குடும்பத்தில் உள்ளவர்களின் முகநூல் அக்கவுண்ட்’ஐ தெரிந்துவைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் அவ்வப்போது எட்டிப் பார்த்துக்கொள்வது வழக்கம்.
நான் என் கணவருடையதையும் அவர் என்னுடையதையும் பார்த்துக்கொள்வோம். பெரும்பாலும் சட்டை செய்வது கிடையாது, இருப்பினும் பார்ப்போம்.
நீண்ட நாள் கழித்து நேற்று அவருடைய அக்கவுண்ட் உள்ளே நுழைந்து என்ன செய்கிறார் என்று பார்த்தேன். சாட்டிங்கில் பகிர்ந்துள்ளதைப் படித்தேன்.
ஒரு பெண்ணிடம் அடிக்கடி சாட் செய்துள்ளார். ஹை.. இருக்கியா? குட் மார்னிங்... சாப்பிட்டாயா? என்ன சாப்பாடு? இவ்னிங் ஃப்ரீயா? பிறந்தநாள் வாழ்த்துகள். பரிசு வேண்டுமா? என்ன பரிசு வேண்டும்... நான் வாங்கித்தரவா? குட் நைட்.. வீட்டில் யாரும் இல்லையா? என இப்படியே... (ஆபாசமாக ஒன்றுமில்லை..)
என் கணவர் பப் செல்லும் போதெல்லாம் அதிகமாக உளறியிருக்கின்றார் அப்பெண்ணிடம். தண்ணீ மப்பில் அதிக அன்பைப்பொழிந்துகொண்டு...
அப்போதெல்லாம் அவர் செய்துள்ள சாட்.. ஒரே உளறலாக இருந்துள்ளது. அப்பெண்ணிற்கு குழப்பம்.
சார், நீங்க என்ன சொல்லவறீங்க? ஆங்கிலத்தில் சொல்லவேண்டாம், தமிழில் சொல்லுங்கள்.. புரியல.. மலாய் மொழியில் சொல்லலாமே... என மீண்டும் மீண்டும் சாட்டில் கேள்விகளை அனுப்பிக்கேட்டவண்ணமாக இருந்துள்ளார்.
மறுநாள், மேலே உளறியதை ஒரு பொருட்டாகக் கருதாமல் மீண்டும், சாப்பிட்டியா? வேலை முடிந்துவிட்டதா? வீட்டில் யாரும் இல்லையா? தூங்கலையா? என இவரின் சார்பாக சாட் தொடர்கிறது.
இதே கேள்வி பரிமாற்றங்கள் தான் தினமும்... போர் அடித்துவிட்டது போலும், இப்போதெல்லாம் அவளிடம் அவ்வளவாக சாட்டில் பிதற்றுவது இல்லை. பதில் போடுவதும் இல்லை.
ஆனால் அப்பெண் தொடர்ந்து, இருக்கீங்களா? வேலை முடிந்துவிட்டதா? என்ன பதிலே காணோம்..! சாட் செய்யப்பிடிக்கவில்லையா? எதுவாக இருந்தாலும் சொல்லிவிடுங்கள்.. மௌனம் வேண்டாம்.. !! என தொடர்ந்து மெசெஜ் செய்தவண்ணமாகவே உள்ளார்.
நேற்று நான் இந்த சாட் சமாச்சாரங்களைப் படித்துக்கொண்டிருக்கும் போது, புத்தாண்டு வாழ்த்துகள் சார், என அனுப்பியிருந்தார் அப்பெண்.
நான் பதில் எழுதினேன்.
`புத்தாண்டு வாழ்த்துகள் மேடம். ’
`நலமா?’
`ம்ம் நலம்?’
`ரொம்ப நாளா ஆளையே காணோம். !!?’
`ரொம்ப பீஸி மேம்..’
`வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு சார்..’
`ஆடிட் இருப்பதால் தினமும் அதிக வேலை. பேஸ்புக் வருவதில்லை. கவலை வேண்டாம், வந்தால் நிச்சயம் உங்களுக்கு ஒரு ஹை சொல்வேன்.. ஒகே வா?’
`ம்ம் ஒகே சார். தெங்ஸ்..’
`பை..’