வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

விசும்பலோடு....

புகை

கையில் சிகரெட் 
காற்று
வாங்கப் போகிறார்கள்

%%%%%

புகைப்படம்

பலவித ஆடைகளின் மூலம் 
புகைப்பட கருவியின் முன் 
ஒரே முகத்தைக் காட்டிக்கொண்டு
நாம்..

%%%%%%

போ..

உன் மௌனம் 
எதை வேண்டுமானாலும் சொல்லலாம்
நான் புரிந்துக்கொண்டது
போ, வேண்டாம் போ...

%%%%%%

அலசல்

ரகசியம் காப்பவர்கள் 
வளைத்துக்கொண்டால், 
அலசல் என்பது வெட்டி வேலைதான் ..

%%%%%%

காவலன்

என்னைப் போலவே
நீயும்
கண்காணித்துக் கொண்டிருக்கின்றாய்
என்னை

%%%%%%%

பொறி

தட்டுகிற சிறு பொறியை
குறித்து வைக்கவில்லையென்றால்
மறுநொடி அதே போல் 
சிந்திக்க மறுக்கின்றது
மனது..

%%%%%%%%

நீ எங்கிருந்தாலும்
வாழ்த்துவேன்
விசும்பலோடு...

%%%%%

கண்ணா
கண்ணே
கண்மணி
என் கண்மணி..

12 கருத்துகள்:

  1. கண்ணா
    கண்ணே
    கண்மணி
    கவுண்டமணி

    நானும் கவிதை எழுதுவேன்ல அவ்வ்வ்வ்வ்வ்!

    பதிலளிநீக்கு
  2. சிந்தனைத் துளிகள் ஒவ்வொன்றும்
    சிந்திக்கச் சிந்திக்க சாகரமாய் விரிகிறது
    மனம் கவர்ந்த கவிதைகள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார், இவ்வளவு தன்னடக்கமா அமைதியாக வந்துபோகிறீர்களே... உங்களின் கவித்துளிகளின் முன் இதெல்லாம் சும்மா..

      நீக்கு
  3. தீக்கதிர் குமரேசன் அசக்..

    கையில் சிகரெட்
    காற்று வாங்கப்போகிறார்கள்
    புகையை கொடுக்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கோணத்தில் மலர்ந்த சிந்தனை இது. இன்னும் இன்னும் வேறு மாதிரியும் சிந்திக்கலாம்.

      நீக்கு
  4. காற்று வாங்கப்போகிறார்கள்
    வெளியே விடுவது புகை
    உள்ளே வாங்குவது காற்று

    பதிலளிநீக்கு
  5. கையில் சிகரெட்
    காற்று வாங்கப்போகிறார்கள்
    காற்றெல்லாம் புகை

    பதிலளிநீக்கு
  6. ஆஹா..கவிதை நன்றாக உள்ளது. தொடர்ந்து படித்து கருத்து கூறுகிறேன், எனது தளத்துக்கும் வாருங்கள். பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள். நன்றி...
    varikudhirai.blogspot.com

    பதிலளிநீக்கு