வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

சுதந்திர தின வாழ்த்துகள்

கஞ்சி குடித்து
சஞ்சிக் கூலிகளாக
பஞ்சத்தில் அடிப்பட்டு வந்திருந்தாலும்
இனி கெஞ்சிக்கூப்பிட்டாலும்
அஞ்சாமல் நிராகரிக்கும்
பசி பஞ்சமில்லா
ஓர் அற்புத அழகிய ஊரில்
நாங்கள்

எங்கள் மலேசியா..

நாட்டின் வளம் எங்களின் வளமே.. வாழ்க மலேசியா.


5 கருத்துகள்:

 1. புலம் பெயர்ந்து வந்தாலும் - தம்
  நிலம் இழந்து வந்தாலும் = தான்
  வந்த அகம் எனக்குச் சொந்த அகமென‌
  அகமாற உவக்கும் உங்கள்
  உள்ளம் என்னைப்
  பிரமிக்க வைக்கிறது.
  என் கண்களைப்
  பனிக்க வைக்கிறது.

  வாழ்க !


  "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற முதுமொழி மட்டுமல்ல,
  வடமொழிக் கவிதை ஒன்று ஆதி சங்கரரால் இயற்றப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.

  அதன் தமிழாக்கம்.

  " அன்னை என்பவள் என் அபிராமி.
  என்னை உருவாக்கியவனோ பிரமனுக்குமீசன்.
  உற்றமோ சிவனடி தொழுவோர்
  என் தேசமும் மூவலகுமே. "

  கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா நன்றி சார். அற்புதமான தமிழ் உங்களிடம். கவிதையில் ஒரு கவிதை.. பகிர்வுகளுக்கு நன்றி, தொடர்ந்து வாருங்கள், பகிருங்கள்.

   நீக்கு
 2. ஆமாம் இன்று சுதந்திர தினம் நானும் அறிந்தேன் வரிகள் அழகு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சுதந்திர தின வாழ்த்துகள். சென்ற இடமெல்லாம் சிறப்படைய வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு