வெள்ளி, டிசம்பர் 09, 2011

புத்தகங்களின் நிலை

ஒரு சிந்தனை:

நான் சிறுவயதிலிருந்து புத்தகங்களைச் சேகரித்து வருகிறேன். (படிக்கிறேன் என்றால் பொய்யாயிடும்) அதனால் பல விதமான புத்தகங்களைச் சேகரிப்பது என் பொழுதுபோக்கு. ஒரு அலமாரியே நிறைந்து விட்டது. இன்னும் இன்னும் நிறைய, கூடிய விரைவில் இன்னோரு அலமாரியைக் கேட்டாலும் வாங்கிக்கொடுப்பார் என் கணவர். 

ஒரு நாள் என் பிள்ளைகளிடம், நான் இல்லையென்றால் இந்த புத்தகங்களை எல்லாம் என்ன செய்வீர்கள்? என்றபோது, எங்களுக்கு எதற்கு? எங்களின் படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்களையே ஆயுள் முழுக்க வாசிக்கவேண்டியிருக்கிறது.!! இதில் நீங்கள் மூட்டைக்கட்டி வைத்திருக்கும் இந்த புத்தகங்களை எங்கே வாசிப்பது?? சேர்ந்தாட்போல் இருவரும் ஒரே மாதிரியான பதிலைச்சொன்னார்கள்.

இது உள்ளபடியே யோசிக்கவைத்த ஒரு சிந்தனை, அன்று.

நாமெல்லாம் உயில் எழுதுவதைபோல், இந்த புத்தகங்களையெல்லாம் என்ன செய்யவேண்டுமென்று எழுதி வைத்துவிடுவது நன்மை என்று தோன்றுகிறது, ஏனென்றால், இப்படிப் பொத்திப்பொத்திப் பாதுகாக்கின்ற புத்தகங்கள், அதனின் அருமை தெரியாத நம் சுற்றங்கள் ஒரு நாள், அவைகளை எடுத்து பழைய காகிதம் வாங்குவரிடம் கொடுத்துவிட்டால்....!!?

என்னுடைய புத்தகங்கள் அனைத்தையும், நூல்நிலையங்கள் எடுத்துக்கொள்ளட்டும்.


ஆனால், இவைகளை நான் வாசிக்கப்போகிறேன் என்று, எனது உடன்பிறப்புகள் வந்து கைகளை வைத்தால் ‘விஷப்பாம்பு’ கொத்த வேண்டுமென்று வேண்டுகிறேன். கொஞ்சங்கூட ரசனையே இல்லாத கூர்கெட்ட ஜென்மங்கள் என் உடன்பிறப்புகள்.

இன்று அசோகமித்திரன் அவர்களின் புத்தகமொன்றினை வாசித்தேன்.  அப்போது இதே கேள்வியை அவரும் கேட்டிருந்தார்.! பெரிய எழுத்தாளர் அசோகமித்திரன்.

domestic violence

பில் கட்டாமல்,
நெட் கட் ஆகியிருக்கு
கரண்ட்’டும் போயிருக்கு
தண்ணீர் பஞ்சமும் வந்திருக்கு
தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கு
பில் கட்ட தாமதாமாகி, பல எச்சரிக்கைக் கடிதங்கள்
இன்னமும் குவிந்தவண்ணமாக..!

உப்பு, புளி, மிளகாய், அரிசி, பருப்பு இல்லாமல் போய்
சமயற்கட்டுக்கு நான் ’கட்’ விட்டதேயில்லை
இருப்பினும், எனக்குத்தான் பொறுப்பில்லை என
ஒயாமல் நடக்கும் உள்குத்து வேலை.!

நேரம்

முகப்பரு எடுக்க
நகங்களை வெட்ட
புருவத்தை சரி செய்ய
மை தீட்ட
பல வர்ணங்களில் உதட்டுச்சாயம் பூசி அழகு பார்க்க
கண்ணாடியில் கேசத்தைச் சரி செய்ய
பெடிக்ஃயோ மெனிஃக்யோ செய்ய
லோஃஷன் போட
அரட்டை அடிக்க
இசை கேட்க
பத்திரிக்கை படிக்க

எனக்கு ஆபிஸ்தான் சிறந்த இடம்.