வியாழன், நவம்பர் 24, 2011

'like' button in FB

என்னைக்கேட்காமல்
எனக்கேத்தெரியாமல்
என் மேல்
பட்டுச் செல்லும்
உன் விரல்...

’லைக் ஆளர்கள்’

ஏன் இப்படி???

தமிழ் நாட்டிலிருந்து எழுதப்பட்டு வரும், ஒரு சில...ம்ம்ம் இல்லை பெரும்பாலான சுயசரிதைகளைப்படித்தோமானால், (நான் படித்தவரை....1234 ) அவர்கள் பிரபலமானவர்களாக , ஏற்கனவே நல்ல திறமைசாலிகளாக இருப்பார்கள், நிறைய படித்தவர்களாக இருப்பார்கள், நுணி நாக்கில் ஆங்கிலம் இன்னும் கூடுதலாக சில, பல மொழிகளை அறிந்தவர்களாகவும்.. தமிழ், சொல்லவே வேண்டாம் எழுத்தும் சரி பேச்சும் சரி அருவிபோல்....! 
ஆனால், அவர்களைப்பற்றி அவர்கள் எழுதும்போது.. நான் பொறுக்கி, நான் குடிகாரன், நான் கெட்டவன் ரௌடி, கோபக்காரன், படிப்பே வராது, பாமரன், ஆசிரியர்களைப் பிடிக்காது, புத்தகத்தைத்தூக்கி எரிந்து விடுவேன், மாட்டுக்கொட்டகையில் தூக்குவேன்.. மொத்ததில் நான் ஒரு உதவாக்கரை என்று தான் எழுதுகிறார்கள்... ஏன்?
அந்த சுயசரிதையைக் கூட ரொம்ப அழகாக, சுவைப்பட, ரசிக்கும் படி சுவாரஸ்யமாக எழுதியிருப்பார் அந்த பிரபலமானவர்.. ஆனால் தான் ஒரு உருப்படாதவன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். இது தன்னடக்கமா? எனக்கென்னவோ, இதுதான் சுயவிளம்பரம் போல் தோன்றுகிறது. படித்தவரென்றால் தாராளமாக படித்தவர் என்று சொல்லலாமே, இதிலென்ன மூடு மந்திரம்???? இப்படி ஒரு சில பிரபலங்கள் சொல்லித்திரிவதால் தான், பள்ளிக்கூட பக்கமே போகாதவர்கள், நான் ஒரு முட்டாள் என எவ்வளவு பெருமையாக தமாஷாக சொல்லித்திரிகிறார்கள் தெரியுமா.!? ஷாப்ப்ப்பா தாங்களடாசாமி...

திட்டம்

கோபத்தில்தான்
நீ அழகு, என்பான்.! 
நம்பாதே! 
காலம் முழுக்க 
கடுகடுவென 
உன்னை நீ வைத்திருக்க
அவன் போடும்
ஆயுள் திட்டம்தான் இது
பெண் என்ற புன்னகை மலரே....

பழகலாம்

எதற்குச் சிரிக்க்வேண்டுமென்று 
தெரிந்திருந்தால் போதும், 
எல்லோரிடமும் பழகலாம்

தண்ணீ காட்டலாம்

கொஞ்சம்
காப்பி, சக்கரை, பால்
போதுமே... விருந்தாளிகளைச் சமாளிக்க..
தண்ணி கலக்கட்டா? தண்ணி கலக்கவா?
என தண்ணீ காட்டலாம்..

ஜெயராமன்

மழை சாரலில் 
முந்தானை 
குடையில் 
உரசிக்கொண்டே...
உதடுகள் 
உரசாமல்
பேசி சென்றோமே...!!!
பட்டு தெறிக்கும்
துளிகளெல்லாம்
மோட்சம்
அடைந்ததாய்
சொல்லி
சென்றதே...
தெருவோர
தேநீர் கடையில்
ஆவி பறக்க
ஒன்றாய்
குடித்த
தேநீர்
அன்று ஏனோ
அதிக சுவையுடன்....!!!
தினமுமாய்
இது நடக்காததென
மழையிடம்
முறையிட்டேன்
தினமும் நீயே
வருவாயென...!!!

