வெள்ளி, ஜூலை 20, 2012

ஒற்றை எழுத்து சொற்கள்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்



இவை எனக்கான சேமிப்பு... (நன்றி ஸ்மிலி பிரபு திருச்சி) 

10 கருத்துகள்:

  1. அறியாததை அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அட ஒற்றை எழுத்திற்கு இவ்வளவு விளக்கம் இருக்கிறதா!

    பதிலளிநீக்கு
  3. எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு
  4. சகோ, இது எனக்கு புதுசு - இம்புட்டு விஷயம் இருக்கோ ஒத்த எழுத்தில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு புதுசு.. தேவார வகுப்பிற்குச்செல்லுகையில் அதன் ஆசிரியர் அடிக்கடி சொல்லுவார் இந்த ஒற்றை சொல் விளக்கம் குறித்து.. எங்கே கேட்பது, அவரின் குரலில் மயங்கிக்கிடந்தோம்.. அவ்வளவு இனிமையாகப் பாடுவார் தேவாரம். நன்றி சகோ.

      நீக்கு
  5. இதில் நிறைய விஷயங்கள் இப்போதுதான் தெரியும். நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்ர்ரா கிண்டல..! :( உங்களுக்குத்தெரியாததா பாலா சார்..?

      நீக்கு