வெள்ளி, நவம்பர் 18, 2011

கற்றல் கலை

அன்பு வைக்கும் பெண்களை 
நீ என்றுமே சந்தேகித்து 
பொறாமை கொள்வில்லையே..!
நானும், கற்றுக்கொண்டேன்
ஆண்களை மதிக்க 
உன்னைப்போல்..

காதல் கண்ணாமூச்சி

கண்டுபிடிக்கின்றேன் 
என்கிற விஷப்பரீட்சையில் 
மீண்டும் மீண்டும் 
தொலைந்து போவதே 
எனக்கு வாடிக்கை, 
அது உனக்கு வேடிக்கை..

எழுத்து யாசகி

எவனோ ஒருவன் 
எழுத்தை யாசிக்கிறான்
இருட்டில் இருந்து 
அதை நான் வாசிக்கிறேன்...

நீ மட்டுமே என்னுள்

அடை மழை
வெள்ளம்
சுனாமி
பூகம்பம்
எரிமலை
சூறாவளி
சுடும் சூரியன்
உலகமே அழியப்போவுது
உன்னை மட்டும் எப்படி ரசிப்பது?

நானும் குழந்தையே

குழந்தைகள் தினத்தில், 
குழந்தையைக் கொஞ்சுகிறான், 
என்னைத்திட்டுகிறான்.. 
அவன் தான் ஒரு முறை 
என்னையும் குழந்தை என்றான்...

ஒரு உபதேசம்.


ஆடைகளை அயர்ன் செய்த உடனே அணிந்துக்கொண்டால், அந்த ஆடைகள் விரைவாக சுருக்கம் கொள்ளுமாம். அயர்ன் செய்து குறைந்தது ஏழு அல்லது எட்டு மணி நேரம் கழித்து அணிந்துக்கொண்டால், புதிதாக அயர்ன் செய்யப்பட்டது போல், வேலை முடிந்து வீடு செல்லும் வரை அப்படியே மடிப்பு கலையாமல் இருக்குமென்று நேற்று என் தோழி ஆலோசனை வழங்கினாள். 
அய்ர்ன் செய்ய நேரமில்லாததால்,நேற்று யூனிபோர்ம் அணிந்துச் செல்லவில்லை. பிசி..பிசி..பிசி தான், எப்போதுமே!!! :(
உபதேசம் உங்களுக்குத்தான்..நேக்கு அல்ல. நான் உடனே அயர்ன் செய்து,உடனே அணிந்துக்கொண்டு வேலைக்குக் கிளம்பறேன்.. 

எல்லோரும் நல்லவர்கள்

பழைய திரைப்படம்
கிலைமக்ஸ்
விலகும் மர்மங்கள்
போலிஸ் வருவார்
நாம் கைத்தட்டுவோம்
குதூகலமாக..குழந்தைகளாக