வெள்ளி, பிப்ரவரி 17, 2012

மனம் திருந்திவிட்டேன்

மனம் திறந்தேன்
நீ
என்னுள் நுழைய

மனம்திறந்தேன்
உன்னை
என்னுள் வைக்க

மனம் திறந்தேன்
உன்னை
வெளியே விட

மனம் திறந்தேன்
மற்றவருக்கு
இடம் தர

மனம் திறந்தேன்
நான்
உயரே செல்ல

மனம் திறந்தேன்
என்
இருப்பை நிலைநிறுத்த..

மனம் திறந்தேன்
எல்லாவற்றையும்
வெளியேற்ற..
                                            
மனம் திறந்துதான் கிடக்கிறது
என்னை நானே
உணர்ந்த போது

மனம் திருந்திவிட்டேன்..                                                            

6 கருத்துகள்:

 1. மனிதர்களின் மனப்போக்கை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். தன்னை உணரும்போதே ஒருவன் முழு மனிதன் ஆகிறான்.

  பதிலளிநீக்கு
 2. கருத்துறைகளுக்கு Word Verification - ஐ நீக்கி விட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

  பதிலளிநீக்கு
 3. கருத்துறைகளுக்கு Word Verification - ஐ நீக்கி விட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.// புரியவில்லை பாலா. என்ன சொல்றீங்க?

  பதிலளிநீக்கு
 4. மேடம் கமெண்ட் போடும்போது, உங்கள் வலைத்தளம் Word Verification, என்று சில ஆங்கில வார்த்தைகளை டைப் செய்ய சொல்லி கேட்கிறதே.... அதை சொன்னேன். அதை நீங்கள் உங்கள் பிளாக்கர்க்குள் சென்று நீக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி பாலா சார்... முயற்சி செய்கிறேன், முடியவில்லையென்றால் உங்களிடம் வருவேன் மீண்டும்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி பாலா..செய்தாகிவிட்டது. முதலில் என்னால் முடியவில்லை..உங்களிடம் கேட்கலாம என நினைத்தேன்.. முயன்று முயன்று தேர்ச்சியடைந்தேன். :)

  பதிலளிநீக்கு