வெள்ளி, மார்ச் 30, 2012

சில சிதறல்கள்

பரப்ரப்பு

நேரமாகும் போதெல்லாம்
நாற்காலியை விட்டு எழுந்துவிடுகிறேன்
கால தாமததிற்கு
கொடுக்கும்
மரியாதையாய்..

எழுத்து

என் எழுத்து
எனக்கே பிடிக்காமல்
போகிறது.
பிறரின் எழுத்து
அதிகம் பிடித்து விடுவதால்..

கவிதை

ஓய்வுப்பொழுதுகளில்
சாவகாசமாக
வருவதல்ல
அவை பரபரப்பு வேளையில்
உடனே உதிர்பவை

வேடம்

மற்றவர்களுக்கா தைக்கப்பட்ட
ஆடைகளில்
நான் நுழைந்துக்கொள்ளும் போது
எனக்கான கோமாளி
வேடமும்
தயாராகிவிடுகிறது

மூச்சு

உளைச்சலின் போது
வேகமாக ஊதுகிறேன்
யாரை `அணைக்க’
என்பதுதான் தெரியவில்லை..

காதல்

உன்னிடம் கேட்பதற்கு
என்னிடம் ஒரு கேள்வி உண்டு
என்ன பதில் வரும் என்பதை
நானே யூகித்து விட்டதால்
கேள்வியை கிடப்பில் போட்டுவிட்டேன்.
பதில் இதுதான்
``சத்தியமா இல்லை!’’

2 கருத்துகள்:

  1. பரபரப்பு - இங்கேயும் அப்படித்தான்
    எழுத்து - மற்றவர்கள் மாதிரி எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால் என் எழுத்தும் எனக்கு பிடிக்கும்.
    கவிதை-ஓய்வோ பரபரப்போ இது மட்டும் வரவே வராது
    வேடம்-எல்லோருமே அப்படித்தான்
    மூச்சு-நம்மை நாமே அணைத்துக்கொள்ளத்தான்
    காதல் - ஆளை விடுங்கப்பா

    பதிலளிநீக்கு
  2. பரபரப்பு - இங்கேயும் அப்படித்தான் //
    ஏன்னா, பல முக்கியவேலைகள் நமக்காக காத்திருக்கும், பிடித்தவற்றில் அதிக ஈடுபாட்டுடன் மூழ்கும்போது, இந்த நிலை வரும் -எழுவோம், அமருவோம் - கண்கள் மனது எல்லாம் அங்கே, சிந்தனை ஒருபக்கம் நம்மை இழுத்துக்கொண்டிருக்கும். ப்ளாக் எழுதும்போதும், ப்ளாக்கில் எதையாவது ஆர்வமாக படிக்கும் போதும், முகநூலில் உலா வரும்போது, இப்படி நடக்கும்.... :)

    எழுத்து - மற்றவர்கள் மாதிரி எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால் என் எழுத்தும் எனக்கு பிடிக்கும்.// எனக்கும் உங்களின் எழுத்து ரொம்ப பிடிக்கும்.

    கவிதை-ஓய்வோ பரபரப்போ இது மட்டும் வரவே வராது// இங்கும் அப்படித்தான், அதான் இந்த கவிதையை எழுதினேன். :P

    வேடம்-எல்லோருமே அப்படித்தான்// ஆமாம்.

    மூச்சு-நம்மை நாமே அணைத்துக்கொள்ளத்தான்// அரவணைத்துக்கொள்ளவும்...

    காதல் - ஆளை விடுங்கப்பா// வராதோ.?

    வாசித்ததிற்கு நன்றிங்க பாலா சார்.

    பதிலளிநீக்கு