வெள்ளி, டிசம்பர் 02, 2011

சில உணமைகள் நம்மைச்சுற்றி

ஆசைகளைச் சுமந்து சுமந்து
அடக்கி வைத்து, ஆசைகளைத்துறந்த துறவி போல்
காட்டிக்கொண்டு, ஆசைகள் விஸ்வரூபம் எடுக்கும் போது
அதை மறைப்பதற்கு கொடுக்கப்படும் சப்பைக்கட்டுகளின்
உளறல்களின் போது....

ஆணுக்கு, பெண்ணாசை..
பெண்ணுக்கோ, அவன் தன்மேல் ஆசை வைக்க வேண்டும், என்கிற ஆசை
ஆசையால் பல இம்சை.. அணல் மூச்சு, மயக்கம், பெருமூச்சு, ஏக்கம், வெறுப்பு, காமம், கோபம்.. அனைத்தையும் அமுக்கிக்கொண்டு போடும் நாடகத்தில் பலியாகும் சில ஏமாளிகளின் உணர்வுகளின் போது..
கண் ஒரு இடத்தில், பேசுவது ஒரு நிகழ்வை, காது ஒரு இடத்தில், மனமோ வேறொரு இடத்தில்,, நாசமாகும் சூழல். புண்ணியமேயில்லாத உரையாடலில்

ஆளுக்கு ஆள் மாறுபடும் சுயரூபத்தின் வெளிப்பாட்டை
நன்கு அறிந்தும், அறியாததைப்போல, நமது வேடத்தை நாமே வெறுக்கும் போது

சோம்பேறித்தனத்தில் திளைத்து
சொகுசு வாழ்வு வேண்டி
உழைப்பவர்களை உதாசினப் படுத்தி
வெட்டி வேதாந்தம் பேசி
ஊரையும் உறவை கெடுக்கும், உரையாடலின் போது
முகத்தில் அரைந்தாட் போல் பேச இயலாத
தருணத்தில்.....

பெண்ணின் அங்கங்களை அக்கு அக்காக வர்ணித்து
அவர்களின் புடவைகளைக் கிழித்துப்பார்த்து
உள்பாவாடைகளை தூக்கிப்பார்த்து
ரவிக்கைகளுக்கு ரிப்பன் கட்டி
தொப்புழில் கோலி விளையாடி
எழுதிய கவிதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்
கவிஞன்.. பெண்ணே நீ வேசி’ என
அப்படியென்றால் அவன் யார்..? கோபம் தான், ஒன்றுமே செய்யமுடியாமல்..

தமக்குச் செலவில்லாமலேயே,
அடுத்தவர் பணத்திலேயே
அடுத்தவரின் கதையைப் பேச அழைக்கும்
தொ(ல்)லைபேசி அழைப்புகளில்
அடுத்தவரின் நேரத்தை திருடும் போது ..

ஆளைப்பார்த்தா ஒரு பேச்சு
பார்க்கலன்னா ஒரு பேச்சு
தெரிந்தவரிடம் ஒரு மொழி
தெரியாதவரிடன் ஒரு மொழி
ஆண்களிடம் ஒரு குழைவு
பெண்களிடம் ஒரே ஜொள்ளு
வார்த்தை ஜாலங்கள்
காப்பிப் பதிவுகள்
என்னென்னமோ நாடகங்கள்
படிய வைக்க
மேதாவிததனத்தை காட்ட

ஆளை மயக்க போடும் ஆட்டம்,
காரியம் நடக்க போடும் நாடகம்
திரிக்கப்பட்ட கதைகளில் உதாசினப்படும் உள்ளங்கள்
பச்சைச் சிரிப்பும் ஊலைக்கும்பிடும்
பந்தா பகட்டும்
இருப்பதையும் இல்லாததையும்
ஒண்ணுக்குமே உதவாத காரியத்திற்காக
ஏலம் போடும் அவலம்..

காயப் படும்போதெல்லாம் ஆள் தேடி
மருந்திட்டு, காயம் ஆற ஆற கீறல்கள் வேண்டி
சாக்கடையில் விழுந்து..
நாற்றமெடுத்த நாயாய்
மீண்டு வந்து
மீண்டும் முதல் காயமே மேல் என்கிறபோது

திண்பண்டங்கள் மீது தீராத ஆவல்
காட்டிக்கொள்ளாமல் தொடாமல்
ஆளில்லா சமையத்தில் வெழுத்துக்கட்டி
இன்னொரு சுற்றுப் பெருத்து
பருத்திபோல் வெடிக்கக் காத்திருக்கும் போது
அடுத்தவருக்கு அறிவுரை...

கள்ளக்காதலில் தீராத பதிபக்தி
நட்பாம்..
பெண்பிள்ளைகளின் மாதப்போக்கு விவரம்
தமக்கு வரும் வயிற்று வலியின் விவரம்
போடும் ஃப்ராக்களின் அளவு, பாரம், வர்ணம்
குழந்தைகளின் கல்வி தேர்ச்சி நிலை
படுக்கையறை அம்பலம்
அவள் கனவில் இவன்
இவன் கனவில் அவள்
நினைத்தாலே, மணிக்கனக்காக தொலைபேசியில்
நினைத்த மாத்திரத்திலே சாட்டிங் வசதி
குடும்ப நிகழ்வுகளின் கொண்டாட்டங்கள்
அம்பலப்படுத்தி அசிங்கப்பட்டு, சோறு போடுபவனையும்
காவல் காப்பவனையும்
கேவலத்திற்குள்ளாக்கி...
ஆண் நட்பாம்(!) அவளுக்கு, பெண் நட்பாம்(!) அவனுக்கு

பொறுப்பில் இருந்து தவறுவது
அசம்பாவிதங்கள் நிகழும் போது
யாரையாவது குறைகூறுவது
எல்லா அவலங்களுக்கும், கழுதையாய் பொதி சுமக்க
யாரையாவது தேடுவது
சோம்பிக்கிடப்பது
தகுதி குறைந்தாலும்
மேல் நிலையிலே இருப்பதைப் போன்ற நினைவிலேயே வாழ்வதும்..

ஆடு கோழி அறுத்து
சுருட்டு பீடி பீர் குடிக்கும் சாமியை மறைமுகமாக
கும்பிடுவது, சீனன் கோவிலிலும் லாட்டரிக்கு
இரவில் ரத்த தானம் செய்து
கும்மாளமாக இருந்துவிட்டு
யாருக்காகவோ.. நான் சுத்த சைவன் எனும் போது

ஆடி அடங்கி நாடி தளர்ந்து, கூன் விழுந்து முதிர்ந்த நிலையிலும்
கூட, என்னால் முடியுமென்கிற் எரிச்சல் தன்னம்பிக்கையில்
எதுவுமே மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல்
உயிரோடு சாகடிக்கும் போது

இப்படிப்பல உண்மைகள், என்னால் உணர்ந்து உள் வாங்கியும் கூட
அதை வெளிப்படுத்த முடியாமல் தவிப்போடு நாடகத்தின் பாத்திரமாக


நானும்..








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக