வியாழன், செப்டம்பர் 27, 2012

விறால் மீன்

விறால் மீன் பற்றிய சில தகவல்கள்.



விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒரு மீன் கிடைத்துவிட்டாலே பெரிய வெற்றிபோல் குதூகலிப்பார்களாம். அடிக்கடி குளம், குட்டை, ஆறு, சேறு என மீன் பிடிக்க அலையும் எங்களின் சக பணியாளர் ஒருவரிடம் விசாரித்தேன். அவருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கு. ஏற்கனவே நிறைய மீன்கள் பிடித்து  வந்து காரிலேயே வைத்துக்கொண்டு சிலரிடம் விற்றிருக்கின்றார். விறால் மீன்களும் இருந்தன. மலிவான விலையில்தான் கொடுத்தார். மலிவாகக் கிடைக்கிறது என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்களும் இறங்கி வந்து வாங்கிக்கொண்டார்கள். நான் வாங்கவில்லை, அதை ஆய்ந்து சுத்தம் செய்வதென்பது அவ்வளவு சுலபமல்ல.  மார்க்கெட்டில் வாங்கினால் அங்கேயே சுத்தம் செய்து கொடுத்து விடுவார்கள்.

சேறு சகதியான இடங்களிலும் அழுக்கடைந்த நீர் தேக்கங்களிலும் தான் விறால் மீன் உயிர் வாழும். வயல்வெளிகளில் அதிகமாகக்கிடைக்குமாம்.

எலிகளைப்போல், நீரின் சேற்றின் உள்ளே உள்ள சில பொந்துக்களில் ஒளிந்துக்கொள்ளும் இந்த விறால் மீன், பார்ப்பதற்கு பாம்பின் தலைபோலவே இருக்கும். ஆங்கிலத்தில் பாம்பின் தலை (Snakehead) என்றே பெயர் வைத்துள்ளனர்.


சாதாரண மீன் பிடிப்பதைப்போல் விறால் மீன்களைப் பிடிக்கமுடியாது தவளையை தூண்டிலில் மாட்டிவிட்டு விறால் மீன்களைப்பிடிப்பார்களாம்.

விறால் மீன்களில் முப்பதுவகைகள் உள்ளன என்பதை கூகுளில் மூலம் தெரிந்துக்கொண்டேன்.

இங்கே மலேசியாவில் விறால் மீன்களின் விலை கிலோ முப்பத்தைந்து ரிங்கிட் (கூடலாம், குறையலாம்). பங்களாதேஷ் மற்றும் நேப்பாள் போன்ற நாடுகளில் இதனின் விலை மிகவும் மலிவாம். சர்வசாதாரணமாக வயல்களில் கிடைக்கும் இம்மீனை பிடித்துக்கொண்டு வந்து தினமும் சமைத்துச் சாப்பிடுவார்களாம். இங்கேதான் (மலேசியா) இதனை பவுன் விலையில் விற்கின்றார்கள் என ஆச்சிரியப்பட்டுப்போகின்றனர் சில வெளிநாட்டு வாசிகள்.

சேற்றில் கிடைக்கின்ற விறால் மீன்கள்தான் சுவை அதிகமாம். தற்போது சூப்பர்மர்க்கெட் மற்றும் சந்தையில் கிடைக்கின்ற விறால் மீன்கள் பெரும்பாலும் குளங்களில் வளர்க்கப்படுபவைகளாம். இவைகளில் அந்த அசல் ருசியை சுவைக்க முடியாது என்கிறார்கள்.

விறால் மீனை உயிரோடு பிடித்துவந்து தரையில் போட்டுவிட்டால், அது துடித்தாலும் நீண்ட நேரம் உயிரோடு இருக்கும் என்பதும் கேள்விப்பட்ட செய்தி.

மண் அல்லது சாம்பல் கொண்டு தூய்மையாகக்கழுவி, புளி நீரில் ஊறவைத்த பிறகுதான் சமைக்கவேண்டுமாம். இல்லையேல் குழம்பு வழவழ கொழகொழவென சுவைகுறைந்து பாழாய் போய்விடுமாம்.


பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்குமென்கிறார்கள் தமிழர்கள். விறால் மீன் குழம்பு தேன்போல் தித்திப்பாக இருக்குமென்று சிலர் சொல்வதையும் கேட்டுள்ளேன். இருப்பினும் சீனர்கள், முழு மீனை அவர்களுடைய மருந்து மூலிகைகளைக்கொண்டு அப்படியே ஸ்டீம் செய்து, சூப்’ஆக சாப்பிடுவதற்குப் பிரியப்படுவார்கள்.



சீனர்கள் மத்தியில் இதனின் சூரணம் மிகவும் பிரபலம். பதனப்படுத்தி பாட்டல்களில் அடைக்கப்பட்ட விறால் சூப் அதிக விலையில் விற்கப்படுகின்றன. மீன் கிடைக்காத போது அல்லது இவ்வகை குளத்து ஆற்று மீன்களை விரும்பிச்சாப்பிடாதவர்கள், அல்லது சைவம் மட்டும் உண்பவர்கள் உடல் நலம் கருதி, இதனின் சூப்’ஐ மட்டும் வாங்கி குடித்துக்கொண்டு, மீன் சாப்பிட்ட முழு திருப்தியில் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையை விதைத்துக்கொள்கின்றனர்.


ஆஸ்த்மா வியாதி உள்ளவர்கள், அடிப்பட்டு தையல் போட்டவர்கள், குழந்தை பெற்றுக்கொண்டவர்கள், அறுவைசிகிச்சை செய்தவர்கள், பெரிய வெட்டுக்காயம் உள்ளவர்கள், வயிற்றில் புண் உள்ளவர்கள் போன்றோர், விறால் மீன்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புண்கள் விரைவாக ஆறும் நோய்கள் குணமாகும் என்கிற நம்பிக்கை பரவலாக இருப்பதால், இந்த விறால் மீன் சாப்பிடும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இருப்பினும் இக்கூற்று அனைத்தும் உண்மைதானா என்பதனை ஆதாரப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக இன்னமும் நிரூபிக்கப்படாமலேயே இருக்கின்றது எனபதும் கூடுதல் தகவலே.






24 கருத்துகள்:

  1. Viraal meen unda thirupthi undanathu...nandri.

    பதிலளிநீக்கு
  2. பார்ப்பதற்கு பாம்பை போல் இருக்கும் இந்த விரால் மீன்கள் அத்தனை சுலபமாக வலையில் சிக்காது இதைத்தான் விலாங்கு மீன்கள் என்று கிராமத்துதிக்கம் சொல்வார்கள் என்று கருதுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலாங்கு மீன்..அப்படியா? நன்றி பகிர்தலுக்கு.

      நீக்கு
    2. விலாங்கு மீன் என்பது இது அல்ல(Eel fish).அது பாம்பு மாதிரி நீளமாக இருக்கும்.வழுவழு என்று இருக்கும்.செதில் இருக்காது.தோல் உளிக்கனும்.ஆனால் விரால் மீனில் செதில் இருக்கும்.விரால் சாப்பிட ரொம்ப சுவையா இருக்கும்.

      நீக்கு
  3. "விரால் மீன்" படித்தவுடன் நான் மீன் பிடிக்க சென்ற கதை ஞாபகம் வந்து விட்டது.அதனை பற்றி ஒரு பதிவே எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுங்கள் சகோ, படிக்கலாம். நன்றி புதிய நட்பே. சேக்காளி புதிய திரைப்படத்தின் பெயர்.

      நீக்கு
  4. பாலகோபாலன் நம்பியார்9/27/2012

    'குதூகலிப்பார்களாம், அதிகமாகக்கிடைக்குமாம், மீன்களைப்பிடிப்பார்களாம், பாழாய் போய்விடுமாம்' என்ற கேள்விப்பட்ட செய்தியோ எதுவோ, அதுபற்றிக் கவலையில்லை! நிச்சயமாக, பல இடங்களில் இருந்தும், பல நபர்களிடமிருந்தும் ஆர்வமிகுதியால் முனைப்புடன் தேடலில் ஈடுபட்டுத் தந்த இந்தத்தகவலே பொக்கிஷம் விஜி. நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உங்களிடமும் கேட்டேன். காலையிலிருந்து இதே வேலைதான்.. கொஞ்சம் கொஞ்சமாக எழுதிமுடித்தேன். நன்றி

      நீக்கு
  5. விறால் மீனைப் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விறாலை விரால் என்று எழுதியிருந்தேன். உங்களின் பின்னூட்டத்திற்குப்பிறகு மாற்றிவிட்டேன். நன்றி சார்.

      நீக்கு
  6. விரால் மீன் கட்டு தூண்டில் மூலம் பிடிப்பார்கள் எங்க ஊரில்.திருச்சி மாவட்டத்தில் மிக அதிகமாக கிடைக்கிறது.இப்பொ பண்ணை முறையில் நிறைய வளர்க்கிறார்கள்.அது சுவை குறைவு.ஆனால் குளம், குட்டை, ஆறுகளீல் பிடிக்கப்படும் விரால் ரொம்ப சுவை..இப்போ கூட சமீபத்தில் நான் மதுராந்தகம் ஏரியில் பிடித்த விரால் மீன் சுவைத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சாப்பிட்டதே இல்லை சார். :(

      நீக்கு
    2. கட்டு தூண்டில் எப்படியிருக்கும்? புதியதாகக் கேள்விப்படுகிறேன்

      நீக்கு
    3. கட்டு தூண்டில் ..கெட்டி நரம்பில் முள்ளுடன் தவளை அல்லது பெரிய மண்புழு கோர்த்து தண்ணீரில் முதல் நாள் இரவே போட்டு விட்டு காலையில் சென்று பார்ப்பர்.பெரிய சைஸ் மீன் என்பதால் நரம்பு கெட்டியாக இருக்கும்.

      நீக்கு
  7. அருமையான சுவைமிக்க தகவல்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..!

    பதிலளிநீக்கு
  8. இதான் ஆத்தா,இத தான்,ஒன் கிட்ட எதிர் பாக்கரம.ரத்தன சுருக்கமா,பொரி கலக்கும்,அடி ஒன்ரு,இடி மாதிரி எரங்கனா எப்புடி இருக்கும்.அந்த மாதிரி
    இருக்கனும் கட்டுரை.இதயே பாலோ பன்னு ஆத்தா.அப்புடியே சுத்து பட்டு,வெலி நாட்டு ஜெனங்க ரசனை எப்படி பட்டதுன்னு கொஞ்ஜம் சேத்துக்கோ.
    புளிச்ச கீரைய வெலி நாடு வாழ் தமிழன் ரசிப்பான்.ஆனா தமிழ் நாட்டு தமிழன் ரசிப்பானா,ரசிக்கர மாதிரி வேனும்னா நடிப்பான்.நீ இன்னா வேனும்னாலும் நெனைச்சுக்கோ,நாங்க காரிய வாதிதான் ஆத்தா.கடராம் கொண்டான்,கலிங்கத்தை வென்ரான்,எப்புடி,இப்புடிதான் ஆத்தா.வெரும்
    கதைய மட்டும் கேட்டுகுனு இருந்தா வேலைக்கு ஆவுமா.சிங்கபூர்லயூம்,மலேஷியாவுலயூம்,மட்டும் தான் மாட்டுகார பசங்க கம்யூட்டர்ல கதை
    பேசுவாங்கன்னு பாத்தியா.நாங்கலும் பேசுவம் ஆத்தா.நான் கூட ஒரு மாட்டுகார பையன் தான்.டேய் செவல காளைய ஏர்ல பூட்ரான்னா,இன்னாடா
    எரு மாட்டுக்கு பக்கத்துல கொண்டுகுனு போய் கட்ர.ஏன் பாட்டன்,பூட்டன்,ரத்தமல்லாம்,அப்புடியே ஓடுது ஆத்தா.ஒரு 4 கட்டைய சேத்து கட்டைய
    அப்புடியே மலேஷியா,சிங்கபூர்னு,ஓரு ரவூண்டு வரலாம்னுகூட நெனைக்கரது.சும்மா பொழுது போவாமதான்.ஏன் தேசம்,ஓன் தேசம்ன்ரான்,சர்வதேச
    கடல் எல்லன்ரான்,எவனாவது கண்ண மூடிகுனு சுட்டு பூட்டான்னா.

    பதிலளிநீக்கு
  9. naanum vaarathula oru naal meen pidika poven ithu varaikum 3 times than viraal matti iruku viraaluku thaniya than thoondil podanum

    பதிலளிநீக்கு