குண்டுப்பாப்பா

சொரி சிரங்கு வந்தவன் கை சும்மானாலும் இருக்காது என்பதைப்போல, காணுகின்ற சுவாரஸ்யங்களை பகிர்ந்துபழகியவர்களின் கையும் சும்மா இருக்காதுங்கோ. 

இன்று மருத்துவமனையில் (Cardiology Ward) ஒரு சம்பவம். செகண்ட் கிளாஸில் 4பேர் ஒரு அறையில். அதில் ஒரு பெண்மணி 66 வயது, வாய் சும்மாவே இல்லை..! எல்லோரையும் நலம் விசாரிப்பது, குடும்பம் பற்றி பேசுவது என ஒரே கலகலப்பு..பின்ன, வேற வேலை..! 

அந்த அறையில் நேற்று இரவில், புதிதாக ஒரு பெண் (40வயது மதிக்கத்தக்க) இருதய வலியோடு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். கூடவே அவரின் மகள் 16வயது..(நல்ல குண்டு, பாப்பா).. அவரிடம் எல்லாவற்றையும் விசாரித்தார் இந்த ’லொட லொட’ அம்மணி.

இன்று மதியம், நேற்று புதிதாக வந்தவரின் உறவுகள்  நலம் விசாரிக்க வந்திருந்தார்கள். அவர்களோடு இந்த லொட லொட அம்மணியும் சேர்ந்துக்கொண்டார், ஒரே கும்மிதான். புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, அவர்களின் கதைகளைக்கேட்டுக்கொண்டே... எனக்கும் சிரிப்புதான்..!

'' ஏன் பாப்பா, நீ, இவ்வளவு குண்டா இருக்கே? நாங்க எல்லாம் ஓடி ஓடி வேலை செய்தே, இதயத்தில் அடைப்பு, அப்படி இப்படின்னு நாள் கணக்கா வச்சிருக்கானுங்க, உங்களுக்கெல்லாம் 20வயதிலே எல்லா எடத்திலேயும் அடைப்பு வந்திடும் போலருக்கே!’’ அந்த குண்டு பெண்ணுக்கு முகம் உர்ர்ர் என்று ஆகிவிட்டது..!


பிறகு, அந்த லொட லொட அம்மணி, ஏம்மா உனக்கு எத்தனை பிள்ளைகள் என கேட்டார், வந்திருந்த உறவினர் ஒருவர், மூணு பொண்ணுங்க, ஒரு ஆண் பிள்ளை என்றார்.

’’பிள்ளைகள் எல்லாரும் என்ன செய்கிறார்கள்?’’

’’பையனுக்கு 21வயது, ரெண்டு பொண்ணுங்களும் படிக்கறாங்க, மூனாவது பெண், மூன்று மாத கைக்குழந்தை..’’

அமைதியாக இருந்தார் அந்த லொட லொட அம்மணி.

எல்லோரும் சென்று விட்டார்கள்...
எங்களின் அறையில் ஒரே அமைதி நிலவியது...
நோயாளிகள் அனைவரும் உறக்கத்தில் இருந்தார்கள்....

அந்த அம்மணி, புதிதாக வந்துள்ள இந்த இருதய நோயாளியிடம் சென்று..

‘ஏம்மா, 21வயது மகனை வைத்துக்கொண்டு.. எப்படி உன் குழந்தைக்கு பால் கொடுப்ப? எப்படி இது நடந்தது, இந்த வயதில், அதுவும் வயது வந்த புள்ளைகளை வைத்துக்கொண்டு.......’’ கேட்டார்

பதில் வரவில்லை.. நெஞ்சு வலி கூடியிருக்கும்

நான் வாய்விட்டே சிரித்து விட்டேன்...

மயங்குதல்

எல்லா மயக்கங்களுக்கும் 
விடிவு உண்டு; 
அவரவர் தெளிவு நிலையில், 
கால வரயரைதான் 
கூட்டியோ குறைத்தோ 
நிர்ணயக்கப்படுகிறது...

வைத்துக்கொள்

நான் இல்லாத 
இடமெல்லாம்,
குப்பையாகிறது..
என் வீடும்
உன் இதயமும்.!!

இம்சை

இசை ரிங்டோன் ஆனது
ரிங்டோன் இம்சை ஆனது.

உரிமை

காரணமே இல்லாமல்
எனக்கு மட்டும் 
ஏன் வருகிறது
கோபம் உன்மேல்....

