ஞாயிறு, ஜூலை 29, 2012

பாறையும் கரையவேண்டுமே...

புள்ளி இல்லாமல், 
துணை கால் போடாமல்
இடைவெளி இல்லாமல்
பிழையோடு சொல்வதுபோல்
நடித்துவிட்டு
என் ஈகோவை சீண்டிச்செல்கிறது
உன் வாசகம்


%%%%%%


மண்ணில் விதைத்ததுதான் மரமாகுது
என மனமும் விளை நிலமோ
உன் நினைவுகளும் மரமாகுதே..!!


%%%%%%%


பேனா வாங்கினால் 
எழுதிப்பார்க்கின்றோம்
கத்தி வாங்கினால் 
வெட்டிப்பார்க்கின்றோம்
மொன்னையல்ல கூர்`மை’க்காக..!


%%%%%%


என்றோ ஒரு நாள் 
நடக்கவிருக்கும் அசம்பாவிதத்திற்காக, 
ஓயாமல் சிமிட்டிக்கொண்டே இருக்கின்றது; 
ரகசிய காமிரா..


%%%%%%%%


எனக்கு நேரமில்லை என்று சொல்லி 
பாராமுகமாக விலகிச் சொல்லலாம்.. 
என்ன செய்ய; நேரமிருக்கே.!


%%%%%%


எழுந்தவுடன் ஒரு சிக்கல்
சினத்தோடு சில வேலைகள்
படபடப்பு குறைந்தபோது
சமையல்
என் குழந்தைகளுக்கு (செடிகள்)
முடி,நகம் வெட்டுதல்
அவைகளோடு கொஞ்ச நேரம் 
கொஞ்சுதல்
தாழ்வாரத்தில் இறங்கிய 
சூரியனை துரத்திக்கொண்டே
மசாலா, துணிகள் உலரவைத்தல்
கவலை மறக்க ஒரு குட்டித்தூக்கம்
எழுந்து ஒரு கப் சூடான காப்பி
தனிமை மனதிற்கு சுகமளிக்கும் சில
கானங்கள்
ஷவரின் கீழ் அரை மணி நேரம்
வெளியூர் சென்றிருந்த கணவரின் வருகை
உல்லாச பொழுதாக்க
இரவு உலா செல்கிறோம்...
ஞாயிறும் சாய்கிறது..



%%%%%%%


நீ மெழுகாய்
உருகினாலும்
பாறை அது
கரையவேண்டுமே..!?



%%%%%%


புறக்கணிப்போம் 
என்கிற வாசகத்திலும் 
விளம்பரம் தெரிகிறது.


%%%%%%%


தோழியிடம்
தெரிந்த ஒன்றைப் பற்றி
கேள்வியாகக் கேட்பேன்
சொல்லிக்கொடுத்து
பூரித்துப்போவாள்
தோழமையில் நெருக்கம்
அவளைவிட அறிவில்
நான் குறைந்திருப்பது..



%%%%%%%


நன்றி 
பண்பின் வெளிப்பாடுதான்
எனக்கு அது வேண்டாம்
உன்னிடமிருந்து..
நன்றி


%%%%%



9 கருத்துகள்:

  1. அனைத்து கவிதைகளும் அருமை அக்கா!

    பதிலளிநீக்கு
  2. கவிதைகள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  3. சிறப்பாக இருந்தது... என் ஃபேவரைட் எனக்கு நேரமில்லை என்று சொல்லி
    பாராமுகமாக விலகிச் சொல்லலாம்..
    என்ன செய்ய; நேரமிருக்கே.!

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே சூப்பர். ரகசிய கேமரா, நினைவுகள் மரமாகுதே நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  5. நன்றி விச்சு. எல்லாம் உங்களிடமிருந்து கற்றவைதான்

    பதிலளிநீக்கு
  6. ஞாயிறும் சாய்கிறது..//


    அனைத்து கவிதைகளும் மிக மிக அருமை
    குறிப்பாக ஞாயிறும்...
    மனம் கவர்ந்த பதிவுகள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு