திங்கள், ஏப்ரல் 02, 2012

சொல்லத்தெரியாது எனக்கு

கடினமான முறையில்
சுற்றி வலைத்து
சொல்லத்தெரியாது, எனக்கு

மௌனத்தை மொழிபெயர்த்து
உணர்வுக்கு ஒளியூட்டி
தமிழ் சொற்களையெல்லாம் ஒன்றுதிரட்டி
வாசகங்களை நீட்டி
வாசிப்போரை வாட்டி  
எழுத்துக்களுக்கு உயிரூட்டி
கோர்க்கப்படுகிற உணர்வுகளில்
உடன்பாடு இல்லை, எனக்கு

சிப்பி, முத்து, நத்தை
காற்று, பூ, மகரந்தம்
கடல், அலை, கரை
இலை செடி கொடி
என்றெல்லாம் உவமைகளை அடுக்கி
உணர்வுதனைச் சொல்வதில் என்ன பயன்?

எழுத்து ஜாலம்
சொல் விளையாட்டு
புரியாத வார்த்தைப் பிரவகம்
மொழியைப் புரட்டிப்போடுதல், என
வாசகர்களை கிலி பிடிக்கவைத்து
எண்ணத்திற்கு உருவம் கொடுப்பதில்
இஷடமில்ல, எனக்கு

வானளவு உயர்த்தியும்
நச்சத்திரங்களோடு சேர்த்தியும்
வென்மதியோடு ஒப்பிட்டும்
சூரியனுக்கு நிகராக 
பிரகாசிக்கும் ஒளிப்பிழம்பாக
உன்னைப் பரிகாசிக்கத்து
போலியான வெளிப்பாட்டால்
ஆக்கிரமிக்கத்தெரியாது, எனக்கு

யாரையோ சொல்லி
எவரையோ உதாரணம் காட்டி
எங்கேயோ வந்து
புழு, வண்டு, தேனி, எறும்பு, கரப்பான்பூச்சி என
எதாவது ஒரு உவமையில் நிறுத்தி
சொல்லவந்ததை சொல்லாமலேயே
முற்றுப்புள்ளி வைக்கப்படுகிற
ஜாலமெல்லாம் தெரியாது, எனக்கு

வெள்ளை மனதில்
உதிப்பதையெல்லாம்
ஒளிவு மறைவு இல்லாமல்
அப்படியே சொல்லி பழகியாச்சு

புதிர் போடாமல்
தெளிவாக
நேராகவே சொல்கிறேன்
ஆச்சிரியத்தோடு, என் வினாவை.

‘_________________!?’





2 கருத்துகள்:

  1. ஆகா ஆகா அருமை பின்ன எப்படி தான் சொல்வீர்களோ? சரியீ.............

    வினா எங்க எங்கே எங்கே????

    பதிலளிநீக்கு
  2. @ மனசாட்சி.. நீங்களே போட்டுக்கொள்ளுங்கள், மனசாட்சியோடு.

    பதிலளிநீக்கு