புதன், ஆகஸ்ட் 01, 2012

இன்னும் கிடைக்காத ஒர் உருவம்

ஒரு முக்கோணம்
அதன் நடுவில் ஒற்றைக்கண்
கண் அசைந்து அசைந்து சவப்பெட்டியாகிறது
பெட்டியில் உள்ளே பிணம்
பிணம் எழுந்து நடக்கின்றது
அதை சிலர் துரத்துகின்றனர்
துரத்துபவர்கள் புள்ளிபோன்ற மனிதர்கள்
புழுக்கள் போல் நகர்கின்றனர்
ஓடுகிற பிணம் சக்கரமாகிறது
சக்கரம் வேகமாகச் சுழல்கிறது
நட்சத்திரங்களாகிறது
பிறகு சிதறி தூள் தூளாகிறது
ஒளிகள் கண்களைக் கூசச்செய்கின்றன
எல்லாமும் ஒன்றாகக் கலக்கின்றன
சிகப்பு மஞ்சள் என மாறி மாறி
அதன் பின் வெடிப்புகள் நிகழ்கின்றன
எல்லாம் மறைகின்றன
பிறகு நிசப்தம்
எங்கும் அமைதி
ஒன்றுமில்லா மஞ்சள் வானம்
அதில், அங்கே......!!!
என்னமோ தோன்ற.!?
கண்களும் திறந்துக்கொள்கின்றன
கண்முன்னே நிகழ்காலம்