பாதங்கள்

கால்களைப் பேணுவோம்...

ஒரு காலகட்டத்திற்குப்பிறகு சக்கரை வியாதி, எல்லோருக்கும் வருவது சகஜமாகிவிடுகிறது. பொதுவாக சோற்றை உணவாகக் கொண்டிருப்பவர்களுக்கு இது சாத்தியமே.. (நாம் தான் இதில் முதல் நிலை).. 

சில நாட்களாக, மருத்துவ மனையில் மாமியோடு இருந்த போது, அக்கம் பக்கத்தில் உள்ள நோயாளிகளிடம் சென்று உரையாடுவேன்..அவர்களின் அனுபவங்கள் படிப்பினையான இருந்த போதிலும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். 

அதில் ஒருவருக்கு கடுமையான சக்கரை வியாதி, வயது 60க்கு மேல். கண் பார்வையில் கோளாறு, திடீர் மயக்கம், உடலில் நடுக்கம் என பல பிரச்சனைகள்..! கால்களைக் காண்பித்தார், மூன்று விரல்கள் இல்லை, புண் தொல்லையால் எடுத்தாச்சு. என்றார்.

உடனே, எனக்கு ஒரு கேள்வி வந்தது.. அதாவது சக்கரை வியாதி வந்தாலே, கால்களில் தான் பிரச்சனைகள் வருகின்றன (பெரும்பாலும்) நான் பார்த்தவரை.. விரல்கள் நீக்கம், முட்டி வரை கால் எடுப்பது, வலது கால் முடிந்து பிறகு இடது காலுக்குப் பரவுவது என.... இப்படியே!

சரி, அந்த புண்ணால் தான் கால் விரல்களோடு, கால்களையும் சேர்த்து எடுக்கும் இக்கட்டான சூழல் உருவாகிவிடுகிறதே, அந்தப் புண் கால்களில் எப்படி ஆரம்பமாகிறது, என்ற கேள்வியைகேட்டேன்..

ஒரு அறிகுறியும் காட்டவில்லை, கால் சுண்டு விரலில் கருப்பாக, கட்டியாக, மருவு போல் ஒரு சதை வீக்கம் தென்பட்டது, அது ஒருநாள் அது கொஞ்சம் நமநமன்னு அரிப்பு எடுத்தது, சொரிந்தேன், பிறகு அது கொப்பளமானது, சீழ் வடிந்தது.. அது இவ்வளவு பெரிய பிரச்சனையில் கொண்டு வந்து விட்டுவிட்டது.. அப்போதுதான் தெரியுமாம், அவருக்கு சக்கரை வியாதி மிக மோசமாக உள்ளது என...!

எது எப்படியோ, கால்கள் எப்போது சுத்தமாக இருப்பது அவசியம். சிறிய பிரஷ் வாங்கி வைத்துக்கொண்டு குளிக்கும் போது, கால்களை நன்றாக தேய்த்து சுத்தமாக குளிக்கவேண்டும், ஈரமில்லாமல் துடைத்து, எண்ணெய் அல்லது லோஷன் கொண்டு பூசிவிடவேண்டும். கால்கள் ரொம்ப சுத்தமாக இருப்பது அவசியம், ஏன்னா, கால்களைக்கொண்டு எங்கு என்ன வியாதி என்பதை அறிந்துகொள்ளலாம்.. முடிந்தால் மாதத்திற்கு ஒரு முறை கால் மசாஜ் செல்லலாம்.. இது மிக அவசியம்.. அவரே சொன்னார். ஏற்றுக்கொளலாம் அனுபவசாலி சொல்வது பொய்த்துப்போகாது

சென்னைக்குச் சென்று வந்தோம்..

ப்பீ..ப்பீ..ப்பீ
போம்..போம்..போம்..
பீம்..பீம்..பீம்
ஙோங்..ஙோங்..ஙோங்..
கீங்..கீங்..கீங்..
ஹோங்..ஹோங்..ஹோங்..

வியாபாரம்

இறைவன்
நல்ல மாடல்...
அன்று தொட்டு

அபிஷேகம்

குப்பைகளின் அர்ச்சனைகளோடு
அறிஞர் பெருமக்களின் 
அழகான ஓவியங்கள் 
தெருவோர சுவர்களில்

எங்கும் நீ

விமானம்
அதன் கீழ் வென்மேகம்
பார்த்தேன் ஒரு புள்ளியில், நீ...

