்படும் என்பர் பேராசிரியர். எனவே இயற்றமிழில் இலக்கணம், இலக்கியம், செய்யுள், உரைகள், உரைநடை, புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும் என்பது தெளிவு. முத்தமிழில் முன்னர் தோன்றியமையாலும், இயலின்றி ஏனை இசை மற்றும் நாடகத் தமிழ் இயங்கவியலாமையாலும் இவ்வியற்றமிழ் முத்தமிழ் முதன்மைபடுத்தி மொழியப்படுகின்றது. இயற்றமிழன் பின் வைத்து எண்ணப்படுகின்ற இசைத் தமிழ் பற்றியும் இசைத்தமிழ் எவ்வாறு கூத்து என்னும் நாடகத் தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குகிறது என்பது பற்றியும் அடுத்து ஆராயப்படுகின்றது.
இசைத்தமிழ் விளக்கம்: இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது. தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கணத்தோடு இசைத் தமிழிலக்கணமும் இழையோடிக் கிடக்கின்றது. இவ்விரு தமிழும் வெவ்வேறாகப் பிரித்தறிய முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.
இசை பொருள்: இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பது, வயப்படுத்துவது ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது எனும் பொருளைத் தருகிறது. இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்ற பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்பர்.
ஒலி, ஓசை, இசை:- இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி, ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. இவ்வுலகமே ஓங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது என்பதும் ஒரு தத்துவம், மூலாதாரமான ஒலி வேறு ஓசை வேறு ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என இறையைப் பற்றிக் கூறும் அப்பரின் தேவார வரிகளிலருந்து ஓசை வேறாகவும், ஒலி வேறாகவும் கருதப்படுவதை உணர முடிகிறது. ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையை ஏழிசையாக அமைகிறது என்று சுட்டுகின்றது. எனவே ஓசையே இசைக்கு அடிப்படை என்பதை உணர முடிகிறது. ஒலி என்பது ஒரு குறிப்பைக் கருதி எழுந்து, இனிதாய் அமைந்து சுவைப் பயப்பதாக இருக்க வேண்டும். காலக் கடப்பால் ஏற்பட்டுள்ள சொல் பயன்பாட்டை நோக்கும்போது இசையும் ஒலியும் சில இடங்களில் வேறுபாடு கருதாது பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஓசை மற்றும், இனிதாய் அமைந்து சுவை பயப்பதாக இருப்பதான ஒலியின் அடிப்படையில தோன்றுவதான இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும். இயல் தமிழைக் கற்றும், கேட்டும் அனுபவிக்கவும் சுவைக்கவும்க முடியும். ஆனால் இசையையோ செவிப்புலன் ஒன்றினால் மாத்திரமே சுவைக்க முடியும்.
இசையும் இறையும்:
இசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர்.
துறைவாய் நுழைந்தனையோவற்றி
யேழிகசைச் சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொலாம்
புகுந்த தெய்தியோ
எனும் திருக்கோவையார் பாடல் ஏழிசைச் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பதைத் தெரிவிக்கின்றது. ’ஏழிசையாய் இசைப்பயனாய் என்று சுந்தரரும் எம்மிறை நல்வீணை வாசிக்குமே என்று அப்பரும் கூறியுள்ளமையும் நோக்கத் தக்கது.
ஆதி மனிதனும் இசையும்:
மொழியறியாது வாழ்ந்த மனிதன் இனம் புரியாத மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் எழுப்பிய ஓசையும் ஒலியுமே இசையாயிற்று. மகிழ்ச்சி மற்றும் துன்பப் பெருக்கின் உச்ச கட்டமாக அவன் கைதட்டி எழுப்பிய ஆரவாரமே தாளமாயிற்று. சிலை வளைத்துக் கணை தொடுத்து வேட்டையாட முற்பட்ட போது எழுந்த நாதமே இசைக்கருவிகளின் தோற்றத்திற்கு மூலமாயிற்று.
இசையின் பழமை தொல்காப்பியம்:
மனிதனின் உணர்ச்சிப் பெருக்கோடு ஒன்றி வளர்ந்த இசை பற்றி நமக்கு உணர்த்தும் முதல் நூலாக தமிழின் கருத்துக் கருவூலமான தொல்காப்பியத்தையே கொள்ளலாம்.
அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிய இசையோடு சிவனிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்
எனும் தொல்காப்பியம் அடிகள் இசையில் பழமையை உணர்த்தும் தொல்காப்பியச் சொற்களின் ஓசையதிக்கு வண்ணம் என்று பெயரிட்டு," வண்ணந்தாமே நாலைந்தென்ப "என்று கூறுவதன் மூலம் அதனை இருபது வகைப்படுத்திக் கூறியுள்ளார். வண்ணங்கள் என்றால் சந்த வேறுபாடுகள்- இவ்விருபது வண்ணங்களையும் தேவாரம், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கண்ணி முதலிய பாடல்களில் தெளிவாகக் காணலாம். எதுகை, மோனை, இயைபு, முதலிய தொடைகளின் இலக்கணம் இசைக் கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை, விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படுபவனவாம். எதுகை, மோனை போன்ற தொடைகளில்லையேல் இசைப்பாடல்கள் இல்லை. இசைப்பாடலுக்குரிய யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் அழகாகவும் தெளிவாகவும்</SP


--
T.Venugopal

வெள்ளி, ஜூலை 01, 2011

இந்திய நாட்டின் மூத்த குடிமக்கள் தமிழர்களே


டந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன. இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.
எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.
ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.


இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.
இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.
அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.
பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உண்மை
இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர்ஆய்வாளர்பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.
அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார்மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.
பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.
பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டுபிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.
ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாகமாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.

காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது.

(மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்)

உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும்திறந்து பார்க்கும்ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.

அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம்உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம்உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.
அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்.

நன்றி
திருத்தமிழ்

நன்றி 
வேணுகோபால்