புதன், செப்டம்பர் 05, 2012

அறிவாளிக்கு ஆயிரம் வழிகள்

நேற்று ஒரு செய்தியைப் படித்து விட்டு, நன்றாகச் சிரித்தேன். இப்படி தனிமையில் தானே சிரிப்பது முறையல்லவே. சிரிப்பையும் பகிர்ந்துகொள்வோமே என்று உங்களிடமும் வைக்கிறேன். சிரிப்பு வந்தால் சிரியுங்கள், இல்லையேல் விடுங்கள். பூக்களைப் பறிக்காதீர்கள், காதலைப் பிரிக்காதீர்கள், கற்களை எடுக்காதீர்கள்.

செய்தி என்னவென்றால், வங்கிக்குச்சென்று வந்துகொண்டிருந்த காரை, பின் தொடர்ந்த மோட்டார் ஓட்டிகள் இருவர், பாதிவழியிலேயே அக்காரை வழிமறைத்து, கூர்மையான ஆயுதங்களைக்கொண்டு, காரின் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே இருந்த இருபதாயிரம் ரிங்கிட்  பணப்பையோடு கம்பியை நீட்ட முயன்றுள்ளனர்.

இதைக்கண்ட மற்றொரு மோட்டார் ஓட்டி, அவர்களை துரத்திச் சென்று, தமது மோட்டார் வாகனத்தைக்கொண்டு அவர்களின் மோட்டாரை  முட்டி மோதி,  இருவரையும் கீழே சாய்த்துள்ளார். கீழே விழுந்த ஒருவன் எழமுடியாமல் போக பொதுமக்கள் அவனைப்பிடித்து  வைத்துக்கொண்டார்கள்.  மற்றொருவன் பணப்பையுடன், சாலையின் அருகில் உள்ள புதருக்குள் ஓடி ஒளிந்துகொண்டான்.

போலிஸ்காரர்கள், ரேலா உறுப்பினர்கள், பொதுமக்கள் என குவிந்து விட்டார்கள் அங்கே. அந்தப்பணப்பையோடு அத்திருடனையும் பிடித்துவிட அவர்கள் தயார் நிலையில் அங்கே காத்திருந்தார்கள் அத்தோடு அவன் எங்கும் ஓடிவிடாதபடி சூழ்ந்தும் விட்டார்கள்.

வெளியே வரச்சொல்லி துப்பாக்கி வெடியெல்லாம் வெடித்தும் அவன் வெளியே வர மறுத்து விட்டான். ஆட்களை புதருக்குள் நுழைய விட்டுத்  தேடினாலும் கிடைத்தபாடில்லை. சாமர்த்தியமாக உள்ளேயே பதுங்கியிருந்தான். புதருக்குள் நெருப்பும் வைக்கக்கப்பட்டது, ம்ம்ம்.. அவன் அசரவில்லை.  உள்ளேயே பதுங்கியிருந்தான்.

இறுதியாக, பெரிய புல்டோஷரை வரவழைத்து, அதை  அப்புதருக்குள் ஓடவிட்டிருக்கின்றனர், அவன் தலைத்தெறிக்க வெளியே ஓடிவர, கையும் களவுமாக பிடித்து துவைத்து எடுத்து விட்டனர்.

பத்திரிகையில் வந்திருந்த இச்செய்தியில்,  அவனின் புகைப்படத்தில், அவன் தமது முகத்தை மூடிக்கொண்டான்.

நாணமோ...இன்னும் நாணமோ.. இந்த ஜாடை நாடகம் என்ன...

(சிரிப்பு வந்ததா?) :P




Thank you THE STAR news paper.