விரக்தி

காத்திருப்பு 
பிடிக்கவில்லை
காதலும் 
தேவையில்லை.

அன்பு

அன்பை எதிர்ப்பார்த்து
நகரும் பொழுதுகள்
நரகமாகவே

பயணம்

நேற்று கிளம்பவேண்டியது
இன்று கிளம்புகின்றோம்
ஊருக்கு..!

ஹைக்கூ

விளங்காத கதை

நம் கதையாடலில்
மறந்து போன பாத்திரங்களின் 
பெயர்களை நினைவுக்கூறவே
நான் உன்னருகில்
’உங்ங்’ கொட்டிக்கொண்டு

அன்பானவரின் வாழ்த்து

நான் இல்லாத சமயங்களில்
எங்கேயோ விழுந்த
உன் வசீகர 
வாழ்த்துகளை
தேடித்தேடி தொய்வடையும் 
என் பொழுதுகள்..

தீபாவளி ஒன்று கூடல்

’’நான் உனக்கு ‘மாமா’! ”
’’நான் உனக்கு ‘அண்ணி’!’’
’’மரியாதை கொடு....’’
’’நீ முதலில் கொடு’’
’’கிழவியாகும் வரை.. பெயர் வைத்துக்கூப்பிடுவியா?’’
’’நான் கிழவி என்றால், நீ கிழவன்’’

ஒத்த வயது கொழுந்தனாரோடு..
இன்னும் ஓயாத உறவு முறை போராட்டத்தில்
ஓடி மறைந்த தீபாவளி..

விரையம்

சொட்டு சொட்டாய் வடியும் நீர்
எதிலும் மன லய்க்காமல்
எதையோ தூண்டிவிட

மேடைப் பட்டாசு

இது, நமது பண்டிகை இல்லை
சொன்னவர் வீட்டுப்பசங்க
வெடித்தார்கள் நீண்ட சரவெடி

ஓய்விற்குப்பிறகு

பத்து நாள்களுக்குப்பிறகு
பவுடர் பூசும்
பழைய வாழ்க்கை
முலை
மூலை
மூளை
முளை

குறிலிலே நான்...
அசுத்தம் புத்தகத்தில் இல்லை..என் மனதில்

மனதிலும்

அழகாய்தோன்ற 
எல்லா குப்பைகளையும் 
மறைத்து வைக்க வேண்டியுள்ளது..
நம் வீட்டில்

துயில்

துயில் எழுந்த 
மறு வினாடி 
மனதிற்குள் ஆரம்பமாகிறது 
உன்னுடனேயான தர்க்கம்... 
உன்னை மட்டும் ’மிஸ்’ பண்ணுவதால்

நகைச்சுவை

சிரிக்காமல்
உனது பக்கங்களை
புரட்டமுடியவில்லை.! 
அது நகைப்புக்குரியதல்ல
என்பது தெரிந்த போதிலும்.!

கவரும் கிறுக்கல்

பொட்டு வைத்து. 
கோடு இட்டு! 
காதுமடகள் வரைந்து? 
நட்சத்திரப் பூக்களை மாலையாக்கி** 
ஆடையிட்டு {[]} 
அடைக்கலம் கொடுத்து ()
சாய்ந்து சரிந்துக்கொடுத்து//
கூட்டிக்கழித்து + -
கன்னாபின்னான்னு கோலமிட்டு அ ஆ இ ஈ உ ஊ
நடுநடுவே இதையும் #@&^
அலங்கரித்துமா இன்னும் உன்னைக் கவரவில்லை!!??

முதலுதவி

அம்புலன்ஸில் உள்ளவர்களை
காப்பாற்ற வருகிற்து
இன்னொரு அம்புலன்ஸ்

கணவரின் பிறந்தநாள் பரிசு

விடியும் பொழுதுகள்
வித்தியாசமில்லாமல்
இன்று மட்டும், ஒரு முத்தத்துடன்..

ஜெயராமனின் பிறந்தநாள் பரிசு

எளியொன் எழுதும் சிறு ஓலை... 
ஜனனமும் அதனின் 
நினைவும் மனதில் 
பதிந்த ஆணியாய்..

