திங்கள், டிசம்பர் 15, 2014

லிங்கா - கொட்டாவி

ரஜினி படம் என்றாலே, அவரின் பெயர் போடுகிறபோது கலக்கலான ஒரு இசை வரும், அந்த இசை லிங்காவில் இல்லை. அதுவே எனக்கு முதல்கொட்டாவி. 


பிறகு, அறிமுக பாடல், தேவாவிடம் கொடுத்திருந்தால் கலக்கோ கலக்கு என்று கலக்கியிருப்பார்.. நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்... வந்தேண்டா பால்காரன்... என்று உதாரணம் சொல்லலாம்.. பாடல்கள் தியேட்டரில் ஒலி/ளியேறுகிறபோதே விசில் பறக்கும்.. அது லிங்காவில் கிடைக்கவில்லை... நான்காவது கொட்டாவி ஆரம்பித்தது..


நகைச்சுவை செய்கிறேன் பேர்வழி என்று சந்தானம் படுத்தும் பாடு,கொஞ்சம் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை. அந்த காட்சிகளின் போது தொடர்ந்தது கொட்டாவி.

ரஜினியை மிக அருகாமையில் காண்பிக்கின்ற போது, `பாவம் சார் நீங்க, ஏன் உங்களை இந்தப் பாடு படுத்துகிறார்கள்.?’ என்று மனதிற்குள் முனக ஆரம்பித்தபோது பல கொட்டாவிகள் வந்தன..

`நிறுத்துங்க..நிறுத்துங்க..’ என்கிற வாசகத்தைக் கதாநாயகிகள் கூவுகிறபோது படத்தில் வசனத்திற்கு பஞ்சம் ஏற்பட்ட மாதிரியான ஓர் உணர்வு வந்தது.. கதாநாயகிகளைப் போட்டிருக்கவே வேண்டாம். அவர்கள் அங்கே ஒன்றுமே செய்யவில்லை..

ரஜினி பேசுகிற பஞ்ச் வசனங்களை ஏற்கனவே பல படங்களில் பலமுறை கேட்டுவிட்டதால், பஞ்ச் வருகிறபோது நாமும் தலையில் உள்ள முடியைப் பிடுங்க வேண்டிவருகிறது..(இப்படத்தில் யோசிக்கின்ற காட்சிகள் வருகின்ற போது ரஜினி இதைத்தான் செய்வார்.)

கே.விஸ்வநாத் - எப்பேர்பட்ட இயக்குனர்.. அவரின் வழிகாட்டல் இல்லாமலா இருந்திருக்கும்.!

போலிஸ் வேடத்தை விடவே மாட்டார் போலிருக்கு.. கே.எஸ்.ரவிக்குமார்.

ரவிக்கை அணியாமல் நடித்தால், அது ப்ளாஷ்பக் பெண்களின் ஆடையாம்/அடையாளமாம்.!

ராதாரவி என்ன செய்தார்.?
நிழல்கள் ரவி வந்தாரே..!?
நடிகர்கள் பட்டாளத்திற்குக் குறைவில்லை... இருந்தபோதிலும் படம் சோர்வாக இருந்தது.

ரஜினி படம் என்றால் மக்கள் ஒரு எதிர்ப்பார்ப்புடன் திரையரங்கம் செல்வார்கள் .. மக்களை ஏமாற்றிவிட்டார்கள்.

அரங்கம் நிறைய கூட்டம் - ஒரு இடம் கூட காலி இல்லை. கைத்தட்டி கூச்சலிட்டு ஆரவாரம் செய்யாமல் அமைதியாகவே படம் பார்த்தார்கள். படத்தில் டுவிஸ்ட்டே இல்லை..

இடைவேளையின் போது பலர் அரங்கைவிட்டு வெளியேறியதை நான் பார்த்தேன். காரணம் நான் வெளியே நின்று காற்று வாங்கிக்கொண்டிருந்தேன்.. அரைமணி நேரமாக..
படம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஓடுது.. அதுவே மன உளைச்சல்

மனோ குரலில் ஒரு பாடல் - அதற்காகவே படம் பார்க்கலாம். அருமையான ரீங்காரம் அப்பாடல்.ஸ்டையிலான பாடல். அந்தப்பாடல் இல்லாமல் இருந்திருந்தால், நான் விட்ட கொட்டாவியில் கொறட்டை வரும் வரை தூங்கியிருப்பேன்