புதன், செப்டம்பர் 12, 2012

என் நிலை

என் இடத்திற்கு வா
இந்த நிலை புரியும்
இடம் என்பது? 
வயது

இதையும் 
தாண்டிப்போனவர்கள்
என் இடத்திற்கு
இன்னும் பின்னே இருப்பவர்களும்
இங்கே வரலாம்
இங்கே என்பது?
நிலை

இதையும் தாண்டி
இன்னும் முன்னே இருப்பவர்கள்
முன்னும் பின்னும்
இருக்கலாம்
அங்கேயே இருங்கள்
அங்கே என்பது?
??

13 கருத்துகள்:

  1. சர்தான்....

    வச்சேங்க பாரு............... ??

    பதிலளிநீக்கு
  2. கேள்வி கேப்பாங்கன்னு பயந்துதான் நான் ஸ்கூலுக்கு போகிரதையே நிறுத்திட்டு இங்கே சுத்திக்கினு இருக்கேன்... இங்கியுமா? :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ - குறும்பிற்கு அளவே இல்லையா. நன்றி சகோ

      நீக்கு
  3. நல்லபடியா கேள்வி கேட்டலே குதர்க்கமாத்தான் பதில் சொல்லுவோம்..
    இதுல ஒன்னும் புரியாத மாதிரி கேளிவி கேட்டா...வெளங்கிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவேண்டுமென்றால் என் நிலைக்கு வாருங்கள்.. குருவிக்கும் குறும்புதான்..ஹஹஹ.. நன்றி சகோ

      நீக்கு
  4. பதில்கள்
    1. அப்பாடா, வெங்கட் சாருக்காவது புரியுதே..புன்னகை புன்னகை.. நன்றி வெங்கட்.

      நீக்கு
  5. ஆரம்ப வரிகளே கவிதையின் ஆழம் சொல்லுகின்றன.
    வாழ்த்துக்கள் யோசிக்கவைக்கும் வரிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ. வருகைக்கும் வாசிப்பிற்கும். புதிய நட்பு.

      நீக்கு
  6. அருமை உங்கள் இடத்துக்கு நான் வர வேண்டும் கவர்ந்தது என்னை நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோ. நீங்களும் புதிய நட்பே. வருக வருக வணக்கம்.

      நீக்கு
  7. என் இடத்திற்கு
    இன்னும் பின்னே இருப்பவர்களும்
    இங்கே வரலாம்
    இங்கே என்பது?
    நிலை
    வார்த்தைகளை எளிமையாக ஆரம்பித்து உள்ளுக்குள் எதிர்ப்பார்க்காத கேள்விகளை கேட்டு சிந்திக்க வைத்துள்ளீர்கள். தொடர வாழ்த்துக்கள்...
    என்னுடைய வலைத்தளம்
    http://tamilraja-thotil.blogspot.com


    பதிலளிநீக்கு