திங்கள், நவம்பர் 21, 2011

’மெய்’ காதல்

தினமும் சூட்சுமமாக...

இரவிலும் பகலிலும்
தழுவும் போர்வையாகவும்
அணைக்கும் தலையணையாகவும்
உருண்டு புரலும் மெத்தையாகவும்
உன்மடியில் நான்
என்மேல் நீ...

குளியலறையில்
நீராகவும், சோப்பாகவும்,
உரசிக்கொண்டிருக்கும்
நுரையாகவும்
உதறள் கொள்ளும் குளிராகவும்
சுடு நீரின் ஆவியாகவும்
பாத்ரூம் பாடல் வரிகளிலும்
என்னுடனேயே நீ, வருடலாய் ....

என்னை
உராய்ந்துக்கொண்டிருக்கும்
உள்ளாடைகள், உடைகள்
நான் பூசிக்கொள்கிற
உதட்டுச்சாயம்
உன்னை என்னருகே கொண்டுவரும்
உனதும் எனதுமான
என் வாசனைத்திரவியங்கள்
இவைகளில் ஸ்பரிசமாக
எப்போதும், என் வசமாக நீ....

சூடிக்கொண்ட
மல்லியிலும் ரோஜாவிலும்
அதன் மணமாக நீ..

மெயிலாய்
குறுந்தகவலாய்
ரிங்டோனாய்
காதல் கவிதையாய்
அழைத்தாய் தென்றலாய்

இப்படி
எங்கும்
எப்போதும்
எதிலும்
நீ....நீ....நீ..

இருப்பினும் வா
சொல்லிக்கொள்வோம்

நமக்குள்
காதல் இல்லை
காமம் இல்லை
கட்டித்தழுவும் ஆசையில்லை
கலந்து கலவி
கூடிக் குலவி
கரைந்து உருக எண்ணவில்லை

இது வெறும்
நட்பு மட்டுமே என... !!!!!


many more happy retuns of the day

நீண்ட காலம்
வாழச் சொல்லி வாழ்த்தாதே
உன் மனதில் நான் இருக்கும் வரை
வாழ்ந்தாலே போதும்
இந்த ஜென்மம் எனக்கு.