நின்னின்
ஜனன நாளில்
உனை வாழ்த்த
ஒரு வாய்ப்பை
கொடுத்தமைக்கு
நன்றிகள் பல.... 

கேள்விக்குறியாய்

எதேதோ புலம்பல்கள்
எல்லாம் அறுவைகள் போல
எனக்கே தெரியாமல்
நகலும் நிழலாகி நிஜமானது 
கவிதைகளாக...... நானா????

இதுவும் விழிப்பு நிலையல்ல
கடந்து போகவிருக்கும்
விடியா பொழுதின் 
தொடக்கத்தின் சுடர்விளக்கு

எதிர்ப்பார்ப்புகளின் பின்னணியில்
எழுத்துக்களின் முழுவடிவமும்
ஏக்கத்தின் வெளிப்பாடாய்....
மீண்டும் எதிர்ப்பார்ப்பாய்..
நானா எழுதியது?

இந்த விச்சித்திரமான
பாதையில்
எனக்கு எப்படி வழி கிடைத்தது?

நானோ குதிக்கவில்லை
யாரோ தள்ளியுள்ளார்கள்
என்னை என் படைப்புக்குள்..

காகிதங்கள் ராக்கெட் ஆனது போல்
எனது படைப்புகளில்
உலா வருகிறேன் விண்ணில்

எனது படைப்புகளின்
மீள் பார்வையில்......!!!!!!!!!!
யார் என்னை இப்படியெல்லாம்
எழுத வைத்தது????????????????

நான், என்னை 
தொலைத்து 
எழுதப்பட்டவைகளில்
உயிர் பெற்றேன்

எப்படி
எப்படி
எப்படி

.
!
?

பழையன கழிதல் (+)


வேலையிலிருந்து
கோவிலில் இருந்து
கடையில் இருந்து
சந்தையிலிருந்து
பசங்களைப் பள்ளியில் இருந்து
நூல் நிலையத்திலிருந்து
புத்தகக்கடையிலிருந்து
டீயூஷன் வகுப்பிலிருந்து
ஆசிரியர் இல்லத்திலிருந்து
திரையறங்கிலிருந்து
மருத்துவமனையிலிருந்து
பேரங்காடியிலிருந்து
உறவுகளின் இல்லத்திலிருந்து
திருமண நிகழ்விலிருந்து
விரைவு உணவகத்திலிருந்து
ரயில் நிலையத்திலிருந்து
ஏர்ஃபோட்டில் இருந்து................

பலமுறை ஓயாமல் ஓடிக்கொண்டிருந்த,
என் பழய இல்லத்திற்கு
நேற்று சென்று வந்தேன் புதிதாக..........!
விருந்தாளியாய் வந்து ஒட்டிக்கொண்டது,
மனபாரம்....!

பனி

மலைகளில் மரங்கள்
பனியை 
கரியமில வாயுவாக

முழிக்காதே

நான் படித்தால்
நீயும் படி!

நான் இட்டால்
நீயும் இடு!

நான் கொடுத்தால்
நீயும் கொடு!

நான் எடுத்தால்
நீயும் எடு!

நான் வைத்தால்
நீயும் வை!

நான் செய்தால்
நீயும் செய்!

நான் பிடித்தால்
நீயும் பிடி!

நான் முடித்தால்
நீயும் முடி!

முழிக்காமல்...

ரசனை

இத்தருணத்தில்

நான் ரசிப்பவையும்
ரகசியமாக ரசிப்பவரையும்

என் ரசனையையும்
ரசனைக்குரியவரையும்

வெளியே சொன்னேனென்றால்
படுகேவலமாக நோக்கப்படுவேன்
காரணம், எல்லோருமே மனசாட்சிக்கு
விரோதமானவர்கள் தாம்...

அரசியல்

எய்தவன் இருக்க
அம்பை நோவதேன்?
அம்பையும் நோகா
ஏவியவன் இருக்க..!

உதடு உதடு

                                 
லிஃப் ஃக்ளோஸ்
லிஃப் லைனர்
லிஃப் ஷையின்
லிஃப் ஆயில்
லிஃப் ஃபல்ம்
லிஃப் ஸ்டேயின்
லிஃப்ஸ்டிக்..

வெறும் அலங்காரத்திற்கு அல்ல
வேர்க்காத இடத்தின் பாதுகாப்பிற்காக!
நான் பயன்படுத்துபவை..