பாதைகள் மாறியாச்சு பயணத்தில் வெகுதூரம் வந்தாச்சு எதும் நினைவில் இல்லை... எல்லா சூழலும் மறந்த நிலையில்... துணைப்பயணி மட்டும் எதற்கும் உதவாத சில நினைவுகளை சுமந்துக்கொண்டு நம்மோடு நம்மை உசுப்பேற்ற....
படிக்கும் புத்தகத்தில், பிடிக்கும் பகுதியை.. வட்டமிடுவேன் கோடிடுவேன். நீயும் ஒரு புத்தகம் எனக்கு. மொத்தமாக பிடிக்கும் புத்தகமாக நீ திகழும் போது, கோடுகளையும் வட்டங்களையும் எங்கிடுவேன்.?
சூரியன் இன்னும் வரல மரங்களின் லேசான அசைவு ஏதோ ஒரு பறவையின் கொஞ்சும் குரல் பனியில் நனைந்த ரோஜா வெட்கத்தில் புற்கள் இவைகளை ரசிக்க என்னோடு வா தூக்கத்தை தியாகம் செய்து...