திங்கள், நவம்பர் 29, 2010

சாமிகளும் சாத்தானுங்களும்


 
கூடிய விரைவில்
வாழ்விலும்
அனுபவத்திலும்
என்றுமே..
உணர்ந்திராத
ஒர்
உணர்வைவும்
வலியையும்
விரக்தியையும்
தாள, மீள முடியாத
தனிமையையும்
கொடுக்கக் காத்திருக்கும்............
சில
வேதங்களும்,
வேதாளங்களும்
சாமிகளும்
சாத்தானுங்களும்.





பிராப்தம்


கிடைத்ததெல்லாம்
வேண்டியதுதானா?

தெரியவில்லை...!

நீ கொடுத்ததெல்லாம்...
எனக்கு வேண்டியனவே!


வேண்டுதல்
இல்லாமலேயே!

ஞாயிறு, நவம்பர் 28, 2010

வேள்வி


உன்
கேள்விகளுக்கெல்லாம்
பதில் சொன்னால்...
...
பதிலுக்கு
நான்
கேள்வியாவேன்....?

கவிதையில்


பிடித்தவற்றில் என்னைத்தேடுவேன் பிடிக்காதவற்றில்
...
உன்னைத்தேடுவேன்..!
சாதகமாக இருந்தால் என்னைத்தேடுவேன் பாதகமாக இருந்தால் உன்னைத்தேடுவேன்..!
போற்றினால் என்னைத்தேடுவேன் தூற்றினால் உன்னைத்தேடுவேன்..!
காதல் இருந்தால் நம்மைத்தேடுவேன் சாதல் இருந்தால்...........
உனக்கா இருப்பேன்.

சனி, நவம்பர் 27, 2010

அன்பு

அன்பு என்றால் என்ன? எப்படி வரும்? ஏன் வரும்? எதனால் வருகிறது?

அதிக ஆசை அன்பாகுமா? கண்ணை மறைக்கும் காமம் அன்பா???
...
அன்பு என்கிற பெயரில் போடும் கூத்து எல்லாம் அன்பாகிவிடுமா?

சிரித்து மழுப்பிக்கொண்டே இருப்பவர்கள் அன்பானவர்களா?

சாதுவாக தெரிபவர்கள், அன்பானவர்களா?

மென்மையாக பேசினால் அன்பானவர்களா?

அநாதை அதாரவற்ற இல்லங்களுக்குச் சென்றால், அன்பானவர்களா?

ஆயிரம் உதவாக்கரைகளை நண்பர்களாக வைத்துக்கொண்டு குழைந்துக் குழைந்து பல்லிலித்துக்கொண்டிருப்பதா அன்பு?

பிறர் மனம் புண்படும்படி பேசிவிட்டால் அன்பில்லாதவர்களா???

அன்பைப்பற்றி அதிகமாக அளந்துகொண்டிருப்பர்கள், தயவு செய்து விளக்கம் கொடுங்கள்!!

மற்றவர்கள் சும்மா இருங்கள்..